தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 ஜனவரி 2019

என் இடம்

சத்யானந்தன்

 

ஒரு வளாகத்தின்

ஒரு பகுதிக்கான

வாடகை

ஒப்பந்தம் இவை

விவாதத்துக்கு அப்பாற்பட்டவை

 

எந்தக் கதவுகள்

யாருக்காகத் திறக்கின்றன

எந்த சாளரங்கள்

எப்படி மூடப்பட்டன

என்பவை தொடங்கி

 

வளாகத்தின் எந்தப் பகுதி

பயன்படுகிறது அல்லது

பயன்படுவதில்லை

இவை என்

கேள்விகளுக்கு உட்பட்டவையே

 

ஒரு வளாகத்தின்

உடல் மொழி

அதன் உள்ளார்ந்த

சொல்லாடல்களால் அல்ல

மௌனங்களாலேயே தீர்மானிக்கப்படும்

 

எல்லா இருப்பிடங்களும்

தற்காலிகமே

என்போரே

நான் தரவல்ல

அழுத்தங்களை

நீர்க்கடித்து விடுகிறார்கள்

 

உறைவிடம் மையமாவதும்

நான் உறைவது மையமாவதும்

வித்தியாசப்படும் புள்ளி

என் இடத்தை நிர்ணயிக்கிறது

 

சத்யானந்தன்

Series Navigationதுளிதுளியாய்… (ஹைக்கூ கவிதைகள்)துன்பம் நேர்கையில்..!

Leave a Comment

Archives