மிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 22 of 23 in the series 14 டிசம்பர் 2014

1971, டிசம்பர் 14ஆம் தேதி, டாக்கா பல்கலைக்கழகத்தின் புல்லர் சாலையிலிருந்த ஆசிரியர்கள் குடியிருப்பில் குளிரில் காலை துவங்கியது.

கிழக்கு பாகிஸ்தான் ரோட் டிரான்ஸ்போர்டின் புழுதி படிந்த மினி பஸ் அங்கு காலை 8;15க்கு நின்றது. அந்த பஸ்ஸிலிருந்து ஆறு அல்லதுஏழு பேர் இறங்கினார்கள். 16-H என்ற வீட்டின் கதவை தட்டினார்கள்.

”இது சிராஜுல் ஹக் கானின் வீடா?” என்று தெளிவான வங்காளி மொழியில் அங்கிருந்தவரை கேட்டார். மற்றவர்கள் படிக்கட்டில் நின்றிருந்தார்கள்.

ஆமாம் என்று சிராஜுலின் இளைய சகோதரர் கூறினார்.

அவர் உள்ளே இருக்கிறாரா? என்பது அடுத்த கேள்வி.

சம்சுல் குழப்பத்துடன் பதில் சொன்னார். அவர் கீழே இருக்கிறார். டாக்டர் இஸ்மாயிலின் வீட்டில்”

அவர்கள் கீழே சென்று சில நிமிடங்களில் சிராஜுலின் கண்களை கட்டி இழுத்து சென்று மினிபஸ்ஸில் ஏற்றினார்கள்.

serajul-haque-khanடாக்கா பல்கலைக்கழகத்தில் கல்வி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த துணை பேராசிரியர் சிராஜுல் ஹக் கான் வீட்டுக்கு திரும்பவே இல்லை. அவரை போலவெ ஏராளமான முக்கியமான குடிமக்கள், சிறந்த அறிவாளிகள், படித்தவர்கள், பலர் அதே முறையில் கண்களை கட்டி இழுத்து செல்லப்பட்டு, பங்களாதேஷ் சுதந்திரமடைவற்கு சில நாட்களே இருக்கும்போது இதே மாதிரி கொல்லப்பட்டார்கள்.

பாகிஸ்தானின் ஏவலாட்களாக இருந்த வங்காளிகள், குறிப்பாக, அல்-பாதர் Al-Badr பாகிஸ்தானின் ராணுவத்தின் திட்டப்படி, புதியதாக தோற்றமாக இருந்த பங்களாதேஷின் எதிர்காலத்தை கருவறுக்க அதன் முக்கியமான சிந்தனையாளர்களையும், அறிவாளிகளையும் அழித்தொழிக்க முடிவு செய்து, ஏராளமான ஆசிரியர்கள்,எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள் இன்னும் பல தொழில்நிபுணர்களை கொலை செய்தது.

இந்த கொலைகள் நடந்து நாற்பத்து மூண்று வருடங்களுக்கு பிறகும், அந்த அறிவாளிகளின் கொலைகளால் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்படவே இல்லை என்று சிராஜுல் ஹக் கானின் மகன் கருதுகிறார்.

“அந்த கொலையாளிகள் வெற்றியடைந்துவிட்டார்கள் என்றே கருதுகிறேன். நாட்டின் எல்லா தரப்புகளிலும் எல்லா தளங்களிலும் வெற்றிடங்களை உருவாக்கிவிட்டார்கள். அந்த வெற்றிடங்களை நிரப்ப நாம் இன்னும் கடுமையாக முயற்சித்துகொண்டிருக்கிறோம்” என்று எனாமுல் ஹக், சிராஜுல் ஹக்கின் மகன், கூறுகிறார்.

அவரது மகன்களில் மூத்தவரான இவர் தனது தந்தையை கூட்டிகொண்டு சென்றதை கண்ணால் பார்த்தவர் டெய்லி ஸ்டார் பத்திரிக்கையுடன் பேசியபோது நினைவுகூர்ந்தார்.

