தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

உலகத்துக்காக அழுது கொள்

Spread the love

ஹியாம் நௌர் (பாலஸ்தீன்)
தமிழில்- நசார் இஜாஸ்

இந்த உலகத்துக்காக அழுவதைத் தவிர
உன் சுயநலத்துக்காக அழுது கொண்டிருக்காதே
நீ வாழ்வின் ஓரு புள்ளியே

பல குரூரமானவர்கள்
இப்பூமியில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள்
அவர்கள் மலையளவு வலியையும்
நதிகளைப் போல் கண்ணீரையும் குருதியையும்
சிந்த வைக்கின்றனர்.

உனக்கு செயற்படுவதற்கு
சரியான சிந்தனையே தேவைப்படுகிறது
நடந்ததையே எண்ணிக் கொண்டிருக்காதே
முயற்சித்து முன்னேறு

இங்கு எமக்கெதுவுமேயில்லை
உன் மரணம் நிகழம் வரை
உலகம் இருந்து கொண்டேயிருக்கும்

 

Series Navigationமூளைக் கட்டிதெலுங்கு எழுத்தாளர் ஒல்கா அவர்களின் படைப்பு , தமிழில்

Leave a Comment

Archives