தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 நவம்பர் 2018

காணவில்லை

சத்யானந்தன்

 

 

புதர்களும் செடிகளும்

மரங்களும் போய்

 

அழகிய பெரிய பூங்கா

அளவாக வெட்டிய

வரிசையாய்

பூச்செடிகள்

 

விரிந்து பரவாத

வகை மரங்கள்

 

ஒழுங்கு செய்யப்பட்ட

பசும்புல் விரிப்பு

 

கொடிகள் தோரணமாய்

வளைவுகள்

 

மெல்லிய செங்கற்

சதுரங்கள் மேவிய

நடைபாதை

 

ஓரங்களில்

இருக்கைகள்

 

சிறிய தூண்களில்

ஒளிரும் மின்விளக்குகள்

 

பெரியவர் குழந்தைகள்

இளைஞர் ஜோடியாய்

தனியாய்

 

வண்ண வண்ண

ஆடைகளில் எத்தனை

எத்தனை பேர்

 

விரிந்த பெரும்

பூங்காவில்

அவள் மட்டும்

இல்லை

 

அலைந்து திரிந்து

அலசிப் பார்த்து விட்டேன்

இல்லவே இல்லை

அங்கே

வன தேவதை

Series Navigationசிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்தொடுவானம் 53. அன்பு பொல்லாதது.

Leave a Comment

Archives