தனது தந்தையார் வங்காள தேசியவாதத்தில் பிடிப்பு கொண்டவர் என்பதையும் முற்போக்கு சிந்தனையாளர் என்பதையும் கூறினார்.

B3l4kW8CAAAgmifபேராசிரியர் முனீர் சௌத்ரி, முஃபாஸல் ஹைதர் சௌத்ரி, ஷஹிதுல்லா கைசர், செலினா பர்வீன், அப்துல் அலில் சௌத்ரி,பொன்ற இன்னும் பல தலைசிறந்த வங்காளிகள் சிராஜுலின் அதே கதியை அடைந்தார்கள்.

அவர்களது தவறு, வங்காள தேசியவாதத்தின் குரலாகவும், பாரபட்சமான பாகிஸ்தான் அரசாங்கத்தை விமர்சித்ததுமே. தங்களது எழுத்துக்கள், செயல்பாடுகள் மூலமாக பாகிஸ்தான் அரசாங்கத்தை எதிர்த்தார்கள்.

அவர்களுக்கு அருகாமையில் இருந்தவர்களே இந்த அறிவுஜீவிகள் பற்றிய விஷயங்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு தெரிவித்தார்கள். பாகிஸ்தான் ராணுவம், அல் பாதர், அல் ஷம்ஸ் என்ற அமைப்புகளை உருவாக்கி இவர்களை அமைப்பு பூர்வமாஅக கொலை செய்தது.

அல் பாதர் போன்ற அமைப்பில் இருந்தவர்கள் மெத்தபடித்தவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களின் நண்பர்களாகவும் அறிந்தவர்களாகவும் இருந்தவர்கள்.
இஸ்லாமி சாத்ரா சங்கா என்ற அமைப்பு அல் பாதர் அமைப்புக்கு ஆட்களை கொடுத்தது. இது அன்றைய ஜமத்தே இஸ்லாமி அமைப்பின் மாணவர் பிரிவு. இது பங்களாதேஷ் உருவாவதை கடுமையாக எதிர்த்தது.

prof-enamulடிசம்பர் 14, 1971இன் காலையை எனாமுல் தனது அறுபத்தி ஏழு வயதிலும் தெளிவாக நினைவு கூர்கிறார்.

”பால்கனியிலிருந்து என் தந்தையை அவர்கள் கண்களை கட்டி இழுத்து சென்றதை பார்த்தேன்.” எனாமுல் அப்போது டாக்கா பல்கலையில் இறுதி வருட மாணவராக இருந்தார்.

அதே காலையில், இன்னும் ஆறு டாக்கா பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஒரு மருத்துவரும் இவ்வாறு இழுத்து செல்லப்பட்டதை அறிந்தார்கள். அவர்கள் ஜியாசுதீன் அஹ்மது, அன்வர் பாஷா, ரஷிதுல் ஹசன், பைசல் மஹி, அப்துல் கைர், சந்தோஷ் சந்திர பட்டாச்சார்யா, மொஹம்மது மர்துசா ஆகியோர்.

அன்று ஊரடங்கு உத்தரவு இருந்ததால், மாணவர்களால் இவர்களை தேட முடியவில்லை.

டிசம்பர் 16 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது. எனாமுல் தனது தோழர்களுடன் ஒரு வண்டியை எடுத்துகொண்டு கடத்தப்பட்ட அறிவுஜீவிகளை தேட முனைந்தனர்.

முதலில் நாங்கள் முகம்மதுபூர் பிஸிகல் டிரைனிங் காலேஜுக்கு சென்றோம் அங்கிருந்து ராயேபஸார் கொலைக்களத்துக்கு சென்றோம். அங்கு குவிந்திருந்த இறந்த உடல்களில் எங்களது தந்தையாரை தேடினோம்.
பாகிஸ்தான் ராணுவம் கொலைக்களங்களாக பயன்படுத்திய எல்லா இடங்களையும் தேடினோம். பாதுல்லா அருகே இருக்கும் ஆற்றிலும் மிதந்துவந்துகொண்டிருந்த இறந்த உடல்களை நிறுத்தி தேடினோம். எங்களால் அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை” என்று சொன்னார்.

