‘ஜிமாவின் கைபேசி’ – திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது

author
0 minutes, 2 seconds Read
This entry is part 8 of 22 in the series 27 செப்டம்பர் 2015

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது. சிறந்த குழந்தை இலக்கிய நூலாக நானெழுதிய ‘ஜிமாவின் கைபேசி’ ( சிறுவர் அறிவியல் புனைகதை) புத்தகத்துக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு திருன்னாமலையில் நடத்தப்பட்ட சிறுவர் இலக்கிய முகாமில் திரு. எஸ்.ரா அவர்கள் 12 சிறந்த சிறுவர் இலக்கிய நூல்களை தெரிந்தெடுத்து ஆய்வுரை நிகழ்த்தினார். அதில் எனது ‘ஜிமாவின் கைபேசி’ புத்தகமும் அடங்கும்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் அசாத்தியங்களை, அற்புதங்களை சிறுவர்கதை அம்சங்களிலிருந்து மாறுபட்டு இதில் நான் நமது தமிழ்தேசத் துளிர்களுக்காகத் தந்துள்ளேன். இதில் கையாண்டுள்ள ஒவ்வொரு செய்தியும் நடப்பு அறிவியல் வளர்ச்சியில் சாத்தியம் என்பதை தீர்மானமாக நம்புகிறேன். அன்றாடம் வாசிக்கும் பத்திரிக்கை செய்திகளில் காணக்கிடைக்கும் பத்திகளில் இந்த நாவல்
சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளை படித்து மகிழ்கிறேன்.

ஆமாம். School based Telemedicine, கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்களை பெருநகர மருத்துமனைகளுடன் இணைப்பது, குடிநீரின் தன்மை பற்றிய சோதனை, கடலோர மீனவர்களை காக்க உதவும் தொழிற்நுட்பம் என இதில் சொல்லப்பட்டுள்ள பல தகவல்கள் அரசு அதிகாரிகளை, அதன் துறைசார்ந்த அமைச்சகங்களை சென்றடையவேண்டும் என்பது எனது மனப்பூர்வமான கோரிக்கை. அவை செயல் வடிவம் பெரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

அன்புடன்
கொ.மா,கோ.இளங்கோ
9003107012

Series Navigationதொடுவானம் 87. ஊர் செல்லும் உற்சாகம்கடலோடி கழுகு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *