தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

புத்தன் பற்றிய​ கவிதை

சத்யானந்தன்

Spread the love

 

 

எதிரி நாட்டு

வீரன் மீது

கூர் வாளை

வீசிக் கொல்வது

வீரம் அல்லவா?

 

மிரளும் கண்களுடன்

மாமிச​ மலையாய்

ஓடி வரும்

காளையை விரட்டி

விரட்டி

வாலைப் பிடித்து

வளைத்து வளைத்து

திமிலைப் பிடித்து

முதுகில் ஏறி

அடக்கி நிமிர்வதை

விட​

வீரம் எது உண்டு?

 

வீரம் மட்டுமா?

நேயமுமுண்டு

என்

வளர்ப்பு மிருகம்

பசியால் வாடினால்

மற்றொரு மிருகத்தின்

சதைத் துண்டுகளை

அறுத்துத் தருவேன்

 

இரு முகம்

பல​ முகம்

நிஜத்தில் முடியுமா?

அதனால் தான்

முகமூடிகள்

 

உள்ளே இருப்பது

புத்தன் முகம்

 

சத்யானந்தன்

Series Navigationதேவகி கருணாகரனின் ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்நித்ய சைதன்யா – கவிதைகள்

2 Comments for “புத்தன் பற்றிய​ கவிதை”

 • essarci says:

  கவிஞ்ர் சத்யானந்தனுக்கு அன்பு வணக்கங்கள். இந்த வார த்தங்கள் கவிதையில் வரும்’உள்ளே இருப்பது புத்தன் முகம்’ என்பதனை கொஞ்சம் விளக்கமாய் கூறுங்களேன். நன்றி எஸ்ஸார்சி

  • sathyanandhan says:

   அன்பு எஸ்ஸார்சி மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பணிவான​ வணக்கங்கள். தாமதமான​ பதிலுக்கு மிகவும் வருந்துகிறேன்.

   இந்தக் கவிதை ஜென் பற்றிய​ ஒரு கவிதரிசன​ முயற்சி. ஜென் சாராம்சம் ‘இயல்பாய் இருத்தல்”. எது இயல்பு? என்பதுவே நாம் ஆன்மீகத்தின் அடிப்படைக் கேள்வியாகக் கொள்ளலாம். நூற்றாண்டுகளாகவும் இப்பிறப்பிலும் நம்மீது சுமத்தப்பட்டுள்ள​ அடையாளங்கள் பிரபஞ்ச​ உயிரினங்களின் அடிப்படை இயல்பை நமக்கு அன்னியமாக்கி விட்டன​. எனவே என் நல்லதனம் போல்லாத்தனம் இவை யாவுமே முகமூடிகளே. என்னால் எல்லா முகமூடிகளையும் கடக்க​ முடியுமென்றால் உள் ளே இருப்பது புத் தன் முகமே. இயல்பாயிருக்கும் முகமே. அந்த​ இயல்பு என்பது பற்றிய​ என் புரிதலுக்கு ஒரு உதாரணம் காட்டி நிறைவு செய்கிறேன். எல்லாக் குயில்களும் காக்கையின் கூட்டில் அதன் குஞ்சுகளுடன் முட்டைகளிலிருந்து பரிணமித்தவையே. காக்கை குயில் இரண்டுக்குமே இதை ஏற்று கூடி வாழ்வது இயல்பானது. அன்பு சத்யானந்தன்.


Leave a Comment

Archives