தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

இரு கவிதைகள்

பத்மநாபபுரம் அரவிந்தன்

Spread the love
aravindhan1
 
 
பொட்டுகள்

வீட்டு விசேஷம் முடிந்து
அனைவரும்
போன பின்பும்
மீட்டுத் தருகின்றது
பல பெண்களின் நினைவுகளை
முகம் பார்க்கும் கண்ணாடியில்
ஒட்டியிருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுகள் …
குறிகள் 
எவ்விடத்தில் காற்புள்ளி
எவ்விடத்தில்  அரைப் புள்ளி
எவ்விடத்தில் ஆச்சரியக் குறி
எதனிடையில் குற்றெழுத்து
எனும் இடத்தில் கேள்விக்குறி
இவையனைத்தும் தெரிந்தபோது
தொங்கிப் போய் கிடக்கிறது
எழுதி முடித்தக் கவிதை..
Series Navigationஅறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா

Leave a Comment

Archives