தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது

அமீதாம்மாள்

Spread the love

 

 

நான் கை கூப்புகிறேன்

அவர் கை கொடுக்கிறார்

…….எனக்குப் புரிகிறது

 

நடக்கிறேன்

கடக்கும் கண்கள்

கணைகளாகின்றன

…….எனக்குப் புரிகிறது

 

மருத்துவர்

பதிக்கும் ஸ்டெத்தோடு

பதிகின்றன விரல்கள்

…….எனக்குப் புரிகிறது

 

கடைக்காரர்

சில்லரை தருகிறார்

சீண்டுகின்றன விரல்கள்

…….எனக்குப் புரிகிறது

 

எடிஎம்மில்

எனக்கு முன்னால் நிற்பவர்

வழிவிட்டு வழிகிறார்

…….எனக்குப் புரிகிறது

 

ரயிலில்

இடம்விட்டு எழுகிறார்

இடிப்பதுபோல் நிற்கிறார்

…….எனக்குப் புரிகிறது

 

நாற்பதைத் தாண்டியவள் நான்

எனக்கே இந்நிலை

உங்களுக்கும் புரியும்

புரியமட்டுமே முடியும்

 

பாம்புகளை விழுங்க

தவளைகளால் முடியாது

சக்தியும்

சகதியுமாய் சமுதாயம்

சகிப்போம்

 

அமீதாம்மாள்

Series Navigation

7 Comments for “பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது”

 • paandiyan says:

  அருமை, அருமை. இதைவிட தெளிவாக , சுருக்கமாக, அருமையாக யாரால் சொல்லிவிட முடியும்…

 • pichinikkaduelango says:

  I will write in Tamil in detail.good

 • கௌசல்யா says:

  இன்றைய சமுதாயத்தில் பெண்களின் நிலையை அழகாகவும் எளிமையாகவும் காட்டியுள்ளார். அருமையாக இருக்கிறது.

 • Lalitha says:

  Are guys in India really in a seriously desperado situation to even grab at old ladies? So pathetic. I hope this poem is not real reflection of the Indian people in India.

 • ஷாலி says:

  //Are guys in India really in a seriously desperado situation to even grab at old ladies? //

  ஒரு முனிவர் காட்டில் குடில் அமைத்து தவம் செய்து தனது இளம் சீடர்களுக்கு குருகுலக்கல்வியும் கற்பித்து வந்தார்.ஒருமுறை சீடர்கள் அனைவரும் தம் குருவிடம், “ ஸ்வாமி! தங்களுக்கோ வயதாகிறது.நமது மடத்தை நன்கு கவனித்துக்கொள்ளவும்,சமையல் செய்வதற்கும் ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினால் உங்களுக்கும் நல்ல உணவு கிடைக்கும். மடமும் கூட்டிப்பெருக்கி தூய்மையாக மாறிவிடும்!, என்று கூறினார்.அதற்க்கு முனிவர்,”நாமெல்லாம் பிரமச்சாரிகள்,மடத்தில் பெண்களை சேர்ப்பது முறையல்ல! என்று கூறினார்.உடனே அந்த இளம் சீடர்கள், ”குருவே எங்களை மன்னிக்க வேண்டும்; நான் குறிப்பிட்டது இளம்பெண்ணை அல்ல;வயதான கிழவியைத்தான் வேலைக்கு வைக்கச் சொன்னேன்,” என்றார்கள்.

  அப்படியா! சரி பார்க்கலாம்: என்று கூறி முனிவர் சென்று விட்டார்.அன்று இரவு சமையல் செய்யும் சீடனைக் தனியாக கூப்பிட்டு, இன்று இரவு சமைக்கும் உணவில் உப்பை அதிகம் போட்டு விடு! குடிக்கும் தண்ணீர் பானையில் நல்ல தண்ணீரை வைக்காமல் கழிவு நீரை நிரப்பி வைக்குமாறு முனிவர் கூறினார்.இதை எவரிடமும் கூறவேண்டாம் என்று உத்தரவிட்டார்.

  காட்டில் விறகு சேகரிக்கச் சென்ற சீடர்கள் அனைவரும் கடும் பசியுடன் மாலையில் மடத்திற்கு வந்தனர். அனைவரும் இரவு உணவை உண்டு முடித்து களைப்பில் உறங்கி விட்டனர்.உணவில் உப்பு அதிகம் இருந்ததால் நாக்கு வறட்சி ஏற்ப்பட்டு நடு இரவில் தூக்க கலக்கத்தில் தண்ணீர் பானையில் இருந்த கழிவு நீரை அனைவரும் குடித்து உறங்கி விட்டனர்.

  மறுநாள் காலையில் முனிவர் அனைத்து சீடர்களையும் அழைத்து இந்த பானையில் இருந்த கழிவு நீரை யார் குடித்தது? என்று கேட்டார்.சீடர்கள் அனைவரும்,குருவே! நள்ளிரவில் தாகம் அதிகம் இருந்ததால் இது நல்ல நீரென்று நினைத்துக் குடித்து விட்டோம்.” என்றனர்.பிறகு முனிவர் கூறினார்,சாதாரண தண்ணீர் தாகம் எடுத்தாலே உங்களால் நன்னீர்,கழிவு நீர் வித்தியாசம் தெரியாமல் குடிக்கிறீர்கள்.ஆனால் “அந்த” தாகம் வந்து விட்டால் கிழவியும் தெரியாது குமரியும் தெரியாது! என்று கூறி சீடர்களை திருத்தினார்.

 • yousuf rajid says:

  பத்திரிகைகளில் வரும் பாலியல் குற்றங்கள் 5 விழுக்காடுதான். தெரிவிப்பதால் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று பலரும் நினைக்கின்றனர் சமீபத்தில் ஒரு மாது என்னிடம் சொன்ன செய்தி ஒரு துணிக்கடைக்குச் சென்றபோது மிகவும் அறிமுகமான அங்கு வேலை செய்யும் நண்பர் என் முதுகில் கைவைத்து மேலே போய்ப் பாருங்கள் என்று சொல்ல நான் உடனே வெளியாகிவிட்டேன் என்றார் சமீபத்தில் ஒரு நீதிபதி தன் தனிப்பட்ட அறையில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொட்த்திருக்கிறார். இந்தக் கவிதை ஒரே பெண்ணுக்கு நேர்ந்ததாக அர்த்தமில்லை. பாலியல் தொல்லைகள் இப்படித்தான் ஆரம்பிக்கின்றன என்றுதான் காட்டுகிறது. எனக்குத் தெரிந்தவரை கொஞ்சம் நெருக்கம் அதிகமாகிவிட்டால் அவர்கள் பாம்பாகவும் பெண்களை தவளைகளாகவும் கருதிவிடுகிறார்கள். நான் ஒரு ஆண் 66 வயது இது என் அனுபவத்தில் கண்டது. தீவிரமாகச் சிந்தித்தால் இந்தக் கவிதையின் ஆணிவேர் புரியும்

 • Lalitha says:

  பெண் குழந்தைகளைக் கருவில் கொன்று ஆணை மட்டும் கொண்டாடிய சமூகம் இன்று அதற்காக அவஸ்தைப்படுகிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.


Leave a Comment

Archives