வேலையத்தவங்க

This entry is part 20 of 26 in the series 13 ஜூலை 2014

“என்னாகாலையிலேயேசட்டையைமாட்டிகிட்டுகிளம்பிட்டிங்க?”

காலைமிதியடியில்நுழைத்துக்கொண்டிருந்தவன்,

”பொறப்படச்சவேகேட்டுட்டஇல்ல: போனகாரியம்உருப்பட்டமாதிரிதான்” என்றேன்.

”ஆமா, ஏதோபொண்ணுபாக்கப்போறமாதிரிதான்சொல்றீங்க; யாராவதுதேடிகிட்டுவந்தாஎங்கபோயிறிக்கிங்கன்னுசொல்லணும்லஅதுக்குதான்கேட்டேன்’ என்றாள்என்மனைவி.

”போனவாரம்நடந்தகூட்டத்துக்குகொஞ்சம்பேருவரல; அதான்ஏன்னுகேட்டுட்டுவரலாம்னுபோறேன்.”

ஞாயிறுதானேவீட்டில்ஏதாவதுவேலைகளைப்பார்க்கலாமேஎன்றஆதங்கம்தான் அவளுக்கு. என்னவேலை? படித்தபுத்தகங்களைஒழித்துஅல்லதுஒதுக்கிவைக்கலாம்; இருசக்கரவாகனத்தைத்துடைக்கலாம்; தூசிபடிந்துள்ளமின்விசிறியைத்துடைக்கலாம்; பூச்செடிகளைச்சுற்றிக்களைஎடுத்துத்தண்ணீர்தேங்கக்குழிபறிக்கலாம்என்பனபோன்றவைதான்.

”கூடஅவங்கரெண்டுபேரும்வராங்கஇல்ல?” என்றுகேட்டவளுக்கு “ஆமாம், ஆமாம்” என்றுபதில்சொல்லியவாறேவெளியில்வந்தேன். காலைநேரக்காற்றில்இருசக்கரவாகனத்தில்பயணிப்பதுமிகவும்சுகமாகஇருந்தது.

மணிஏழாகியும்கூடசிலவீடுகளில்பெண்கள்நைட்டியுடன்வெளியில்வந்துவாசலுக்குத்தண்ணீர்தெளித்துக்கொண்டிருந்தனர். வாசலுக்குச்சாணம்போடும்பழக்கம்சுத்தமாகஇப்போதுபோய்விட்டது. கிராமங்களில்கூடதார்மற்றும்சிமெண்ட்சாலைகள்வந்துவிட்டதால்அங்கும்தண்ணிர்தெளிப்பதேவழக்கமாய்விட்டது. தவிரஇப்போதுமாடுகளேகுறைந்து விட்டதே? மேய்ச்சல்தரைகளெல்லாம்கட்டிடங்கள்ஆகிவிட்டன. பால்பாக்கெட்பழக்கமாகிவிட்டது.

வேகமாககிரிக்கெட்மட்டையையும்ஸ்டம்ப்குச்சிகளையும்தூக்கிக்கொண்டுஎதிரேசிலசிறுவர்கள்ஓடிவந்தனர். வேகத்தைசற்றுக்குறைத்தேன்.

இவர்களுக்குப்பம்பரம், கிட்டிப்புள், போன்றவைஎல்லாம்தெரியவேதெரியாதுஎன்றுஎண்ணினேன். பழையபாரம்பரியவிளையாட்டுகள், உடை, உணவுமொழிஎல்லாமேமாறிவிட்டன. இதுஎங்கேபோய்முடியும்என்பதைநினைத்துப்பார்த்தால்அச்சமாகத்தான்உள்ளது.

’அவங்கரெண்டுபேர்’ என்றுஎன்மனைவிகுறிப்பிட்டவர்களில்ஒருவரானகதிரவன்வீட்டின்முன்னால்வண்டியைநிறுத்தினேன். வாசலில்முனைவர்கதிரவன்எனும்பெயர்ப்பலகைஅழகாகஇருந்தது. அவர்தான்எங்கள்இலக்கியஅமைப்பின்செயலாளர்; நான்தலைவர்.

சத்தம்கேட்டுவெளியில்வந்தவர் ”என்னபோலாமா?” என்றுகேட்டுவண்டியின்பின்னால்உட்கார்ந்தார்.

”அவர்கிட்டபேசிட்டிங்களா?” என்றுகதிரவன்கேட்க ”பேசிட்டேன், அவர்வீட்டுவாசல்லவண்டிலேதயாராஇருப்பாரு” என்றுபதில்சொல்லியவாறேவண்டியைக்கிளப்பினேன்.

