ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ என்கிற முழுத் தொகுப்பு நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013’ வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவல், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவல், ஜெயந்தன் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நாடக நூலுக்கான விருது திரு க. செல்வராஜின் ‘நரிக்கொம்பு’, ஏக்நாத் எழுதிய கெடைக்காடு நாவல், புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ ஆகிய நூல்களுக்கும் ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் 2013’ வழங்கப்படுகிறது. சிறந்த கவிதை நூலுக்கான விருதுகள் இரா. வினோத் எழுதிய ‘தோட்டக் காட்டீ’ தொகுப்பிற்கும், ஜான் சுந்தர் எழுதிய ‘சொந்த ரயில் காரி’ தொகுப்பிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கவிதைக்கான சிறப்பு விருதிற்காக திலகபாமாவின் கவிதை தொகுப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 2ம் நாள், சனிக்கிழமை, மாலை சென்னை தி. நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது. மாலை 4.00 மணிக்கு ஜெயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கமும், 5.30 மணிக்கு, ஜெயந்தன் எழுதி ஞாநியின் இயக்கத்தில் ‘மனுஷா மனுஷா’ நாடகமும் நடைபெறும். இரவு 7.00 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.
நூலட்டையும் நூலாசிரியரின் அண்மைய புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் சாத்தியமா?
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் -3 – ஆண்டாள்
- சதுரங்க வேட்டை
- வேலை இல்லா பட்டதாரி
- சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?
- நாய்ப்பிழைப்பு
- முக்கோணக் கிளிகள் – 14
- காது கேளாமை, வாய் பேசாமையைக் குணப்படுத்தும் சிகிச்சை இரகசியங்கள் ( சீனா வெற்றிகரமான தேடல் அனுபவங்கள்)
- மனம் பிறழும் தருணம்
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 13
- மருதாணிப்பூக்கள்
- இப்படியும்……
- தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை
- என்றோ எழுதிய வரிகள்
- தினம் என் பயணங்கள் -27 Miracles and Angels !
- கவிதை
- கவிதாயினியின் காத்திருப்பு
- மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு
- தொடுவானம் 26. புது மனிதன் புது தெம்பு
- பரம வீரர்கள் – கார்கில் வெற்றி தினம்
- அருளிச்செயல்களில் அறிவுரைகளும் அரசளித்தலும்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84
- மன்மதனிடம் அம்புகள் தீர்ந்துவிட்டன
- ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’
- நாடக விமர்சனம் – தெனாலிராகவன்
- திரைவிமர்சனம் – பப்பாளி
- கவனங்களும் கவலைகளும்
- மொழிவது சுகம் ஜூலை 26 2014