தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

21 ஏப்ரல் 2019

அம்மா கணக்கு – இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு

சிறகு இரவிச்சந்திரன்

Spread the love

REVIEW OF AMMA KANAKKU

 

0

நீல் பாட்டே சனாட்டா எனும் இந்திப் படம் தமிழ் பேசியிருக்கிறது. கொஞ்சம் கொச்சையாக இருந்தாலும் கோர்வையாக இருக்கீறது. இயக்குனர்  அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு நல்வரவு.

சாந்தியெனும் எனும் அமலா பால் விஜய்யின் ஒரே மகள் பத்தாவது படிக்கும் அபிநயா. படிப்பில் நாட்டமில்லாமல், முக்கியமாக கணக்கில் கோட்ட்டிக்கும் மகளை உசுப்பேற்றி படிக்க வைக்க சாந்தி எடுக்கும் முடிவுதான் மீண்டும் பள்ளியில் சேர்வது. முதலில் ரங்கநாதன் எனும் சமுத்திரக்கனிக்கு இஷ்டமில்லை. டாக்டர் நந்தினியின் ( ரேவதி ) வற்புறுத்தலால், அபி படிக்கும் அதே பள்ளியில், அதே பத்தாம் வகுப்பில் சேர்கிறாள் சாந்தி. அம்மா பெண்ணிற்கும் இடையேயான கல்வி பந்தயம் வெற்றியில் முடிந்ததா என்பதே முடிவு.

அமலா பால் நல்ல நடிகை என்பதில் சந்தேகமில்லை. அதை மீண்டும் சாந்தியாக ஊர்ஜிதப்படுத்துகிறார். ஆனால் அபியாக வரும் யுவலட்சுமி எனும் சிறுமி அதிக அலட்டல் இல்லாத முகபாவங்களால், அமலாவுக்கு சவால் விடுகிறார். இன்னொரு தம்பி ராமையாவாக உடல் மொழிகளீல் புன்னகையை வரவழைக்கும் சமுத்திரக்கனி இன்னொரு ப்ளஸ். ஒரு மூக்கு கண்ணாடி போட்டிருந்தால் கிஷ்மு திரும்பி வந்து விட்டாரோ என்று நினைக்கத் தோன்றும் நடிப்பு.

திரைக்கதை, வசனம், இயக்கம் எனும் பயணித்திருக்கும் அஸ்வினி, பின்பாதி பிரச்சார தொனிகளையும், படம் நெடுகலான இருட்டு பதிவுகளையும் தவிர்த்திருந்தால் இது கலைப் படம் எனும் கோட்டை தாண்டியிருக்கும்.

நல்ல கதை கொண்ட படங்களில் இளையராஜா சோடை போவதேயில்லை. இதிலும் அப்படித்தான். வசனமற்ற காட்சிகளில் அவரது இசை வள்ளுவ வாக்கியம் போல் ஒலிக்கிறது. ஷார்ட் அன்ட் ஸ்வீட்.

வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து சிக்கலான கணிதப் புதிர்களை புரிந்து கொள்ளலாம் என்கிற புதிய கோட்பாடு சுவாரஸ்யம் கூட்டுகிறது. அதை ஒட்டிய காட்சிகளில் தாய்க்கும் மகளுக்கும் வேறு வேறு அனுபவங்கள் மூலம் ஒரே கணிதப் புதிரை வெல்வதைக் காட்டுவது புத்திசாலித்தனமான திரைக்கதை.

109 நிமிடங்களே ஓடி அசத்தும் இந்தப் படம் ‘ அட முடிந்து விட்டதா?’ என்று ஏங்க வைக்கீறது.

0

 

Series Navigationதொடுவானம் 125. முன்றாம் ஆண்டின் முதல் நாள்..நெஞ்சிலிருந்து ஒரு சொல் – ரவி சுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’

Leave a Comment

Archives