கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)

author
0 minutes, 7 seconds Read
This entry is part 9 of 22 in the series 4 டிசம்பர் 2016

கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16) சப்னா புக் ஹவுசில் நடைபெற்றது.நூல் வெளியீடும் நூல் அறிமுகங்களும் திறனாய்வுகளும் நடைபெற்றன.

சுப்ரபாரதிமணியனின் “ கோமணம்“நாவலை புவியரசு வெளியிட ஸ்ரீபதிபத்மநாபா, அம்சப்ரியா, ராகவன்்தம்பி, கண்மணி ராஜா முகமது, சி.ஆர் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சுப்ரபாரதிமணியன் நாவல் “கோமணம்” வெளியீடு · .மற்றும் படைப்பரங்கம்..

“ தினசரி யாத்திரை-நடை பயணம் – உடலுக்கு ஆறுதல் தருவது. கிரிவலம், கோவிலுக்குப் பாதயாத்திரை என்பது பக்தர்களின் மனதிற்கு நிம்மதி தரும் ஆன்மீக காரியம், இப்போது தமிழ்நாட்டில் பல கோவில்களின் விசேசங்களையொட்டி   ஆன்மீக பக்தர்கள் பக்தி யாத்திரை மேற்கொள்கிறார்கள். அதில் மிக முக்கியமானது பழனி கோவிலுக்கு தைப்பூச சமயத்தில்  நடைபெறும் பாத யாத்திரை. தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்று கேரளாவிலிருந்தும் பலர் அவ்வகைப் பயணம் மேற்கொள்கிறார்கள்.வெளிநாட்டினரும் கூட.

அப்படி பழனி பாத யாத்திரையின் போது நடக்கும் நிகழ்வுகள், அனுபவங்களை இந்நாவல் சொல்கிறது. பனியன் தொழிலாளர்கள், பனியன் உற்பத்தி செய்யும் சிலர், பலதரப்பட்ட பெண்கள், இளைஞர்கள் என்று பலர் அப்பயணத்தை மேற்கொள்கிறார்கள்.வெவ்வேறு வகையான சடங்குகள் தொன்மக் கதைகள் , பக்தி சார்ந்த நம்பிக்கைகள், சிறுசிறு சடங்குகள் என்று நான்கு நாட்கள் பக்திப் பயணத்தை இந்நாவல் விவரிக்கிறது. என்றார் சுப்ரபாரதிமணியன்

 

கோவை இலக்கியச் சந்திப்பின் 73 ஆம் நிகழ்வின் முக்கிய நிகழ்வு 27 .11.2016 ஞாயிறு காலை இடம் -சப்னா புக் ஹவுஸ் வடகோவை சிந்தாமணி அருகில் கோவை கோமணம் ( பெற 94867 32652 )

 

வரவேற்புரை- புவியரசு அய்யா

தொகுப்பு – இளஞ்சேரல் அவர்கள்

சுப்ரபாரதி மணியன் அவர்களின் ‘கோவணம்’ நாவல் வெளியீடு.

கனவுப் பிரியனின் ‘கூழாங்கற்கள்’ நூல் அறிமுகம் – கவிஞர் அகிலா.

கண்மணி ராசா முகம்மது அவர்களின் ‘நீங்கள் அறையவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை’ நூல் அறிமுகம் – பிர்தௌஸ் ராஜகுமாரன்

ஏற்புரை – கண்மணி ராசா முகம்மது அவர்கள்

கோவணம் நாவல் குறித்தும் திருப்பூர் திரைப்பட விழா குறித்தும் சுப்ரபாரதி மணியன் அவர்கள்.

பாலசுப்ரமணியம் பொன்ராஜ் அவர்களின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ நூல் அறிமுகம் – ஸ்ரீபதி பத்பநாபா

அண்டனூர் சுரா அவர்களின் ‘சிறுகதைகள்’ நூல் அறிமுகம் – அம்சப்ரியா

ஏற்புரை – அண்டனூர் சுரா

நன்றியுரை – பொன் இளவேனில்

Series Navigationஅழியா ரேகைபண்ணைக்காரச்சி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *