அருளிச்செயல்களில் அறிவுரைகளும் அரசளித்தலும்

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

‘இராவணாதி கும்ப கருணர்களைவ தம்செய்யவளைமதில்அயோத்தியில் தயரதன் மதலையாய்த் தாரணி வருகுதும்’என்று தேவர்களுக்கு வரமளித்த வண்ணம் திருமால் ஸ்ரீஇராமபிரானாக அவதரித்தார். விஸ்வாமித்திரருடன் கானகம்சென்று தாடகைவதம் செய்து தவமுனியின் வேள்விகாத்து அகலிகைக்கு சாபவிமோசனம் கொடுத்து, மிதிலை சென்று வில்முறித்து ஜானகியை மணம் புரிந்தார்.
அயோத்தி வந்தபின் தயரதன் தன்மகன் இராமபிரானுக்கு முடிசூட்ட எண்ணி பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தார். ஆனால்மந்தரையின் போதனையால் மனம் மாறிய கைகேயியின் வரங்கள் மூலம் இராமன் வனம் ஏகினார்.
தண்டகாராணியம் வந்த தசமுக இராவணன் சீதாபிராட்டியைச் சிறை எடுத்து அசோகவனத்தில் கொண்டு போய் வைக்கிறான். ஆனால் இராவணன் தம்பியான விபீடணன், ”மாற்றான் மனைவி மீது மையல் கொள்வது பாவம். அது நம் குலத்திற்கு ஏற்றதன்று” என்று பல அறிவுரைகள் கூறுகிறான்.
அப்படி விபீடணன் அறிவுரை வழங்குவதை ஆழ்வார் பெருமக்கள் தங்கள் அருளிச் செயல்களில் அங்காங்கேகாட்டிஉள்ளனர். குறிப்பாக திருமங்கை ஆழ்வார் தம் பெரிய திருமொழியில் பத்தாம் பத்தில் இரண்டாம் திருமொழியில் அதை அருளிச்செய்கிறார்.
இந்த இரண்டாம் பத்தில் உள்ள பாசுரங்கள்எல்லாமே ‘தடம்பொங்கத்தம்பொங்கோ’ என்றுமுடிகின்றன. அதாவது இராம-இராவண யுத்தத்தில் உயிர் விட்டது போக மீதமுள்ள அரக்கர்கள் தங்கள் உயிருக்காக மன்றாடுகிறார்கள். அப்போது அவர்கள்ஸ்ரீ இராமனைப் போற்றிப் புகழ்கிறார்கள். தடம் பொங்கத்தம் பொங்கோ என்பது ஒரு சங்கேதக் குறிப்பாகும்.
‘தடம்’ என்பது மிகவும் உயர்ந்த இடமான ஸ்ரீஇராமனின் பரமபதத்தைக் குறிக்கும். ‘பொங்க’ என்பதற்கு மேல் ஓங்க என்றும், ’தம்’ என்பதற்குத் தங்களுக்குப் பொங்கியிருக்க வேண்டும் என்றும் பொருள்கொள்ளலாம். மேலும் தோற்ற தோல்வியாலே பறையடித்து ஆடுகின்ற கூத்தாகவும் ’பொங்கத்தம்பொங்கோ’ என்பதை கூறுவர். இதோபாசுரம்:
”எஞ்சலில் இலங்கைக்கிறை எங்கோன்
தன்னை முன்பணிந்து எங்கள் கண்முகப்பே
நஞ்சுதான்அரக்கர் குடிக்கென்று
நங்கையைஅவன் தம்பியேசொன்னான்
விஞ்சை வானவர் வேண்டிற்றேபட்டோம்
வேரிவார் பொழில் மாமயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின்
அஞ்சினோம் தடம் பொங்கத்தம்பொங்கோ. [10.2.4]
”எந்தக்குறையும் இல்லாதவனாய், இலங்கைக்கு மன்னனாய், எங்களுக்கெல்லாம் தலைவனாய் இருந்த இராவணனைஅவன் தம்பியான விபீடணன் எங்கள் கண் முன்னேயே பணிந்து நின்று, “இப்பிராட்டி அரக்கர் குலத்திற்கு நஞ்சாகத் தோன்றியவள்; நீஅறிந்துகொள்” என்று அறிவுரை கூறினான். ஆனால் அவன் அதைக் கேட்காததால் தேவர்களின் எண்ணப்படியே நாங்கள் எல்லாரும் துன்பப்பட்டோம். நல்ல மணமுள்ள சோலையில் வளர்ந்த மயில் போன்றவளும், சுருட்சி, நீட்சி, குளிர்ச்சி, அழகு, மணம் எனும் ஐந்து குணங்களும் உடையதாய் இருள்போன்று கருத்திருக்கின்ற கூந்தலை உடைய பிராட்டியைக் கோடுபோங்கள்; நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத் தம்பொங்கோ”
என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.
