கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது

author
12
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

கோவிந்த் கருப்

கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது…
மிராகிள் அல்லது நல்லிதய சம்பவம்

கிண்டி பொறியியற் கல்லூரியில் காலையில் அக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர் தம் நண்பர்கள் நடையாடுதல் பார்க்கலாம்.

ஒரு காலத்தில் திரு. அப்துல்கலாம் காலை நடையாடிய பாதைகள்.
அது போல பல நல் இதயம் சுமந்து பல பாதங்கள் நடந்து கொண்டிருந்த காலை பொழுது…

8 ஆகஸ்ட் 2015,
govin1
எல்லோராலும் நட்புடன் பழகும்
கலகலப்பின் மையப்பகுதியாய் வலம் வரும், திரு சரவணன் ( 1984ல் ECE முடித்தவர் ) அவர்தம் நண்பர்கள் திரு ஜெய்சங்கர், திரு பரமசிவம் மற்றும் பலராக சி இ ஜி (கிண்டி பொறியற் கல்லூரி ) பாதைகளில் வலம் வரும் போது,
கண்ணில் பட்டது,

govin2லெதர் பையுடன் ஒரு கிராமப் பெண் மற்றும் வயோதிக கிராமப் பெண். அவர்கள் கையில் ஒரு பேப்பர், செக்யூரிட்டியுடன் விசாரித்தவாறு.
திரு சரவணனுக்கு எப்போதுமே வலிய போய் விசாரிக்கும் குணம்.
விசாரித்தார்…

கவுன்சிலிங் வந்துள்ளனர்.
BSc ( Agri ) :)
காலை 830 க்கு அண்ணா அரங்கத்தில்.
ம்ஹீம்….. ஏதோ தவறு….

அதை அனுப்பியவர்கள் TNAU – ( Tamilnadu Agricultural University )
அதாவது,
கோயமுத்தூர் அக்ரி போக வேண்டியவர்கள், அண்ணா பல்கலைக் கழக வாசலில்..
ஏன்..?
1. மின்னஞ்சல் வந்தவுடன், அதில் வர வேண்டிய நேரமும், வர வேண்டிய இடத்தில், “அண்ணா அரங்கம்” என்று மட்டும் இருந்தது.
அதாவது, வரவேண்டிய ஊரும் கல்லூரிய்ம் தெரியுமே என்று நினைத்து விட்டதால்.
2. இந்தப் பெண்ணும் , அண்ணா அரங்கம் என்றவுடன் மெட்ராஸ் போகனும் என்று அம்மாவிடம் சொல்ல, அம்மாவோ, “மெட்ராஸில் இன்ஜினியர்க்கு தானே போகனும் என்றார்.
3. ஆனால், பெண் அம்மா சொன்னதை பொருட்படுத்தவே இல்லை…
ஏன்..?
அம்மா ஆடு மேய்ப்பவர்.
அப்பா கிடையாது…

கிடைபோட்டு குட்டி ஆட்டை வளர்த்து, குரும்பையாட்டு கறிக்கு வாழ்க்கை நடத்தும் அம்மாவிற்கு என்ன தெரியும் என்ற அந்த வயதுக்குறிய ஒரு நினைப்பு…

இப்போது, நொந்து விசும்பலுடன்…

மணியோ 630 தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது…

நல்லவேளை அங்கிருந்தோருக்கு நல்ல உள்ளம் இருந்தது…
ஒருவர் கோயமுத்தூர் அக்ரி கல்லூரி ரெஜிஸ்டாருக்கு தொடர்பு வழி பார்க்க..
ஒருவர் ஃபிளைட் டிக்கெட் வாங்க வீட்டிற்கு போய் வர…
என துரித நடவடிக்கை …

துரிதமாக செயல்பட்ட்டு, 10.05 ஃபிளைட்டில் ஏற்றிவிட்டார்கள். கோயமுத்தூரில் விசாரித்து, அங்கு காரில் போக கையில் காசும் கொடுத்து விட்டார்கள்.

ஃபிளேனில் போக பயந்து ஆடு மேய்க்கும் அம்மாவிற்கு தைரியம் ஊட்டுதல்,
போர்ட்டிங் செய்யுமிடத்தில் உதவிக்கு வேண்டுகோள், என எல்லாம் தங்கள் வீட்டினருக்கு செய்வது போல்…

மதியம் 02 00 மணிக்கு அந்த பெண்ணிறிற்கு .Sc. – bio technology கிடைத்தது என்ற செய்தி வந்தது சந்தோஷமானார்கள்.

அவர்கள் அதுவரை பதைபதைப்புடன் இருந்தார்கள், காரணம்
கையில் ரூபாய் கொடுத்தும் பலதடவை சொல்லியும் ( ஏர்போர்ட் உள்ளேயே டாக்ஸி பிடித்துக் கொள்ளச் சொல்லி ) அந்தப் பெண் ஆட்டோவில் போனது,
அதனால் நேர தாமதம் ஆக ஆக இவர்கள்,
ஃபோன் செய்து நிலைமையை சமாளிக்க வேண்டியிருந்தது…

அந்த மாணவி கொஞ்சம் இல்லை இல்லை முழுதாய் பெரியவர்கள் சொல்வதை இனியாவது கேட்பது நன்று – அவருக்கு…

அருமை, திரு. சரவணன், திரு பரமசிவம், திரு ஜெய்சங்கர்… அவர்களே…

இந்த செய்தியை முகம் தெரியாத உதவியவர்கள் என்று நெட்டில் பார்த்திருக்கலாம்…

இதை மிராகிள் என்று சொல்வதை தவிர்க்கலாம்…
எங்கெல்லாம் நல் உள்ளங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் இது போல் உதவிகள் சகஜமாக நடக்கும்…
அது அதிகமாக இருக்கட்டும்… மிராகிள் என்று சொல்லும் போது அது குறைவாகி போனது போல் தொன்றச் செய்கிறது…
இறைவன் எங்கோ தனியே நாம் தேடி சென்று மொட்டையடிக்கும் நிலையில் இல்லை…
அருகிலேயே பலரின் மூலம் பல சதவிகிதங்களில் வருகிறார்..
எல்லா நல் உள்ள சேவை புரிவோர் அனைவருமே தெய்வங்கள் தான்..

‘உன்னில் விலகி
எங்கோ இருந்தால்

எங்கோ இருக்கும்
என நினைக்கும்

ஒன்றிடம்

நீ நல்லது தா
என வேண்டினால்

பின்
உன்னிடம் இருப்பது என்ன..?

நீ யார்..?

நீயே
நல் எண்ணமும்
நல் செயலும்

கிளர்ந்திடும் ஊற்று
என்று நினை..

நினைத்தால்

உன்னில் ஒன்றியது தானே
கடவுள்..

உணர்வாய் நீ…

கோவிந்த் கருப்

Series Navigationபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?கோணல் மன(ர)ங்கள்
author

Similar Posts

12 Comments

  1. Avatar
    paandiyan says:

    facebook இல் எல்லாம் இருகின்றது. இதை தவிர
    “திரு சரவணன் ( 1984ல் ECE முடித்தவர் ) அவர்தம் நண்பர்கள் திரு ஜெய்சங்கர், திரு பரமசிவம் மற்றும் பலராக சி இ ஜி (கிண்டி பொறியற் கல்லூரி ) பாதைகளில் வலம் வரும் போது,

  2. Avatar
    Balu says:

    Great Job !,

    அருமை, திரு. சரவணன், திரு பரமசிவம், திரு ஜெய்சங்கர்.

  3. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    நல்ல மனசுக்காரர்கள். அந்த தாயுள்ளம் வாயார வாழ்த்தியிருக்கும் :)

  4. Avatar
    கோவிந்த் கருப் says:

    முதலில் நண்பர்கள் பெயர் வராமல் இருக்கும் படியான ஒரு ஃபேஸ் புக் பதிவை திரு.ஜெய்சங்கர் போட்டார், அந்தப் படம் அவர் எடுத்தது, அவர் பெயரையும் போடவில்லை.
    ஆனால், சம்பந்தமில்லாத சிலர் தாங்கள் செய்தது போல் எழுத ஆரம்பித்ததால் தான் நான் திரு. சரவணனது ஃபோன் நம்பரை எங்கள் கல்லூரிக்கான திறந்த குரூப்பில் போட்டேன்… CEGAM.
    இங்கு நான் தந்திருக்கும் தகவல்கள் தான் உண்மை.
    அக்ரி ரெஸீச்டார் தாங்கள் கோவை விமான நிலையத்துக்கு கார் அனுப்பியதாகச் சொல்லும் செய்தியை பல பத்திரிக்கைகள் போட்டுள்ளன்… அது தவறான தகவல்.
    அந்தப் பெண்ணும் தற்போது மெடிகல் சீட் வாங்கித் தர கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறார்.
    சில பத்திரிக்கைகள் இருவரையும் சந்திக்க வைத்து கவரேஜிற்கு முயற்சிக்கிறார்கள்
    இன்று காலைகல்லூரியில் வாக்கிங்கில் , திருமதி.லஷ்மி , சிநேகா அமைப்பு – தற்கொலை உணர்வை மாற்றுதல்- அவர்களை சந்தித்தபோது, பாராட்டிய அவரிடம் திரு.சரவணன் சொன்னது, “ உங்கள் சேவைக்கு முன் இது ஒன்றுமில்லை’ என…
    இது பரவினால் நிறைய நல்லது நடக்கும் என்பது தாண்டி வேறேதும் இல்லை, எங்களுக்கு..
    நன்றி

  5. Avatar
    arun says:

    This is a very good example of Dharma done without expectations. Gita says exactly this kind of an act. Many give lectures on this great principle. Here these great souls have practiced it in their everyday life. In today’s Dinaalar Thirunelveli edition I also read in detail about this act of humane excellence. I wish and pray that I get such good thoughts and deeds as I grow old.

