தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

தேசபக்தி!!

அருணா சுப்ரமணியன்

எழுப்பிய அலாரத்தை 

மீண்டும் மீண்டும் 

தூங்க வைத்து 

நண்பகலுக்கு மேல் 

நிதானமாக எழுந்து ..

அன்னை அளிக்கும் 

அன்பு அன்னம் 

அரைச்சானுக்குள்  

அரைகுறையாகத் தள்ளி 

அப்பன் பேச்செல்லாம்

அனாதைகளாக்கி 

அவர் வியர்வையில் பூத்த 

புதுத்தாள்கள் ஏந்தி 

புத்தம்புது புரவியில் ஏறி

சிநேகித சுற்றத்தோடு 

சிவப்பு விளக்கிலும் 

சீறிப்  பாய்ந்து 

சாலையோர 

சிற்றுண்டி சுவைத்து

மிச்சத்தைத் தெருவில் வீசி 

அறுபதடி தலைவனுக்கு 

அபிஷேகம் முடித்து 

ஆர்பாட்டமாய் 

அரங்கு நுழைந்து 

“ஜன கன மன” பாடி 

நாட்டைக் காப்பான் 

என் தேசபக்தன்!!!

 

 

Series Navigationநீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்புஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1

Leave a Comment

Archives