தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 நவம்பர் 2018

சகிப்பு

ரத்தினமூர்த்தி

உறவினர் எவரேனும் வந்தால்
நலம் விசா¡¢க்கும் முன் கேட்பது
உங்க ஊர்ல மழை உண்டா என்று
மழைக்காக மேகத்தை பார்ப்பதும்
வானத்தை வெறிப்பதுமாய்
பல நாட்கள் வாடிப்போனதுண்டு
மழை மட்டும் இல்லாவிட்டால்
உலகில் எந்த ஒரு வேலையும்
நடக்கதென நினைப்பதுண்டு
கொளுத்தும் வெயிலையும்
படுத்தி எடுக்கும் வெக்கையையும்
பொறுத்துக்கொள்ள இயலவில்லை
பெரும்பாலான நேரங்கள்
இல்லாத மழைக்கான ஏக்கத்திலேயே
கழிந்து கொண்டிருந்தது
எப்போது விதைப்பது
எப்போது வளர்வது
எப்போது அறுவடை செய்வது
அதற்கெல்லாம் மழை எப்போதெனும்
எதிர்பார்ப்பு ஓங்கியிருந்தது
இப்போது மழை வந்தால்
எப்படி இருக்கும் என்ற ஆசையும்
தொடர்ந்த படியே இருந்தது
அழையாத விருந்தாளிபோல
ஒருநாள் சட்டென வந்துவிட்ட
மழைகண்டு பதறிய நான்
சாளரத்தையும் கதவையும் அடைத்து
முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன்
மழையால் ஒரு வேலையும் ஓடாதென்று.

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)கூடு

Leave a Comment

Archives