தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

மீதம் எச்சம்தான்…

Spread the love

தினேசுவரி , மலேசியா

 

அவசரத்தில் அன்பு பார்த்து

மணம் ஏற்ற தருணங்கள்

தகரங்களாய் மட்டுமே

துருபிடித்து…

நல்ல வேளை நினைவுகள்

நிழலாகவும் புகையாகவும் இல்லை

புதைத்துவிட ஏதுவாய்…

பொன் பித்தளையாகி கறுத்து

கழுத்து வரை சீழ்பிடித்து …

மீந்தது மிச்சம் இருந்து

காய்ந்து போன இரத்த வாடை…

இது வாடகை வாழ்க்கை உயிருக்கு

மட்டுமல்ல உடலுக்கும்தான்…

இது ஆண்மைக்கும் பெண்மைக்குமான

முரண்பாடு அல்ல …

ஆம்பிளைத்தனத்தில்

கீழ்மட்ட செயல்பாடு …

உயர்மட்ட இக்கல்வியை

பள்ளியறை சென்றுதான

படிக்கவேண்டியுள்ளது…

பிறகு பட்டமும் பெற

தொடர்கற்றலாய்

அவசரத்தில் அன்பு பார்த்து

‘மனம’்பரிந்த தருணங்கள்

மீண்டும் மீண்டும் துருபிடித்து…

– தினேசுவரி , மலேசியா

Series Navigation

2 Comments for “மீதம் எச்சம்தான்…”

 • admin says:

  அவசரம் அவசரம்நிறங்களில்இனங்களில்,பொருள்
  தேடலில்
  உறவில்,சமூகத்தில் தனக்கான இருப்பில்,விளம்பரங்களில்,
  அவசரஉணவகத்தில்,குளியலறையில்
  முகமன் கூறிக் கொல்வதிலேன நெடுக ஒரு பக்கம் நமக்குமாக, தொடர
  சமூக, மரபுக் கட்டுமானம் என்று மறைத்துக் கொண்டு சாதிகளில்ஆண்மையில்,குடும்ப கௌரவமென தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது ஒவ்வொரு ஆதிக்கம் வருத்தம்தான் ,பகிர்தலேன்பதர்க்கு மன விசாலம்
  வேண்டும்

  -இனியவன்

 • admin says:

  பரிசோதனை


Leave a Comment to admin

Archives