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    மிக அருமையான மனதை நெகிழச் செய்யும் பதிவு. காலத்தினால் செய்த உதவி என்பதற்கு இதை அருமையான உதாஹரணமாகக் கொள்ளலாம். இந்த மாணவி நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற பழனிப்பதிவாழ் பாலகுமாரனை இறைஞ்சுகிறேன்.

  7. Avatar
    BS says:

    தமிழ்நாடு விவசாயப்பலகலைக்கழகம் கோவையில் இருக்கிறது. வேறெங்குமே இல்லை என்பதை அப்பெண் விண்ணப்பம் செய்யும்போதே தெரிந்திருந்தும், சென்னை வந்திருக்கிறார். என்னே மடைமை!

    உதவி செய்தவர்கள் மனிதர்கள். அவர்கள் செய்ததற்கு அவர்களைத்தான் வியந்து பாராட்டவேண்டும். ஆனால் இங்கே பகவத் கீதை, விவிலியம், குரான் என்றெல்லாம் வருகிறது. தெய்வம் அனுப்பியதாம்? எப்படி கண்டிபிடித்தார்கள் இவர்கள்?

    ஏன் அத்தெய்வம் எத்தனையோ அப்பாவிகள் வழிதவறும்போது, அல்லது மேற்படிப்பு பணமில்லாமல் தொடரமுடியாமல் விட்டுவிடும்போதும், எவரையும் அனுப்பவில்லை என்று இந்த கிடைச்ச கேப்பில் வண்டியோட்ட பார்க்கும் இந்த ஆத்திகக்கூட்டம் சிந்திப்பதேயில்லை. ஆண்டவனுக்கு சப்போர்ட்டு கொடுக்கிறார்களாம்! ஆண்டவனுக்கு நீங்கள் விளம்பரம் கொடுக்கவேண்டாம். செய்தவனுக்கு சபாஷ் போட்டா போதும்.

    1. Avatar
      paandiyan says:

      கூட்டத்தில் முதலில் கத்துபவன் புத்திசாலி . ஹி ஹி ..நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நீங்கள் இருகின்றீர்கள . அப்பறோம் என்ன ?

  8. Avatar
    S Ganesh says:

    Hats off to Saravanan and Friends. You have proved Chennai is still Dharumamigu Chennai. It looks easy to read. But when you see such people who have taken great efforts in the early morning and ultimately ensured that the girl reached Coimbatore and got her seat, this is n othing less than the green corridor provided for organ donation and transplant. Greeat job, great sould. It makes people like us to applaud and try to be a little more noble and gentle.

  9. Avatar
    sanjay says:

    The latest news is that Swati says that she is not interested in studying agriculture course & wants to do medicine instead.

    She has wasted everybody’s time.

    One question nobody has asked : Is the girl so dumb or careless that she did not even read the address on the interview card?

  10. Avatar
    BS says:

    திரு சஞ்சய்

    என் முதல் மடலில் முதல் வரிகளே அப்பெண் ஒரு கல்லூரிப்படிப்புக்குத் தகுதியுடையவள்தானே என்ற கேள்வியை உள்ளடக்கியது. இப்படி உதவி செய்து ஏமாந்தவர்கள் பலர். இங்கேயும் உதவியவர்கள் தங்கள் உதவும் குணத்தை விரயமாக்கிவிட்டார்கள். உதவி வாங்கி அனுபவித்துவிட்டு நன்றியுணர்வே இல்லாமல் செல்பவர் சிலர். (வள்ளுவர் அனுபவித்திருப்பார் போலும் என்பதை அவரிட்ட‌ சாபம் தெரிவிக்கிறது) சிலர் அனுபவித்துவிட்டு செய்தவனையே திட்டுபவர்கள் (பிச்சைக்காரர்களிடம் இதை நேரடியாகவே பார்க்கலாம். குறைத்துக்கொடுத்தால் திட்டுவார்கள்); சிலர் உதவி செய்து அனுபவித்துப் பின்னர் உதவி செய்தவனுக்கே பாதகம் செய்பவர். (வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல என்ற உவமையைக்கண்டுபிடித்தவர் அனுபவித்தவர் போலும். சிலர் கொள்ளையும் அடிப்பார்கள். வழிப்போக்கரிடம் இந்த இடம் எங்கேயிருக்கிறது என்று கேட்டு அவர் சொல்லும் முன்பே அவரைத்தாக்கிவிட்ட பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு போகும் கூட்டத்தின் செயலை அடிக்கடி பார்க்கலாம். ஒரு முறை ஒரு நண்பனுக்கு வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்து காத்திருக்க, அவன் வரவேயில்லை. பின்னர் அட்வான்ஸ் போனது போனதுதான். இரு மாதங்களுக்குப்பின் தற்செயலாக பார்த்த போது நண்பன் கூலாகச் சொன்னான்: நான் நேரே இறங்கி இன்னொரு நண்பன் பார்த்த வீட்டிற்குப்போய் விட்டேன். ஆக, வருவதற்கு முன் பலரிடம் சொல்லி வைத்திருக்கிறான். இங்கில்லையென்றால் அங்கு. பின்னர் என்ன பலர் அட்வான்ஸ் கொடுத்து ஏமாந்தார்கள். நன்றாகத் தெரிந்த பின் உதவுங்கள். அப்படியே ஈகை குணம் இருக்க வேண்டுமென்றால், முகந்தெரியா அறியாதவருக்கு நன்கொடை மூலம் செய்யலாம். அநாதை மடங்கள், சாரிட்டி ட்ரஸ்ட், குழந்தைகள் கிராமங்கள் (எஸ் ஓ எஸ்) என்று. இதுவே உண்மையான உதவியாகும். எதிர்பார்த்து செய்யா உதவிகள். உங்கள் திருப்திக்காக. கண்டிப்பாக அப்பணம் ஒரு குழந்தைக்கு புத்தகங்கள் வாங்கவாவது உதவும்.

  11. Avatar
    GovindKarup says:

    திரு.பி எஸ் , திரு சஞ்சய்,
    திரு.சரவணன் என் நண்பர். இவ் வுதவி விஷயத்தில் நான் பல கேள்விகள் கேட்டேன். அந்த மின்னஞ்சலில் இண்டர்வியூ இடம் தெளிவாக இல்லை, வர வேண்டிய இடம், அண்ணா அரங்கம், நேரம்:… இருந்திருக்கிறது. அதன் பின் , முகவரி இல்லை.
    ஏனெனில் இவர் விண்ணப்பித்தது, கோவை கல்லூரிக்கு எனும் போது அவர் வேறெங்கு போய் விடுவார் என.
    அந்த அம்மா, பெண்ணிடம் அண்ணா பல்கலைக்கழகம் இன்ஞ்சினியருக்குத் தானே என்றதை அப்பெண் தான் பிடிவாதமாக இங்கு அழைத்து வந்துள்ளார்.
    மேலும், விவேகமோ இல்லையோ உதவி செய்தவருக்கு அறிவுரை வழங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அந்தப் பெண்ணிற்கு அருமை தெரியாமல் போயிருக்கலாம்…
    இச் சம்பவம் பின் பலரும் பலவிதத்தில் பலருக்கு உதவி செய்துள்ளார்கள், உடனடி இளகிய மனநிலை இம்ப்பாக்ட்…
    திரு.ச்ரவணன் மற்றும் அவர் வருட மாணவர்கள் ஒரு டிரஸ்ட் வைத்து, AACEG Alumni Association of College of Engineering மூலம் முதலாண்டு ஊனமுற்றோர் (அ) மாற்றுத்திறனாளிகளுக்கு வருடா வருடம் உதவி செய்கிறார்கள்.
    நானும் ஒரு டிரஸ்ட் வைத்துள்ளேன், முடிந்தன சில செய்கிறேன்… ஆனால் என் அனுபவத்தில் நான் இதோ இது இது நல்லது செய்துள்ளேன் என்று சொல்வது இக்காலச் சூழலில் பல நன்மைகள் விளைவிக்கும்.
    சீரடி சாய் மயிலை கோவிலுக்கு போனால் பை நிறைய பிஸ்கெட் பொட்டலங்கள் கொண்டு வந்து பெரும்பான்மை இறுகிய முகத்துடன், உள்வருவோருக்கும், அங்குள்ள வாசல் வரிசை அலாட்டட் பிச்சைக்காரர்களுக்கும் தருவார்கள்.
    கோவில் உள் வருவோர் அது தேவையே இல்லாத ஒன்று..
    வெளிப் பிச்சைக்காரர்கள் அதை ஒரு பையில் சேகரித்து பக்கத்து கடைகளில் விற்று விடுவார்கள்.
    நீங்கள் சொல்வது போல்,
    தானம் சரியான இடம் சென்றால் நல்லது பல நடக்கும்.
    மேலும், தானத்தில் தானம், உரிமைகளைச் சொல்லிக் கொடுத்து, அநீதியை எதிர்க்கும் மனநிலை தருவது தான்..
    அது இங்கு யாராவது செய்தால்
    அஹம் பிரம்மாஸ்மி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *