தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

தையல் கனவு

Spread the love

இரைச்சலிடும் தையல் இயந்திரம்

ஒருக்கால்

அறுந்துபோன என் கனவுகளைத்

தைக்கலாம்.

ஆனால்

ஊசியின் ஊடுருவலும்

பாபினின் அசைவும்

கனவுகளை மிகக்கோரமாய்

ரத்தம் கசியவைக்கும்.

குருதிப்பெருக்கில் திகிலுற்று

என் பாட்டி கேட்பாள்

“ஏன் உன் கனவுகள்

தைக்கப்பட வேண்டும்?”.

பதில் என்னவோ சுலபம்தான்.

அறுந்துபோன கனவுகளை

ஒரு தையல் தைக்கும்போது

நிர்வாணமான மனதை மூடிக்கொள்ள

ஏதோ ஒன்று

கிடைத்து விடுகிறது.

ரமணி

Series Navigationபழமொழிகளில்….பசியும், பசியாறுதலும்மீளா நிழல்

2 Comments for “தையல் கனவு”

 • ponksamy says:

  அமைதியில் வரும் கனவு-இரைச்சலிடும் தையல் இயந்திரம்.
  தனிமை நிர்வாணம்-மூடியாக உறவு.
  ஊசி,பாபின்,குருதிப்பெருக்கு-உறவின் தொடக்கம்/தொடர்ச்சி.
  தையல் இயந்திரம்-தையல் ஆகிறது.
  ஏன் என கேட்பது பாட்டிகள் அல்ல பேத்திகளே.
  அறுந்த கனவுகள் தைக்கப்பட வேண்டும் என விரும்புவதும்,முயல்வதுமே பாட்டிகள் செயலாக உள்ளது.
  அருமை.வாழ்த்துகள்.
  பொன்.கந்தசாமி.


Leave a Comment

Archives