’ரிஷி’யின் கவிதைகள்

0 minutes, 8 seconds Read
This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

 

 

1.அபத்த நாடகம்

 

3 + 3 = 6,

4 + 2 = 6,

1+ 5 = 6,

3 x 2 = 6,

6 x 1 = 6,

2 x 3 = 6,

8 _ 2 = 6,

7 _ 1 = 6,

5 + 1 = 6,

4 + 2 =  ஆறொன்றே யெல்லா மென் றாறு மனமே

ஆறென விடையொன்றை உடும்புப்பிடியாய் பிடித்தவாறு

நடைபழகிக்கொண்டிருக்கிறாள் இடும்பியவள்;

சொல் தருமாம் போதைகள் என சொல்லித் திரிகிறாள்.

 

தன்னைத்தானே கணிதமேதையாய்

முன்னிறுத்திக்கொள்ளு மப் பேதை

யின் மொழி பெரும் வாதையாய்.

 

”நச்சுவிதைகள் நமக்கு முன்னிருந்தோரெல்லாம்

எட்டி யுதையுங்கள் அவரை, அவர்தம் கல்லறைகளை

காலில் ரத்தம் கொட்டினாலும் பரவாயில்லை

எப்படியும் உங்கள் கால்கள் தானே

யானபடியால் வளர்ப்பீர் வெறுப்பை” என

அன்றாடம் ஆகாயத்தில் பறந்தபடி

போதித்துக்கொண்டிருக்கிறாள்..

 

’‘என்றும் எழுத்துச் சிற்பி நானே’

என கழுத்துவரை கர்வம் தளும்ப

கிளுகிளுத்துப் பிதற்றி

 

வெத்துவார்த்தைகளைத்தத்துவம்என்றபெயரில்

கைபோனபோக்கில்விசிறியெறிந்தபடி

கிள்ளிப்போட்டகீரையால்வீராங்கனையானவள் தானே

வாராதுபோலவந்தமாமணியானேனென்றறை

கூவுகிறாள், பறைசாற்றுகிறாள்.

 

அதற்கும்ஆமாம்போடத்தயாராய்

‘ப்ரோக்ராம்ட்’ பேர்வழிகள்.

 

நாலுவார்த்தைகள்ஒலிபெருக்கிகளுக்குள்வீறிட்டலறியதால்

தன்னையரும்போராளியெனஅடையாளங்காட்ட

அவள்படும்பாடு அப்பப்போ…..அய்யய்யோ…

 

குய்யோமுறையோவெனக்கூவிக்கூவியே

மெய்யைப்பொய்யாக்கிபொய்யைமெய்யாக்கி

கன ஜோராய்க்கடைவிரித்தாயிற்று….

கறாராய்கலப்படம்செய்தால்

பின்,  கொள்ளைலாபம்தான்!

 

 

 

 

 

 

 

 

 

0

 

 

 

2. அவலக் காட்சிகள்

 

காளியினுடையதாய்க்கனலும்கண்களைச்சுழற்றி உறுத்துப்பார்க்கிறாள் _

ஒருகணமேனும்உலகம்உறைந்துபோகும்என்றஎதிர்பார்ப்போடு..

எதுவும் நடக்கவில்லை.

 

தாள மாட்டாமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்; நியாயங் கேட்கிறாள்.

நேசம் பேசுவதாய் நிறையப் பொய்யுரைக்கிறாள்.

அவற்றை நிஜமென்று ஒப்ப மாட்டாதவர்களை

நீசர்களென்று காறியுமிழ்கிறாள்; கடித்துத் துப்புகிறாள்.

கொடுங்குற்றவாளிகளாக்கி

சொற்களால் அகழப்பட்ட பாதாளச்சிறைக்குள்

கழுத்தைப் பிடித்துத் தள்ளி குப்புற விழச் செய்கிறாள்.

இன்னொருவர் அழிவில் தான் தன் உயர்வு

என்ற அயரா நம்பிக்கையோடு

அன்பின் பெயரால் உன்னை யென்னை

யவனை யவளை யவரை யெல்லா நேரமும்

அடைத்துவைக்கிறாள்; அடித்து நொறுக்குகிறாள்

அடியாட்களின் துணையோடு.

 

கழுமரத்தடியே கதியென்று கிடக்கும் அவளைப் பார்த்தால்

கண்றாவியாக இருக்கிறது.

என்னவொரு வீண்விரய உழைப்பு இது!

 

’ஐயோ பாவம், பிழைப்புக்காக

என்னவெல்லாம் பாத்திரம் ஏற்றாகவேண்டியிருக்கிறது!’

 

அதோ அவளுடைய குரலின், கைவிரல்களின் இடிமின்னலில்

அரங்கமே அதிர்ந்துபோக

அடர்ந்திருண்டு பொழியும் நஞ்சில்

அவளே வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறாள்.

 

’உடைந்திருக்குமோ என்ற பயமில்லை முதுகெலும்பு

இருந்தால் தானே’ என தமக்குள் சிரித்துக்கொள்கின்றனர்

பார்வையாளர்கள்.

 

நல்லவேளையாக அவ்வப்பொழுது திரை கீழிறங்கிக்கொண்டிருக்கிறது.

 

Series Navigation
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *