தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

சுத்தம் செய்வது

சத்யானந்தன்

 

உணவகத்தின்
சுய சேவையிலும்
நேரந்தான் ஆகிறது

களை எடுப்பதும்
சுத்தம் செய்வதும்
கத்தியின்றி ரத்தமின்றி
சாத்தியமில்லை என்றான்

அதற்கு மட்டுமே ஆனதென்றாலும்
தோசைக்கல் மேல்
துடைப்பம்
எப்போது பார்த்தாலும்
நெருடுகிறது

சொல்வதை கவனி
வள்ளல்களையும்
செங்கோல்களையும்
உலகம்
நிறையவே பார்த்தாகி
விட்டது
இன்னும் ஏன்
பத்தில் ஒன்பது
பரிதவிக்கிறார்கள்

இடம் பொருள் ஏவலால்
மௌனம்
நகருமளவு இடம்
பிடித்துத் தரும்

முன்னொரு நாள்
இறுக்கக் கட்டாத
துடைப்பத்தில்
இருந்து சிறு
குச்சிகள்
உதிர்ந்து மேலும்
குப்பையானது

Series Navigationவேனில்மழை . . .மரணம் பற்றிய தேடல் குறிப்புகள் – வெ. இறையன்புவின் இரு நாவல்களை முன் வைத்து..

Leave a Comment

Archives