தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 அக்டோபர் 2019

ஓவியம் தரித்த உயிர்

ரமணி

Spread the love

பாராட்டாகத்தான் உனைப்
பட்டாம்பூச்சி என்றேன்.

தாவும் குணமென்று சொன்னதாய்
நீ கோபம் கொண்டிருக்கிறாய்.

ஒருகால்
பெயரை மாற்றி
வண்ணத்துப் பூச்சியென்று
உனைச் சொல்லியிருந்தால்
உன் கோபம்
சிவப்பு நிறம் கொண்டிருக்காது

ஓவியம் தரித்துக்கொண்ட
உயிர் நீ என
சந்தோஷமடைந்திருக்கலாம்.

ஆனால்
நீ ஒன்றும்
அதைப்போல பூச்சி அல்ல.

ஒரு பறவை நீ

முட்டை
புழு என
அதன் பரிணாமம் போலன்றி
நீ ஜனித்ததிலிருந்தே
வண்ணங்கள் கொண்டிருக்கிறாய்.

இலை செடி மலர்கள்
எனத் தாவரங்களைச்
சுற்றியே
வாழ்க்கை சுழல்கிறது அதற்கு
என்றாலும்
அதன் வண்ணமும் வாழ்வும்
கூட்டுப்புழுவான தவத்தின்
பலன் என்பதை
நீ குறித்துக்கொள்
—– ரமணி

Series Navigationபேசாமொழி – அக்டோபர் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது..அவன், அவள். அது…! -6

Leave a Comment

Archives