தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 செப்டம்பர் 2020

அழியாச் சித்திரங்கள்

சோ சுப்புராஜ்

Spread the love

 

அம்மாவிடம் பால் குடித்து

உதட்டில் மிச்சமிருக்கும் வெண் துளிகளுடன்

விளையாடத் தவழ்ந்து வரும்

நடைபாதைக் குழந்தையை

துள்ளிக் குதித்து வரவேற்கிறது

தெருவில் அலையும்

பசுவின் கன்றொன்று….!

***     ***     ***

கை நீட்டும் பிச்சைக்காரிக்கு

ஏதும் தர அவகாசமில்லாமல்

மின் இரயிலைப் பிடிக்கும் அவசரத்தில்

கடந்து போகிறவர்களுக்கும்

கைகளை ஆட்டிச் சிரிக்கிறது

பிச்சைக்காரியின் தோளில் தொங்கும்

பச்சிளங் குழந்தை……!

***     ***     ***

சோறு குழம்பு கூட்டென்று

மண்ணைக் குழைத்து பரிமாறி

அவுக் அவுக் என ராகமிட்டு

பாவணைகளில் தின்று முடித்து

சிதறி ஓடும்

நடை பாதைக் குழந்தைகள்

அம்மாவிடம் போய்

அழுகின்றன பசிக்கிறதென்றபடி….!

***     ***     ***

செப்பு வைத்து சமைத்து

சிறுகுழந்தைகள் பரிமாறும்

மண் சோற்றை மறுக்காமல்

வாங்கிப் புசியுங்கள்;

நட்சத்திர உணவங்களிலும் கிடைக்காத

அபூர்வ உணவு அது…..!

***     ***     ***

காரை பெயர்ந்திருந்தாலும்

வண்ணங்கள் உதிர்ந்திருந்தாலும்

குட்டிக் குழந்தைகள் குடியிருக்கும்

வீட்டின் சுவர்கள் அழகானவை

அவை

குழந்தைகளின்

கரும்பென்சில் கிறுக்கல்களால்

ஆசீர்வதிக்கப்பட்டவை …..!

Series Navigationதினம் என் பயணங்கள் -36 இதயத் துடிப்பு அறக்கட்டளை நிறுவகம்பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…தந்தையானவள் அத்தியாயம்-3தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்புகனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்தேவதாசியும் மகானும் (2)அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்பாவண்ணன் கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 95முத்தொள்ளாயிரத்தில் மறம்குளத்தங்கரை வாகைமரம்கோணங்கிக்கு வாழ்த்துகள்திறவுகோல்முரண்களால் நிறைந்த வாழ்க்கைஇந்தியாவின் ​ முதல் பௌதிக விஞ்ஞான மேதை​ ​ ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்காந்தியடிகள் – ஓர் ஓவிய அஞ்சலிபாரதியின் காதலி ?வெண்சங்கு ..!பொன்வண்டுகள்ஆங்கில மகாபாரதம்வள்ளுவரின் வளர்ப்புகள்வாழ்க்கை ஒரு வானவில் – 23

Leave a Comment

Archives