நிறை

This entry is part 1 of 16 in the series 24 ஏப்ரல் 2016

 

 

மனம் நிறைந்து

வழிந்தது

நொடிகள் தாண்டி

நீளவில்லை என்பது

தவிர​

நினைவில் எதுவுமில் லை

 

காந்தமாக​ ஒரு

தேவை

நினைவூட்டலாக​ ஒரு

அதிகார​ உரசல்

மனவெளியைத் தோண்டித்

தோண்டி

ஊற்று நீர் தேடும்

 

என் குறைகளை

நீக்க​ ஒண்ணாது

உள்ளே என்ன​

குறை என்றே

அவரோகணம்

 

பொம்மலாட்டக்

கயிறு மட்டுமல்ல​

பொம்மைகளும்

மாற்றிக் கொள்ளும்

மேடையில்

தன்வயமாயில்லாமல்

இருப்பை வடிவை கைகளை

 

நிறைவு தந்த​

புனைவுக் கவிதையின்

கதையின்

மூலமாய் ஒரு

நிறைவின்மை

Series Navigationஎனது கதைகளின் கதை – 2. மனிதனுக்கு மனிதன்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *