திரை விமர்சனம் – சகலகலாவல்லவன்

This entry is part 19 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

சிறகு இரவிச்சந்திரன்
0
sakalaகமலின் வெற்றிப்படத் தலைப்பை வைத்து ஒரு ஒட்டுத்துணி கதையை படமாக்கி அவருக்கு அவப்பெயர் உண்டாக்கி இருக்கிறது சுராஜ்-ஜெயம் ரவி கூட்டணி!
சக்தியும் அஞ்சலியும் காதலிக்கிறார்கள். சந்தர்ப்பவசத்தால் சக்தியும் திவ்யாவும் கணவன் மனைவி ஆகிறார்கள். மனம் சேராத தாம்பத்தியத்தை முறிக்க அவர்கள் எண்ணும்போது இருவருக்கும் காதல் வர, சுபம்.
ஜெயம் ரவிதான் சக்தி. ஆனால் அவரை விட சின்னச்சாமியாக வரும் சூரி நன்றாக நடிக்கிறார். அதைவிட மொட்டை ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பனாக பட்டையைக் கிளப்புகிறார். உண்மையில் சகலகலாவல்லவர்கள் சூரியும் ராஜேந்திரனும் தான். ஜெயம் ரவி வெறும் கருவேப்பிலை. அதுவும் காய்ந்து போய் மணக்க மறந்து விடுகிறது.
அஞ்சலி, அஞ்சலியாக வந்து, பாதி படம் வரை கவர்ச்சி காட்டுகிறார். மீதி படத்தில் திவ்யாவாக த்ரிஷா, நுனி நாக்கு ஆங்கிலம் பேசி போரடிக்கிறார். சொந்த வாழ்வின் சோகத்தை மறக்க காமெடி படத்தில் நடிக்க வந்த த்ரிஷாவிற்கே, சிரிப்பு வந்திருக்காது. ரசிகன் பாடு ஐயப்பாடுதான்!
யாராவது தமனுக்கு இது தமிழ் படம் என்று சொல்லியிருக்க வேண்டும். தெலுங்கு பாணியில் குத்து பாட்டுகளைப் போட்டு கொல்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சுராஜ். அவர் பேசாமல் இனி கராஜில் போய் படுத்துக் கொள்ளலாம். தமிழ் சினிமா தப்பிக்கும்.
எக்குத்தப்பாக எகிறி விழுகிறது அவரது வசனங்கள். ஒன்றும் கிச்சு கிச்சு கூட மூட்டவில்லை. செண்டிமென்ட் வசன்ங்களையும் விட்டுவைக்காமல் பேசி கொல்கிறார்கள் ஜெயம் ரவியும் கூட்டாளிகளும்.
“ தமிழ்நாட்டுல இங்கிலீஷ் தெரியலேன்னா அவமானம் இல்லே! தமிழ் தெரியலேன்னா தான் அவமானம்.” இது ஒரு சாம்பிள் ரண வசனம்.
நாலைந்து காட்சிகளில் இரட்டை வேடத்தில் விவேக். செல் முருகனோடு அவர் உதிர்க்கும் சில வெடிகள் ஜஸ்ட் பாஸ் ரகம்.
இளைய திலகம் பிரபு, ராதாரவி, கடலோரக் கவிதைகள் ரேகா, ஒரு பாட்டுக்கு பூர்ணா என்று ஏகத்துக்கு நட்சத்திரக் கூட்டம். யாரும் சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை.
இனி ஜெயம் ரவியை அண்ணன் ராஜாதான் காப்பாற்ற வேண்டும்.
0
பி.கு.
என் இனிய தமிழ் மக்கழே! டாஸ்மாக் பாடலும் ரெக்கார்ட் டான்ஸும், திருவிழா பாடல்களும் ரசிப்பவர்கழே! நீங்கள் அவசியம் இந்தப் படத்தை பார்த்து ஹிட் ஆக்கவேண்டும். அப்போதுதான் சுராஜ், ஜெயம் ரவி கூட்டணி இன்னொரு அபத்தை எடுக்க முயலும்.
0

Series Navigationகலாம் நினைவஞ்சலிஅமாவாசை
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *