This entry is part 5 of 32 in the series 24 ஜூலை 2011

மழையில்
எந்த மழை சிறந்தது?
சிறு தூறலா,
இல்லை அடித்துப்பிளக்கும் மழையா?
வெறுமனே போக்குக்காட்டி விட்டு
போகும் மழையா?
அல்லது
சிறிதும் எதிர்பார்க்காத கணத்தில்
கிளையிலிருந்து
சட்டெனப்பறந்து போகும்
பறவை போல,
தூறிக்கொண்டிருந்து விட்டு
சட்டெனக்கலையும் மழையா?

அல்லது
நேற்றுப்பெய்த மழையா ?
இல்லை, அது கொஞ்சமே பெய்தது.
இன்று பெய்து கொண்டிருக்கும் மழையா?
அது இன்னும் பெய்து முடியவில்லையே
பிறகெப்படி சொலவது ?

அன்று பெய்த மழை,
நேற்று பெய்த மழை
இன்றும் பெய்யும் மழை
நாளைக்கு பெய்தாலும்
பெய்யும் மழை

எதுவானால் என்ன ?
அதுவும் மேலிருந்து
கீழிறங்குவதைப்
பார்ப்பதில் தான்
நமக்கு
எத்தனை ஆர்வம்…?!

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationஏமாற்றம்ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நீங்களும் எழுதலாம்.