தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

நிலாச் சோறு

குமரி எஸ். நீலகண்டன்

Spread the love

பௌர்ணமி இரவில்

வெண்மை பொங்க

விசாலமாய் தெரிந்தது

பால்நிலா.

 

வெண் சித்திரங்களாய்

சிதறிக் கிடந்தன

நட்சத்திர கூட்டம்.

 

மொட்டை மாடியில்

சூழ்ந்திருந்த குழந்தை

நட்சத்திரங்களுக்கு

வாய்க்கொன்றாய்

உருண்டை

உருண்டையாய்

சுவையாய் ஊட்டினாள்

நிலாச் சோற்றினை

அற்புதப் பாட்டி.

 

அவளுக்கு மிகவும்

பிடித்த அந்த

சரவணனிடம் கேட்டாள்.

நிலாச் சோறு

எப்படி என்று.

 

மிகவும் சுவையாக

இருக்கிறது என்றான்

கண்களில் நிலா

மின்ன பார்வையற்ற

அந்தப் பேரன்.

 

 

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி

Leave a Comment

Archives