அப்படிப்பலஅறிவுரைகள் கூறியும் அண்ணன் இராவணன் செவி கொடுத்துக் கேட்காததால்வீடணன் தன் அண்ணனை விட்டு நீங்கினான். இராமபிரானிடத்தில் சரணாகதி அடைந்தான். ஸ்ரீராமன்அவனுக்குஅடைக்கலம்தந்துதன்தம்பியரில்ஒருவராய் அவனை ஏற்றுக்கொண்டார். அத்துடன் இலங்கை அரசையும் அப்போதே அவனுக்கு அளித்தார்.
பெரியாழ்வார்இதைவேறுவிதமாகக்கூறுகிறார். அதாவது கண்ணன் கன்று காலிகளை மேய்க்கக் கோல் கேட்கிறான். ஆனால்யசோதை அதற்கு இசையாமல் அவனையே மாற்றி, ”அக்காக்காய்கோல்கொண்டுவா” என்று சொல்லியதைப் போல் தானும் அருளிச்செய்கிறார். இதோபாசுரம்: [2-6-9]
”தென்னிலங்கைமன்னன் சிரந்தோள்துணிசெய்து
மின்னிலங்கும் பூண்விபீடணநம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற
மின்னிலங்காரற்கோர் கோல் கொண்டுவா,
வேங்கடவண்ணற்கோர் கோல் கொண்டுவா
”காக்கையே! தெற்குப்பக்கம் இருக்கும் இலங்கைக்கு மன்னனாகிய இராவணனின்பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் துணித்துவிட்டு, அவன் தம்பி விபீடணனுக்கு “என்னுடைய திருநாமம் இம்மண்ணுலகில் விளங்கும்வரையில் நீ ஆட்சி செய்வாயாக;” என்று மொழிந்து அரசைத்தந்த அலங்காரவண்ணனான கண்ணனுக்கு திருவேங்கடமலையிலே வாழ்பவனுக்கு ஒரு கோல்கொண்டுவா” என்பதுஇப்பாசுரத்தின்பொருளாகும்.
திருமழிசையாழ்வார்தாம் அருளிய திருச்சந்தவிருத்தத்தில் 33 –ஆம்பாசுரத்தில் இதை அனுபவிக்கிறார். அதாவதுஅவர் தம்பாசுரத்தில் இராவணனின் பற்கள் மின்னல் போல்ஒளிரும்என்கிறார். ”அப்படிப்பட்ட இராவணன்மடியும்படி, தன்அம்புகளைஅவன்மேல்விடுத்து, அவன்தம்பி விபீடணனுக்குஅரசைக்கொடுத்த பெருமானே! நல்லநிறமும்சொற்களும் உடைய நப்பின்னைப் பிராட்டியின் நாயகனே! கல்யாண குணங்கள் உடைய புண்டரீகாட்சனே! எனும்பொருள்தோன்றஅவர்அருளியபாசுரம்இது:
“மின்னிறத்தெயிற்றரக்கன்வீழவெஞ்சரம் துரந்து
பின்னவற்குஅருள்புரிந்துஅரசளித்த பெற்றியோய்!
நன்னிறத்தொரின்சொல் ஏழைபின்னை கேள்வ! மன்னுசீர்
பொன்னிறத்த வண்ணனாயபுண்டரீகநல்லையே?
இவ்வாறு ஆழ்வார் பெருமக்கள் இராவணனுக்கு விபீடணன் கூறிய அறிவுரைகளையும், மற்றும் விபீடணனுக்கு இராமபிரான் அரசு அளித்ததையும் தம் அருளிச்செயல்களில்அனுபவித்திருக்கிறார்கள்.
மேலும் திருமங்கையாழ்வார் திருநாங்கூரில் உள்ள ’திருவண் புருடோத்தமம் எனும் ஐந்தாவது திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது இராவணன்விபீடணனுக்குஅரசளித்ததைக்காட்டுகிறார்.
”கம்பமாகடலடைத்துஇலங்கைக்குமன்கதிர்முடியவைபத்தும்
அம்பிலானறுத்துஅரசுஅவன்தம்பிக்குஅளித்தவனுறைகோயில்
செம்பலாநிரைசெண்பகம்மாதவிசூதகம்வாழைகள்சூழ
வம்புலாம்கமுகோங்கியநாங்கூர்வண்புருடோத்தமே” [4-2-1]
”பெரியகடலில்அணைகட்டி, இலங்கையைஅடைந்து, இராவணனின் பத்துத்தலைகளையும் அம்பினால் அறுத்து அவன் தம்பியான விபீடணனுக்கு அரசளித்த பெருமான்குடி கொண்டகோயில்தான்பலா, செண்பகம், மா, வாழை, பாக்குமரங்களும் குருக்கத்திச் செடிகளும் சூழ்ந்து வாசனை வீசும் திருவண்புருடோத்தமம் எனும் திவ்யதேசத்தில் உள்ளதிருக் கோயிலாகும்”என்பதுஇப்பாசுரத்தின்பொருளாகும்.
இதேபோல திருமங்கையாழ்வார் திருக்கண்ணபுரம் எனும் திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்ய வரும்போதும் இவ்வரலாற்றைஅருளிச்செய்கிறார். அப்போது கஜேந்திர மோக்ஷத்தையும், மாரீசனை வதம்செய்ததையும்காட்டுகிறார்.
“யானையானது முதலையால் துன்பப்பட்டு ஓய்ந்துபோய் நிற்க அந்தயானைக்கு அருள்செய்தவனும், இலங்கைக்கு மன்னனான பத்துக் கிரீடங்கள் உடைய இராவணனின் தம்பியான விபீடணனுக்கு அரசைக்கொடுத்தவனும், மானாக வந்தமாரீசனை அம்பெய்துவதம் செய்தவனுமான பெருமானுடைய திவ்யதேசமே திருக்கண்ணபுரமாகும். அதைநாம்வணங்குவோம்.” என்றுதிருமங்கைமன்னன்அருளிச்செய்கிறார்.
”இலையார்மலர்ப்பூம்பொய்கைவாய்முதலைதன்னால்அடர்ப்புண்டு
கொலையார்வேழம்நடுக்குற்றுக்குலையஅதனுக்குஅருள்புரிந்தான்
அலைநீரிலங்கைத்தசக்கிரீவர்க்குஇளையோர்க்குஅரசையருளிமுன்
கலைமாச்சிலையால்எய்தானூர்கண்ணபுரம்நாம்தொழுதுமே”
[8-6-7] என்பதுஇப்பாசுரத்தின்பொருளாகும்.
. நம்மாழ்வார் ”எம்பெருமானைநான்என்றுகாண்பேனோ” என்று வேண்டும்போது விபீடணனுக்கு அரசுஅளித்ததை எடுத்துக்காட்டுகிறார். நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஏழாம்பத்தின்ஆறாம்திருமொழிப்பாசுரங்கள்முழுதுமே எம்பெருமானின்அழகு, குணம், பெருமை முதலியவற்றைப் போற்றி உன்னை நான் என்று கண்குளிரக் கண்டு அனுபவிப்பேனோ என்று வேண்டுவது போல் அமைந்திருக்கும்.
”இராவணன் ஆண்மைச் சிங்கம் போன்று இருந்தாலும் தீயதொழில் செய்பவனாகவே இருந்தான். பகவான் ஸ்ரீராமன்அந்த இராவணனை அவனின் அரக்கர்குலத்தோடு போரிலே மாய்த்தார். அத்துடன் மீண்டும் அந்த இராவணனின் தம்பியான விபீடணனுக்கே விரி கடல் சூழ்ந்த இலங்கை அரசைக் கொடுத்து அருளினார். பிறகுஅயோத்திமாநகர் திரும்பி பல்லாண்டுகள் ஆட்சிசெய்து அதன்பின் பரமபதம் எழுந்தருளினார். அங்கே அவர் நித்ய சூரிகளின் சிங்கமாக விளங்குகிறார். அப்படிப்பட்டஅவரை நான் என்று காண்பது நெஞ்சமே” என்றுநம்மாழ்வார்அருளிச்செய்கிறார்.
”காண்டுங்கொலோ நெஞ்சமே!கடியவினையேமுயலும்
ஆண்திறல் மீளிமொய்ம்பில் அரக்கன்குலத்தைத்தடிந்து
மீண்டுமவன் தம்பிக்கேவிரிநீர் இலங்கைஅருளி
ஆண்டு தன் சோதிபுக்க அமரர் அரி ஏற்றினையே?”
[7-6-9]
இவ்வாறு ”சீதாபிராட்டியைவிட்டுவிடு, அழிவைத் தேடிக்கொள்ளாதே; என்று விபீடணன் கூறிய அறிவுரைகளையும், அத்துடன் ஸ்ரீராமன் இலங்கை சென்று இராவணனை வதம் செய்ததோடு, அந்த இராவணனின் தம்பியான விபீடணனுக்கே அரசு அளித்த அருஞ்செயலையும் ஆழ்வார் பெருமக்கள் தங்கள் பாசுரங்களில்அருளிச்செய்திருக்கிறார்கள்.
——————————————————————————————————————

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *