தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 ஜூன் 2019

மரம் வளர்த்தது

Spread the love

சேயோன் யாழ்வேந்தன்

 

விதை விதைத்து

நீர் விட்டு

முளைவிட்டதும்

அரண் அமைத்து

செடியாக்கி

மரமாக்கினேன்

அதன் நிழலில் அமர்ந்திருக்கும்

பொழுதெல்லாம்

நான் தான்

அதை வளர்த்தவன் என்ற

கர்வத்துடன் நிமிர்ந்து பார்ப்பேன்.

ஒரு நாள்

மெல்லிய குரலில் மரம்

என்னிடம் சொன்னது –

விதையாக இருந்த காலத்திலிருந்தே

நான் தான் உன்னை

வளர்த்து வருகிறேன்.

 

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationசெங்கண் விழியாவோகூட்டல் கழித்தல்

Leave a Comment

Archives