தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

அன்னியமாய் ஓர் உடல்மொழி

சத்யானந்தன்

Spread the love

 

 

அவர்கள்

விட்டு வைத்தவை

அவனுக்காக

விட்டுக் கொடுக்கப் பட்டவை

என்றார்கள்

 

பணியிடமும் வீடும்

அவனன்றி ஓர்

அணுவும் அசையாது

என்றனர்

 

மைல்கற்கள்

கோலத்தின்

வேவ்வேறு புள்ளிகள்

வரைபடங்களின்

அம்புக் குறிகள்

அதிகாரத்தின்

துய்ப்பின்

மையங்களாய்

வாய்ப்புக்களுக்கு

வழி காட்டின

 

விதைப்பு உழைப்பு

என்னும் கண்ணிகளே

இல்லாத அறுப்பு

பங்களிப்பே இல்லாத

லாபம்

உறுதி செய்யும்

உடல் மொழி

என்றுணர்ந்தான்

 

மாய வித்தைக்காரன்

பாம்பாட்டி கழைக்கூத்தாடி

கல்லூளிமங்கன்

யாரிடமும் புதிய உடல்மொழி

உத்திகள்

கற்றான்

பலூன்காரனிடமும்

 

பலூன் வெடித்ததும்

முதலில் அதிர்ச்சியாகிப்

பின் அழுதுப்

பின் மற்றுமொரு

பலூனை

உடைத்துச் சிரித்த

குழந்தையின் முக

பாவங்களை

நகலெடுக்க முயன்றான்

சவாலாயிருந்தது

 

குழந்தையின்’

உடல்மொழி

பயில ஓர்

ஆசானைத்

தேடினான்

 

அது

யாருக்கும்

தெரிந்திருக்கவில்லை

 

Series Navigationமெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!

Leave a Comment

Archives