என் செல்வராஜ்
குறைந்தது நான்கு பரிந்துரை (தொகுப்பு, பரிந்துரை மற்றும் எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்ட) பெற்ற சிறுகதைகளை சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என்ற கட்டுரையில் பார்த்தோம். பால குமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் என்ற கதை 4 பரிந்துரை பெற்று அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறது. புதுமைப்பித்தனின் மகாமசானம் 5 பரிந்துரை பெற்றுள்ளது. இந்த கதை திலீப் குமார் தொகுத்து ஏப்ரல் 13 ல் வெளியான தி தமிழ் ஸ்டோரி என்ற ஆங்கில தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் 88 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றதன் மூலம் சில கதைகள் 4 பரிந்துரை பெற்ற கதைகளாக முதல் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. அந்த கதைகள் …..
- சின்னூரில் கொடியேற்றம் – சார்வாகன்
- நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் – திலகவதி
- சிலிர்ப்புகள் – சி ஆர் ரவீந்திரன்
- சிறுமி கொண்டு வந்த மலர் – விமலாதித்த மாமல்லன்
- தழும்பு – சோ தர்மன்
- அனல் மின் மனங்கள் – தமயந்தி,
- பலாச்சுளை – ரசிகன்
- ரெயிவே ஸ்தானம் – பாரதியார்,
- சண்டையும் சமாதானமும் – நீல பத்மநாபன்
- பொழுது – சிவசங்கரி,
- நிஜத்தை தேடி- சுஜாதா
தமிழ் இந்து நாளிதழில் கதா நதி என்ற கட்டுரைத் தொடரை பிரபஞ்சன் எழுதி வருகிறார்.அதில் சிறந்த சிறுகதைகளைக் குறிப்பிட்டு எழுதி வருகிறார்.அதன் அடிப்படையில் பட்டியலில் சில மாற்றங்கள் வரலாம்.
இனி மூன்று பரிந்துரை பெற்ற சிறுகதைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.
- புதுமைப்பித்தன் – காலனும் கிழவியும், மனித யந்திரம், சிற்பியின் நகரம்,
கபாடபுரம்
- ஆறில் ஒரு பங்கு – பாரதியார்,
- சுந்தர ராமசாமி – எங்கள் டீச்சர், காகங்கள், சீதை மார்க் சீயக்காய் தூள்,
- அ. மாதவையா – ஏணியேற்ற நிலையம், கண்ணன் பெருந்தூது
- தி ஜானகிராமன் – கோபுர விளக்கு, பரதேசி வந்தான், துணை,
கோதாவரிக் குண்டு
- பி எஸ் ராமையா – கார்னிவல், மலரும் மணமும்
- பா செயப்பிரகாசம் – இருளுக்கு அழைப்பவர்கள், தாலியில்
பூச்சூடியவர்கள்
- ந பிச்சமூர்த்தி – தாய், ஜம்பரும் வேஷ்டியும், மாயமான்
- கு ப ராஜகோபாலன் – புனர் ஜென்மம்
- கு அழகிரிசாமி – இருவர் கண்ட ஒரே கனவு
- வண்ண தாசன் – ஞாபகம், போய்க்கொண்டிருப்பவன், சமவெளி,
தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், வடிகால்
- அசோகமித்திரன் – குழந்தைகள், மாறுதல், பார்வை
- ஜெயகாந்தன் – குருபீடம், மௌனம் ஒரு பாஷை, நான் என்ன
செய்யட்டும் சொல்லுங்கோ, ட்ரெடில், பிணக்கு
- சி சு செல்லப்பா – மூடி இருந்தது
- அ முத்துலிங்கம் – அமெரிக்காகாரி, அக்கா
- நகுலன் – அயோத்தி, ஒரு எட்டு வயது பெண் குழந்தையும் நவீன
மலையாளக் கவிதையும்
- ஆதவன் – லேடி, ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்
- பூமணி – கரு, பெட்டை, பொறுப்பு, வயிறுகள், தொலைவு
- ஜெயமோகன் – மாடன் மோட்சம், யானை டாக்டர், ஊமைச்செந்நாய்
- எஸ் ராமகிருஷ்ணன் -இந்த நகரிலும் பறவைகள்
இருக்கின்றன,புலிக்கட்டம், தாவரங்களின் உரையாடல்
- இந்திரா பார்த்தசாரதி- இளமாறன் கொடுத்த பேட்டி, நாசகார கும்பல்,
பயணம்
- ஜி நாகராஜன் – இளிந்த ஜாதி, தீராக்குறை, டெர்லின் ஷர்ட்டும் எட்டு
முழ வேஷ்டி அணிந்த மனிதரும்
- நாஞ்சில் நாடன் – கிழிசல், விரதம், பாலம்
- கந்தர்வன் – தராசு, மங்கலநாதர், காளிப்புள்ள
- சுஜாதா – திமலா,
- கிருஷ்ணன் நம்பி -எக்ஸெண்டிரிக், நீலக்கடல், தங்க ஒரு..,
காணாமல் போன அந்தோனி
- 23 – மாலன்
- அக்ரஹாரத்தில் ஒரு பூனை – திலீப்குமார்,
மனம் எனும் தோணி பற்றி – திலீப்குமார்
- அ(ஹி)ம்சை – சோ தர்மன்,
- மழையும் தொலைவும் – தமயந்தி,
- அணி – எஸ் பொன்னுதுரை
- அந்த தெருவின் முடிவில் ஒரு சுடுகாடு – ஜெயபாரதி
- அசரீரி – அஜித்ராம் பிரேமிள்
- ஏன் – மௌனி
- இலைகள் சிரித்தன – பாதசாரி
- இடைவெளி – சம்பத்
- கலைஞனின் தியாகம் – கி வா ஜகந்நாதன்
- காலச்சக்கரம் – வை மு கோதைநாயகி அம்மாள்
- களவு – சுந்தர பாண்டியன்
- கார்த்திகைச்சீர் – எம் எஸ் கமலா
- கருப்பு குதிரை சதுக்கம் – அம்பை , மிருத்யு – அம்பை ,
வெளிப்பாடு – அம்பை
- கடைசி வேட்டை -சங்கரராம்
- கருப்பு ரயில் – கோணங்கி, கோப்பம்மாள் – கோணங்கி
- கழிவு – ஆண்டாள் பிரியதர்ஷினி
- குலவதி – கு ப சேது அம்மாள்
- குறட்டை ஒலி – மு வரதராசனார்
- குடிமுந்திரி – தங்கர் பச்சான்
- மனசு – பிரபஞ்சன்
- மனிதர்கள் – கிருஷ்ணமூர்த்தி
- மானுடத்தின் நாணயங்கள் – சு சமுத்திரம்,
போதும் உங்க உபசாரம் – சு சமுத்திரம்
- மதிப்பு மிகுந்த மலர் – வல்லிக்கண்ணன்
- மாட்டுத்தொழுவம் – விந்தன்
- மாடுகள் -இமையம்
- மீதி – மா அரங்கநாதன்
- மூளி மாடுகள் -சுயம்பு லிங்கம்
- மொட்டை – ஜெயந்தன், பகல் உறவுகள் – ஜெயந்தன்
- மொழி அதிர்ச்சி – கோபி கிருஷ்ணன்
- நரிக்குறத்தி – ஜெகசிற்பியன்
- வதம் – திலகவதி
- நீலச்சிலுவை – என் ஆர் தாசன்
- நீலம் – பிரமிள்
- நிலவோ நெருப்போ – சோமகாந்தன்
- நொண்டிக்கிளி – தி ஜ ரங்கநாதன்
- நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
- பச்சை கனவு – லா சா ராமாமிர்தம்
- படம் – க்ருஷாங்கினி
- பாதுகை – டொமினிக் ஜீவா
- பட்டுவின் கல்யாணம் – கா சி வேங்கடரமணி
- பாவணைகள் – ச தமிழ்ச்செல்வன்,
வாளின் தனிமை – ச தமிழ்ச் செல்வன்
- பேராசிரியர் தக்கியின் ஆடு – விட்டல் ராவ்,
தூர தேசம் – விட்டல் ராவ்
- பேசுதல் – பாவண்ணன்
- பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப் பொழுது – உதயசங்கர்
- பிளாக் நம்பர் 27 திருலோக்புரி – சாரு நிவேதிதா
- பொன்னுத்தாயி – பாமா
- பூமிக்கு சற்று மேலே – அ வெண்ணிலா
- செப்டிக் – சிவசங்கரி
- ரத்த சுவை – கரிச்சான் குஞ்சு
- சப்பாத்தி பழம் – ந முத்துசாமி, யார் துணை – ந முத்துசாமி
- சரணபாலாவின் பூனைக்குட்டி – செ யோகநாதன்
- சதுப்பு நிலம் – எம் ஏ நுஹ்மான்
- செம்படவ சிறுமி – சங்கு சுப்ரமணியம்
- சத்ரு – பவா செல்லதுரை
- தபால்கார அப்துல்காதர் – எம் எஸ் கல்யாணசுந்தரம்
- தாக்கம் – கௌரிசங்கர்
- தம்பி – கௌதம சித்தார்த்தன்
- தமிழ்ப்பித்தன் நகர் – காசியபன்
87.தண்ணீர் – ஆ மாதவன்
- தீராத பிரச்சினை – கிருத்திகா
- தேவானை – ராஜாஜி
- உக்கிலு – குமார செல்வா
- உள்ளும் புறமும் – வண்னநிலவன்
- உத்தராயணம் – இரா முருகன்
- வாக்கு – சுப்ரபாரதி மணியன்
- வட்டக்கண்ணாடி – தோப்பில் முகம்மது மீரான்,
காலத்தின் ஆவர்த்தனம் – தோப்பில் முகம்மது மீரான்
- வேலையும் விவாகமும் – ந சிதம்பர சுப்ரமனீயம்
- வேட்கை – பெருமாள் முருகன்
- பொருதகர் – செண்பகம் ராமசாமி
- தனபால செட்டியார் கம்பெனி – அண்ணாதுரை
- ஆலமரம் – தாழையடி சபாரத்தினம்
இந்த மூன்று பரிந்துரை பட்டியலில் 154 கதைகள் உள்ளன. இவை இன்னும் சில எழுத்தாளர்களின் பரிந்துரை பெற்றால் சிறந்த சிறுகதைகள்
பட்டியலில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அது வரை இந்த கதைகள் நல்ல கதைகள் என்ற பட்டியலில் இருக்கும். வாசகர்கள் இந்த கதைகளை தேடிப் படிக்க வேண்டும். இரண்டு பரிந்துரைகள் பெற்ற கதைகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
Email : – enselvaraju @ gmail.com
- எம்.ஜி.ஆரின் தாய் ஏட்டிலிருந்து தாயகம் கடந்த தமிழ் அவுஸ்திரேலியன் வரையில் பயணித்த பன்முக ஆளுமை கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -1
- தொடுவானம் 116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்
- ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை
- புரியாத மனிதர்கள்….
- குரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு
- நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்
- கவிதைத் தேர்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு
- குழந்தை