இப்போதுகதிரவன்கேட்டதுஎன்மனைவிசொன்னஅவங்கரெண்டுபேரில்இரண்டாவதுநபரானசிவராமன்என்பவர். தனியார்நிறுவனத்தில்பணியாற்றும்அவரும்நல்லஇலக்கியஆர்வமுள்ளவர். சிறந்தவாசகர்அவர்தான்எம்அமைப்பின்பொருளாளர்.

நான் ஓய்வு பெற்ற ஆசிரியன். ஓர் தமிழ் இலக்கிய அமைப்பை நடத்தி வந்தோம். மாதமொரு கூட்டம். தமிழில் உள்ள எல்லாத் தளங்களையும் தொட்டு நடத்தி வந்தோம் தமிழ் தானாக வளரும்; எங்களால் இல்லை என்பது தெரிந்தும் ஒரு சில பேரை சந்தித்துப் பேசவும்தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்ளவும் இது உதவுமே என்பது தான் அதை நடத்துவதற்கு முக்கிய காரணம். தொடக்கத்தில் அறுபது பேர் வந்தனர். இப்போது முப்பது நண்பர்கள் வருகின்றனர் கடந்த சில மாதங்களாகக் கூட்டம் கொஞ்சம் குறைவு. அதனால் வராதவர்களை சந்தித்துப் பேச முடிவு செய்திருந்தோம்.

சிவராமனும்வரமுதலில்ஓய்வுபெற்றதலமையாசிரியர்கதிர்வேலனாரைப்போய்பார்க்கத்தீர்மானித்தோம். இவர்தமிழால்தலைமைஆசிரியர்ஆனவர்இந்தஅமைப்புதோன்றக் காரணமாய்இருந்தவர்களில்ஒருவர்.

போனதும்நன்குவரவேற்றார். “என்னாமூணுபேரும்சேர்ந்துவந்திருக்கீங்க? ஏதாவதுசிறப்புநிகழ்ச்சியா?”என்றுகேட்டார்.

’இல்லீங்கய்யா; வரவரநிகழ்ச்சிக்குக்கூட்டம்ரொம்பவும்குறைவாத்தான்வராங்க; நீங்ககூடபோனகூட்டத்துக்குவரல; எதாவதுஒடம்புசரியில்லயாஎன்னான்னுபாத்துட்டுப்போலாம்னுவந்தோம்.” என்றேன்நான்.

”அதாவதுஒருமுக்கியமானவேலைவந்துட்டது.”

”எங்கய்யாவெளியூர்ப்பயணமா” என்றுகேட்டார்சிவராமன்.

“ஆமாம்நம்பபொண்ணமாயவரத்திலகுடுத்திருக்கோம்ல; அதப்பாக்கபோகவேண்டிவந்துடுச்சு”

”ஏங்கய்யாஅதைஅந்தவாரந்தான்வச்சுக்கணுமா? அடுத்தவாரம்போகக்கூடாதா?” என்றுகேட்டார்கதிரவன். அவர்சற்றுதுடுக்கானவர். மனத்தில்எதையும்வைத்திருக்காமல்கேட்டுவிடுபவர்.

”எங்கதம்பிஒவ்வொருவாரமும்தான்ஏதாவதுவேலைவந்துடுதே”

”நாமதான்சரியாமூணாவதுவாரம்னுவச்சிருக்கோம்; அந்தவாரத்தைமட்டும்ஓய்வாபாத்துக்குங்கய்யா. நீங்கள்ளாம்வந்துதான்எங்களையெல்லாம்ஊக்குவிக்கணும் “ என்றுசற்றுசலிப்புடன்கூறினேன்நான்.

அடுத்தவரானகார்மேகத்தைப்கிளம்பினோம். போனவாரம்தான்பொண்ணுவீட்டுக்குப்போயிட்டாருஅதுக்குமுந்திமூணுமாசமாவரலியேஎங்கபோயிட்டாராம்?” என்றுகோபமாகக்கேட்டான்கதிரவன்.

கார்மேகம்பகுத்தறிவுவாதி. ஆனால்தமிழ்இலக்கியஅறிவுஉள்ளவர். தொடர்ந்துஆதரவுதருபவர். நிகழ்ச்சிகளுக்குமுன்கூட்டியேவருகைதந்துஇருக்கைகள்அமைப்பதிலெல்லாம்உதவிசெய்பவர்.

இஞ்சியும்ஏலக்காயும்போட்டதேநீர்கொடுத்தார்நான்மேலேமாட்டியிருந்தஅண்ணா,பெரியார்,அம்பேத்கர்,மார்க்ஸ்,சாக்ரட்டீஸ்ஆகியோரின்படங்களைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

”ம், சொல்லுங்கஎன்னசெய்தி?” என்றுகேட்டார்கார்மேகம்.

“ஒண்ணுமில்லங்க, பாத்து ரொம்ப நாளாச்சுல்ல அதான் பாத்துட்டுப் போலாம்னு……..” என்று இழுத்தேன்.

உடனே ”நீங்க நிகழ்ச்சிக்கு வந்தாலாவது பாக்கலாம்; பேசலாம், நீங்க வரவே இல்லையே” என்று நாங்கள் வந்த காரியத்தைப் பேசினார் சிவராமன்.

”ஒங்க அழைப்பு அஞ்சலட்டை வந்தது. ஆனா நீங்க ராமாயணப் பட்டிமன்றங்கள்ளாம் நடத்தறிங்களே? எப்படிப்பா வர்றது?” என்றார் கார்மேகம். எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. நான் கேட்பதற்கு முன்னால் கதிரவன் முந்திக் கொண்டான்.

”ஏங்கய்யா? அதில இலக்கியமே இல்லயா?”

”இருக்கலாம் ஆனா சாமியைத்தானே பேசுவாங்க; அதாலதான்……..” என்று அவர் இழுத்தபோது நான் இடைமறித்தேன்.

”ஐயா, வைணவ மேடைகளில்தான் ராமனை அவதாரமா கடவுளா பேசுவாங்க; நம்ம மாதிரி இலக்கியக் கூட்டங்கள்ள தனி மனிதனா கருதித்தான் விமர்சிப்பாங்க; ஒங்களுக்குத் தெரியாதா?”

”இல்லப்பா ஏதோ வேலை வந்துட்டதுன்னு நெனக்கறேன். அடுத்த கூட்டத்துக்கு அவசியம் வரேன்”

இருதயராசுவைப் பார்க்கபோகும் போது சிவராமன் கேட்டார்.

”கார்மேகம் மூணு கூட்டமா வரல போலிருக்கு”

”ஆமாம், ஆமாம், வரலதான்’ என்றேன் நான்.

உடனே “ எதோ வேல இருக்குன்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே; அதை உட்டுட்டு ராமாயணம் நடத்தறிங்கன்னு ஒரு சாக்கு; போன மாசம் நெல்லிக்குப்பம் அழகரசனைக் கூப்பிட்டு ‘பெரியார் யார்’னு பேசவச்சோம், அதுக்கு முந்தைய மாசம்தான் அண்ணா ‘ஓர் ஆச்சரியக் குறியா? வியப்புகுறியா’னு பட்டிமன்றம் நடத்தினோம்; எதுக்கும் வரலயே அவரு” என்று பொறிந்து தள்ளினான் கதிரவன்.

இருதயராசு மிகவும் இலக்கியத் தாகமுள்ளவர். எல்லா வகையான இலக்கியங்களையும் பேசவும் கேட்கவும் ஆர்வம் உடையவர்.

ஆனால் அவர் கேட்ட கேள்வி எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

”என்னாப்பா இப்ப காலைல நடத்தற மாதிரி மாத்திட்டீங்க?”

”ஆமாங்கய்யா மூணு மாசாமா இரவுல மின்வெட்டு அதிகமாயிடுச்சில்ல? எப்ப வருது; எப்ப போகுதுன்னு தெரியலே; தவிர ரொம்ப தூரத்திலேந்து வரவங்க திரும்பப் போறதுக்குக் கஷ்டப் படறாங்க” என்று நான் பதில் சொன்னேன்.

”ஏங்கய்யா அதுல ஒங்களுக்கு என்னங்கய்யா பிரச்சனை?” என்று கேட்ட கதிரவனுக்கு அவர் சொன்ன விடையால் முகமே மாறிப் போய் விட்டது.

“ஞாயித்துக் கெழமை காலைல தாம்பா நாங்க சர்ச்சுக்குப் போகணும்;தெரியாதா ஒங்களுக்கு? எப்படி அதை விட்டுட்டுக் கூட்டத்துக்கு வர முடியும்;”

அவனே கேட்டான். “மாசத்துல ஒரு ஞாயிறு இலக்கியத்துக்காக ஒதுக்கக் கூடாதா?”

”இல்லப்பா; அத சரியா வராது; யாராச்சும் ஏதாவது சொல்லுவாங்க:”என்று அவர் சொல்ல சலிப்புடன் எழுந்தோம்.

வீட்டில் நுழையும் போதே மனைவி கேட்டாள்.

“என்னாங்க? என்னா சொன்னாங்க”

”ம் ஆளுக்கு ஒரு வேலை இருந்ததுன்னு காரணம் சொன்னாங்க” என்று நான் பதில் சொன்னதும் அவள் சொன்னாள்

“ஆமா, நீங்க மூணு பேருதான வேலையத்தவங்க”

—————————————————————————————————————————————————————————————————————————————————————————–

Series Navigationமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1சாகசக்காரி ஒரு பார்வை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *