பரிசு

This entry is part 15 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

சத்யானந்தன்

பரிசுப் பொருள்
என் கௌரவத்தை
உறுதி செய்வது
பளபளப்புக் காகிதத்தால்
மட்டுமல்ல

அதன் உள்ளீடு
ரகசியமாயிருப்பதால்

உள்ளீடற்ற ஒரு
உறவுப் பரிமாற்றத்தை
அது
நாசூக்காக்குகிறது

அதன் உள்ளீடு
மீண்டும் கை மாறலாம்
மினுக்கும் காகிதம் கை கொடுக்க
வீசவும் படலாம்

பரிசின் எல்லாப்
பக்கங்களும்
எதிர்பார்ப்புகளால்
வலுவானவை

கனமான ஒரு
செய்தியைப்
பரிசுகள் சேர்ப்பிக்கின்றன

ரகசியமாய்க்
கைமாறும் பரிசுகளில் மட்டுமே
சமூகம் கைதவறி விட்டவை
உள்ளீடாய்

Series Navigationஇரா. பூபாலன் கவிதைகள்என் வாழ்வின் வசந்தம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *