தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 ஆகஸ்ட் 2019

இரண்டாவது புன்னகை

சத்யானந்தன்

Spread the love

 

 

புத்த பிட்சுவின்

அடியொட்டி நடந்தான்

சாம்ராட் அசோகன்

 

கால்கள் இழந்த

குதிரையின் காயங்களைக்

குதறிக் கொண்டிருந்தன

கழுகுகள்

 

வீரன் ஒருவனின்

குழந்தை

தாயின் மடியில்

அயர்ந்து

உறங்கிக் கொண்டிருந்தாள்

 

மௌரிய சாம்ராஜ்ஜியமென்ன

இனி எந்த நாட்டிலும்

போரென்பதே இருக்காது

நிம்மதிப் பெருமூச்சே

இறுதியாய் முடிந்தான்

அவளின் தந்தை

 

மந்திரிகள் கலைஞர்கள்

ஜெய கோஷத்துடன்

அணி வகுத்தனர்

அசோகன் பின்னே

 

புத்தன் இரண்டாம்

முறை

புன்னகைத்தான்

Series Navigationதேடிக்கொண்டிருக்கிறேன்நீங்காப் பழி!

Leave a Comment

Archives