வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84
(1819-1892)
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
(That Shadow My Likeness)
(Full of Life Now)
என் நிழல் என்னைப் போலவே !
முழுத் துடிப்புள்ள என் வாழ்வு !
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
1. என் நிழல் என்னைப் போலவே !
என்னைப் போலிருக்கும் என் நிழல்
முன்னும் பின்னும் போகும்,
வாழ்வு முறை தேடிக் கொண்டு
பேரம் பேசி,
பிதற்றிய வண்ணம் !
எத்தனை முறை நான் நிற்ப துண்டு
அதன் புலப் பெயர்ச்சியைப்
பார்த்துக் கொண்டு ?
எத்தனை முறை கேட்ட துண்டு,
நான் ஐயப்பா டோடு
என் நிழல் மெய்யாக
நான் தானா வென்று !
இந்தப் பாடல்களை எல்லாம்
சிந்து பாடும்
என் காதற் பெண்டிர்
மத்தியில்,
சந்தேகிப்ப தில்லை
நான் தானா
என் நிழலென்று !
++++++++++++++++++++
2. முழுத் துடிப்புள்ள என் வாழ்வு !
முழுத் துடிப்புள்ள என் வாழ்வு
கண்ணுக்குப் புலப்படும்
எளிமை யானது மேலும்
சிக்கன மானது,
நாற்பது வயதாகுது எனக்கு,
எண்பத்தி மூன்று வயது
ஐக்கிய
அமெரிக்கா வுக்கு !
நூறு வயதாக வில்லை
இன்னும்.
பன்னூறு வயதைத் தொட
வேண்டும் !
நீ இவற்றைப் படித்தால்
தெரியும் நான்
தெரியாமல் போவேன் என்று !
இப்போது நீ சிக்கனமாய்
என்னுடன் வாழ்ந்து
மகிழ்வாய்.
இருப்பதாய்க் கற்பனை செய்து
என்னைத் தேடி
என் பாடல்களைப் படித்தால்
நானுன் தோழனாய்த்
தோன்றுவேன்.
உன்னோடு நான்
உடனிருப்பதாய் இருக்கட்டும்.
உறுதியாக !
+++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 17, 2014
- இஸ்ரேலின் நியாயம்
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை
- ’ரிஷி’யின் கவிதைகள்
- வில்லும் சொல்லும்
- கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை
- தினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் !
- தளவாடங்கள்
- சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்
- முரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.
- சென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது
- பாவண்ணன் கவிதைகள்
- வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’
- டாப் டக்கர்
- சிநேகிதம்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 13
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3
- திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்
- ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12
- தொடுவானம் 25. அரங்கேற்றம்