Articles Posted by the Author:

 • தகவல் பரிமாற்றம்

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன…. இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்… தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி….. மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு வடிவத்தில் மடல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. சில சமயம் வராத புறாவின் ஆயிரங் கால்களில் கட்டப்பட்டிருக்கும் காகிதத் துண்டுகள் அதை எப்படியோ தரையிறங்க வைத்துவிடுகின்றன. சில சமயம் தபால்காரர் வீசியெறிந்துவிட்டுச்செல்லாத சில நூறு பக்கக் கடிதங்களைப் படிப்பதுதான் எத்தனை சுவாரசியமாக இருக்கிறது! […]


 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

      அடிவானப்பறவை தினமொரு சிறகிழையை மட்டுமாவதுஎனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்றுபறவையைக் கேட்பதுபைத்தியக்காரத்தனம்….. உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவையெலாம் தனதாய்க் கருதிஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவெனசதா அண்ணாந்து பார்த்திருந்துகழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்தடவிக்கொண்ட இடத்தில்சுளீரென எரிவதில்இரட்டிப்பாகும் இழப்புணர்வு. இறங்கிவாராப் பறவையின் காலில்அதற்கேயானதொரு மடலைக்கட்டியனுப்பவும் இயலாது. பறவைக்குப் படிக்கத் தெரிந்த மொழியெது? மொழியே மனிதத்துயரின் மூலம் என்றால்வழிமொழியுமோ பறவை? பறவையின் அழகில் மனதைப் பறிகொடுத்ததோடுஅது எனக்கேயெனக்காய் பேசுமோ என்றஎதிர்பார்ப்பும் சேர _ சிறகடித்துக்கொண்டிருக்கும் பறவையின்ஆகாயமோவிரிந்துகொண்டே போகிறது. ஒருபோது சற்றே யப் […]


 • ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

        1.இடமுணர்த்தல்   ஒவ்வொன்றின் இடமும் அளவும் ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம் அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர் என்பதை உணர்த்துகிறது. அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள் எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த மேசைப்பக்கமிருந்த கைப்பிடிகொண்ட நாற்காலி வீட்டிலிருந்த பாட்டிக்கானது. சுவற்றில் அலைபேசியை வைக்கக்கூடிய அகலத்திலிருந்த கைப்பிடிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த நாற்காலி சதா கைப்பேசி வைத்திருக்கவேண்டிய ஸாஃப்ட்வேர் நிறுவன உயர் அதிகாரிப் பிள்ளைக்கானது. பளபளவென்றிருந்த இருக்கை அதிகம் சம்பாதிக்கும் […]


 • வாய்ச்சொல் வீரர்கள்

        ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பல்வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட மேடையில் வெள்ளிக்கேடயம் தங்கவாள் வைரக்கல் பதித்த பிளாட்டினக் கிரீடம் விமரிசையாய் ஒரு மேசையில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. Bouncerகளும் முன்னணித் தொண்டர்களும் ஒருமணி நேரம் முன்பாக தனி விமானத்தில் வந்திறங்கியவர்களும்புடைசூழ வந்த பிரமுகர் மேடையேறி நேராக மைக்கின் முன் சென்று முழங்கத் தொடங்கினார். ”பல்லக்குத்தூக்கிகளும் பல்லக்கிலேறிப் பயணம் செய்பவர்களும் என்ற பாகுபாடு ஒழிக்கப்படுவதே நம் குறிக்கோள்”. படபடவென்று கைத்தட்டல் விண்ணைப் பிளக்க நலத்திட்டங்களைப் பெற […]


 • ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

        நிழலரசர்களின் நீதிபரிபாலனம்   அன்றன்றைய காலைக்கடன்கள் மதியக்கடன்கள் மாலைக்கடன்களை முழுவதுமாய் முடித்தவர்கள் அரைகுறையாய் முடித்தவர்கள் அன்றைய இரவுக்கடன்களில் ஒன்றான இணையவழிக் கலந்துரையாடலுக்காய் அவரவர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டனர். திண்ணையில்லாத வீடுகளிலிருந்தவர்கள் சிறிதும் பெரிதுமான மர, மூங்கில், ப்ளாஸ்டிக் நாற்காலிகளில்…. சிலர் வீட்டினுள்ளிருந்த தூணோரங்களில் சிலர் வெளிவாயிலிலிருந்த மரத்தடிகளில் சிலர் கட்டிலின் தலைமாட்டில் சிலர் காம்பவுண்டை அடுத்திருந்த ஓரளவு பெரிய கருங்கற்களில் அடுத்திருந்த பூங்காக்களின் சிமெண்டுபெஞ்சுகளில்…. எதிலமர்ந்திருந்தாலுமது ஆன்றஅரியணையாய்…. செங்கோலைப் பிடித்திருப்பதாய் கீழே கிடந்த சுள்ளியைக் […]


 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

        மெகாத்தொடரெனும் மகாத்துயர்.   அந்த மெகாத்தொடரின் வறிய குடும்பத்தார் நேற்று 50 லட்சம் டௌரி கொடுக்கச் சம்மதித்து இருபதுகோடிகளுக்கு நகைவாங்கி முடித்திருந்தார்கள். இன்று இன்னொரு தொலைக்காட்சி மெகாத்தொடரில் அந்த இருபதுகோடி பெறுமானமுள்ள நகைகள் களவாடப்பட்டு விட்டன. முதல் தொலைக்காட்சிச் சேனலிலிருந்து ஆறுபேர் ஆளுக் கொரு தீப்பந்தமேந்திக்கொண்டு தெருத்தெருவாக திருடர்களைத் தேடிக்கொண்டு மாட்டுவண்டியில் சுற்றினார்கள். பெயரறியாத் திருடர்களின் பெயர்களை உரக்கப் பாடிக்கொண்டே சென்ற அவர்களை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தது நிலவு. ஒரு திருப்பத்தில் திடீரென எதிர்ப்பட்ட […]


 • ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

        1.ஒரு நடிகையின் விடுதலை   அம்மா அணிந்துகொள்ளச் சொன்ன குட்டைப்பாவாடை அறவே பிடிக்கவில்லை அந்தச் சிறுமிக்கு அடிக்கடி கீழ்ப்பகுதியை இழுத்துவிட்டுக்கொண்டாள் அப்படிச் செய்யாதே என்று அம்மா அடிக்காத குறையாய் கண்களால் உருட்டி மிரட்டினாள். அந்தப் பிரமுகர் சிறுமியை இழுத்து மடியில் அமர்த்திக்கொண்டு மார்போடணைத்தது சிறுமிக்கு அறவே பிடிக்கவில்லை அழுகையழுகையாய் வந்தது. அவளுக்குக் கூச்ச சுபாவம் என்று மகளின் அழுகையை மிகப்பிழையாய் தெரிந்தே பொருள்பெயர்த்தாள் அம்மா. அத்தனையோரமாய் மாராப்பை ஒதுக்கிக் கொள்ளச் சொன்னது ஆறா […]


 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்

    ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்   1.காலத்தால் அழியாத காலரைக்கால் கவிதை!   காலரைக்கால் கவிதையைக் கிறுக்கிமுடித்தபின் காட்மாண்டுவிலொரு அறிமுகவிழாவும் காணொளியிலொரு வர்ணமய வாசிப்பும் கிட்டத்தட்ட ஐம்பதுபக்கங்களில் பட்டுத்துணியில் கட்டப்பட்ட கட்டுரைகள் எட்டும் கிட்டும்படி செய்தும் அவை போதாதென்ற திட்டவட்டமான புரிதலுடன் ஆறுவருடங்கள் கழித்து ஆரம்பமாகப்போகும் தொன்றுதொட்ட முதல் இன்றைய கட்டம்வரை சுட்டும் தமிழிலக்கியத்திற்கான தொலைக்காட்சி சேனலின் ’லோகோ’விலும் அதை இடம்பெறச்செய்ய ஆனமட்டும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார் ஆனானப்பட்ட கவி யவர்.       மோதிரக் […]


 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

        1.மலைமுழுங்கிகள்   மலையை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மழுங்கிய சிறு கற்துண்டமென்றே கூறிக்கொண்டிருந்தார்கள் மாமா அப்பா மாடி வீட்டு அங்க்கிள் மோகனா அத்தை மார்க்கெட்டை ஒட்டியுள்ள தெருவில் குடியிருக்கும் மாத்ஸ் டீச்சர் இன்னும் சில பேர் அவனுக்குத் தெரிந்தவர்கள் இவ்வளவுதான் தெரியாதவர்களில் எத்தனை பேரோ திரும்பத்திரும்பச்சொல்லிச் சொல்லிச்சொல்லி மெல்லமெல்ல அம்மியையே நகர்த்த முடியாதபோதும் சொல்லித்தீராத கதையாய் அதையே சொல்லிக்கொண்டிருக்கும் பெரியவர்களைப் பார்த்து என்றேனும் அந்தக் கற்துண்டத்தைக் கையி லெடுத்துக் கிட்டத்தில் பார்த்திருக்கிறீர்களா […]


 • குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

    ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கண்கள் மின்னும் சின்னக்குழந்தை யது எண்ணிக்கையிலடங்காத வருடங்கள் அதன் வயது. சச்சதுரங்களாகக் கப்பல்களை வரிகளில் உருவாக்கி சில பல மனங்களில் கடல்களைக் கிளர்த்தி யது ஒட்டிக்கொண்டிருந்தபோது போகிறவர் வருகிறவரெல்லாம் கைப்போன போக்கில் சின்னதாயும் சிதறுதேங்காயை வீசிப்போட்டுச் சிதறடிக்கச் செய்வதாயும் குட்டிவிட்டுச் செல்வார்கள். சிலர் முதுகில் தட்டிக்கொடுக்கும் வீச்சில் குழந்தையின் சின்ன தேகம் அதிர்வதைப் பார்த்து அப்படி மகிழ்ந்து சிரிப்பார்கள் ஒரு தேக்கரண்டி நீர் சிற்றெறும்புக்கு நதியா கடலா எப்படித் தத்தளிக்கிறது…. குழந்தையின் […]