B4voLamCcAAAbCJதந்தையாரின் வகுப்புதோழரான ஒரு என்.எஸ்.ஐ அலுவலர் சத்தார், மபிசுத்தீன் என்பவரின் வீட்டுக்கு ஜனவரி 1972இல் சென்று அவரிடம் கேட்டார். இந்த மபிசுதீன் என்பவரே அல் பதார் அமைப்பின் மினி பஸ்களை ஓட்டியவர்.

புகைப்படங்களை பார்த்ததும், மபிசுதீன் கடத்தப்பட்டவர்கள் மினிபஸ்ஸில் இருந்தார்கள் என்றும் பிறகு B4voLSLCYAAn6lvநடந்ததையும் விவரித்தார்.

கடத்தியவர்கள் இவர்களை மிர்பூர் லோஹர் குளத்துக்கு இழுத்து சென்று அவர்களை அங்கே சுட்டுகொன்று துராக் ஆற்றில் வீசுவதுதான் திட்டம் என்று மபிசுதீன் கூறினார்.
ஆனால், அவ்வாறு செய்யமுடியவில்லை. ஏனெனில் அங்கே ரஜாக்கர்களும் இன்னும் பல அல் பாதர் ஆட்களும் அங்கே ஏராளமான பங்காளிகளை நிறுத்தி வைத்து சுட்டுக்கொல்ல வைத்திருந்தார்கள். ஆகவே அங்கிருந்து திரும்பி மஸார் ரோடுக்கு சென்று அங்கே இருக்கும் மயானத்தில் நிறுத்தி அதற்கு பக்கத்தில் இருக்கும் வயற்காட்டில் சுட்டுகொன்றார்கள்

அந்த இடத்தில்தான் இவ்வாறு கொல்லப்பட்ட வங்காள அறிவுஜீவிகளுக்கான நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
மபிசுதீனின் செய்திக்கு பிறகு அந்த மயானத்திலிருந்து எட்டு உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
நான் என் அப்பாவின் உடலை அவரது பெல்ட்டை வைத்தும், இட்டாலியன் கால்சராயை வைத்தும் அடையாளம் கண்டுபிடித்தேன். அவரது பாக்கெட்டில் அவரது அடையாள அட்டையும் இருந்தது” மற்ற அறிவுஜீவிகளின் குடும்பங்களும் இவ்வாறு அடையாளம் கண்டார்கள்.
டிசம்பர் 22 1971ஆம் தேதிB4voL0KCUAAMOdJ டைனிக் ஆஜாத் பத்திரிக்கை, இந்திய ரேடியோ ஆகாஷ்பானி செய்தி வைத்து பங்களாதேஷ் அரசாங்க செக்கரட்டரி ஜெனரல் ருஹுல் குத்தூஸ் சொன்னதாக, 80 சிந்தனையாளர்கள், அறிஞர்கள், நிபுணர்கள், மருத்துவர்கள் டிசம்பர் 14, 15 தேதிகளில் டாக்கால், சில்ஹைட், குல்னா, பிரஹன்பாரியா இடங்களில் கொல்லப்பட்டதாக அறிவித்தது.

பங்களாபீடியாவின் படி, 991 பல்கலையாளர்கள், 13 பத்திரிக்கையாளர்கள், 49 மருத்துவர்கள், 42 வக்கீல்கள், இன்னும் 16 நிபுணர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது.


சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு
முழு செய்திக்கு
http://www.thedailystar.net/cold-killing-design-55227

 

 

Series Navigationவரலாற்றுப்பார்வையில் -பெரியகுளம்-இரண்டுமுறை தமிழக முதல்வரை தேர்ந்தெடுத்த தொகுதிசாவடி – காட்சிகள் 13-15
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *