தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

நீ இல்லாத வீடு

Spread the love

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

நீ இல்லாத வீடு

நீ இல்லாத வீடு போலவே இல்லை.

என் ஆடைகள் அனைத்திலும்

உன் கைரேகைகள் நிரந்தரமாகப் படிந்திருக்கின்றன.

பொருட்கள் எல்லாம்

நீ வைத்தது வைத்தபடியே உள்ளன.

இட்லிப் பொடியிலும் தக்காளித் தொக்கிலும்

உன் வாசம்தான் வீசுகிறது.

கிண்ணத்தில் நான் ஊற்றிவைத்த பாலை

சீண்டாமல் பட்டினி கிடக்கிறது கர்ப்பிணிப் பூனை.

மாடி வீட்டு பாப்பா

துணிக்கொடியில் என் உடைகள் மட்டும் காய்வதை

துவேஷமாகப் பார்க்கிறது.

நீ இல்லாத வீடு

வீடு போலவே இல்லை!

Series Navigationகாப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்மே-09. அட்சய திருதியை தினம்

Leave a Comment

Archives