தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 ஜூன் 2019

சொற்களின் புத்தன்

Spread the love

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

சொற்களின் சிற்பி

சிற்பியின் உளிச்சிதறல்களில்

புதுப்புது சொற்களைக் காண்கிறான்

 

சொற்களின் வேடன்

வேடனின் வித்தைகளில்

புதுப்புது சொற்களைக் கண்டெடுக்கிறான்

 

சொற்களின் கடவுள்

கடவுளின் மொழியில்

புதுப்புது சொற்களைச் சேர்க்கிறான்

 

சொற்களின் புத்தன்

புத்தனின் சொற்களில்

புத்தனைத் தேடித் தோற்கிறான்.

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationசுவை பொருட்டன்று – சுனை நீர்அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு

Leave a Comment

Archives