ஞாயிறு மதியம் 3 மணி முதல் சேவ் அலுவலக வளாகம், தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம் வீதி, திருப்பூரில் நடைபெற்றது.கவிஞர் ஜோதி தலைமை தாங்கினார்.
– பேராசிரியர் செல்வியின் படைப்புகள் பற்றி கோவை சுபசெல்வி விரிவாகப்பேசினார். பேராசிரியர் செல்வி ஏற்புரையில் தமிழகப்பெண் இலக்கியவாதிகளூடே பெண்ணியத்தின் நிலை பற்றிப் பேசினார்.
நூல்கள் அறிமுகம்:
சேவ் வெளியிட்ட “ களவாடப்பட்ட குழந்தைப்பருவம் “ ( குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் ) ,சுப்ரபாரதிமணியனின் “ சிவப்புப் பட்டியல் “ ( அழியும் உயிரினங்கள்) பற்றியது ) அண்டனூர் சுராவின் “ ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை “ சிறுகதைத்தொகுப்பு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
“ கறுப்புப்பணமும் பொதுமக்களின் கஷ்டங்களும் “ என்பது பற்றி அருணாசலம் பேசினார்.
திருப்பூரில் நடைபெற்ற திரைப்பட விழா பற்றி விரிவாகப்பேசினார் சுப்ரபாரதிமணியன். ” சமூக யதார்தத்திற்கு மாறாக கலைப்படைப்புகள் எழுப்பும் தார்மீகக் கேள்விகளை இத்திரைப்பட விழாவும் எழுப்பியது.. வரலாற்றுக் கலாச்சாரத்தோடு இணைந்த சர்வதேச மனிதனாக மாற்றும் முயற்சியில் இப்படங்கள் அமைந்திருந்தன. “ என்றார். தமிழர்களின் வாழ்க்கையை பிராஞ்ச் தேசத்தில் எடுத்துக்காட்டிய தீபன் படம் பற்றி எடுத்துரைத்தார். தீபன் என்ற பிரான்ஸ் தேசத்துப்படம் இலங்கையிலிருந்து அகதியாகசெல்லும் ஒரு பெண் ( யாழினி ) தன்னோடு குடும்பம் என்று காட்டி ஒரு ஆணையும் ஒரு குழந்தையையும் கூட்டிச் சென்று பிரான்சிற்குச் சென்று அவலப்படுவதைச் சொன்னது. இலங்கையின் போர்ச்சூழலை விட்டு விலக ஆசைப்பட்டிருந்தாலும் பிரான்ஸில் காணப்படும் போதைப்பொருள் கடத்துகிறவர்களின் மத்தியலான யாழினியின் வாழ்க்கை புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறின சிவதாசனின் ( எழுத்தாளர் ஷோபாசக்தி இப்பாத்திரத்தில்) மனச்சிரமங்களோடு சொல்லியது. மூன்று பேரும் குடும்பமில்லை . ஆனால் ஒரே குடும்பமாக காட்டிக் கொள்ளும் சூழலில் இரு பெண்களின் நிலை இதில். தமிழ் வசனங்கள், பல தமிழ்ப்பாடல் வரிகள் பெரும்பான்மையாக இடம்பெற்று இத்திரைப்படவிழாவில் தமிழ்ப்படம் இல்லாதக் குறையைப் போக்கியது எனலாம்.இலங்கையிலோ பிரான்ஸிலோ அந்நியப்பட்டுப்போன மனிதர்களை காட்டியது. பேராசிரியர் செல்வியின் குறும்படங்களின் வெளிப்பாட்டுத்தன்மை குறித்து துருவன் பாலா பேசினார்.
– பேராசிரியர் செல்வியின் படைப்புலகம் ( கோவை செல்வியின் இரு குறும்படங்கள் , மூன்று நூல்கள் ) பற்றி கோவை சுபசெல்வி விரிவாகப்பேசினார். ஏற்புரையில் தமிழகப் பெண் இலக்கியவாதிகளூடே பெண்ணியத்தின் நிலை பற்றிப் பேசினார். சேவ் வெளியிட்ட “ களவாடப்பட்ட குழந்தைப்பருவம் “ ( குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் நூல் பர்றிய அபிப்ராயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. குழந்தைப் பருவத்தை வேட்டையாடாதீர்கள் பெற்றோர்களே. அவர்கள் அந்தந்த வயதில் குழந்தைகளாகவே இருக்கட்டும்.உங்கள் வீட்டில் பெரிய தொலைக்காட்சிப் பெட்டி வாங்க, நீங்கள் வாகனம் வாங்க உங்கள் குழந்தைகளை தொழிலாளிகளாக்காதீர்கள். வெளிநாடுகளில் குழந்தைகள் முழு ஆளுமையுடன் வளர்கிறார்கள். வாழ்கிறார்கள், குழந்தை ஆளுமை முழு வாழ்வின் ஆதாரம். அறிவு பள்ளிப் படிப்பில் மட்டும் இல்லை . பொது புத்தக வாசிப்பில் இருக்கிறது.அனுபவத்தில் இருக்கிறது.பயிற்சியை தொழிலாளச் செய்தால் அது தீமை.குழந்தைகளைத் தொழிலாளிகளாகும் பெற்றோர் அடிப்படை உரிமையில் கைவைக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள் மீதான பல்வேறு அழுத்தங்கள் அவர்களை பிறகு வன்முறைகளாக்குகிறது.அது வேண்டாம்..குழந்தைகளாகவே வளர விடுங்கள் என்றக்கருத்து வலியுறுத்தப்பட்டது. .
..(ஒருங்கிணைப்பு ஜோதி 90255 26279 , மனோகர் 81242 83081 )
- காலநிலையும் அரசியலும்
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது.
- சரியும் தராசுகள்
- ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இரு கோடுகள் (நான்காம் பாகம்) -நிறைவுப் பகுதி
- பூமிக்கு ஆபத்து? (அதிர்ச்சி தகவல்)
- கடன் அட்டை, ஏடிம் அட்டை ஹேக்கிங்
- அறிவியல் கதை – எனக்கு ஒரு மகன் பிறந்தான்
- கனவு : இலக்கிய நிகழ்வு
- பாரதியாரின் நவீனத்துவம்
- வெண்ணிற ஆடை
- சோ – மானுடத்தின் பன்முகம்
- தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 & 3
- திரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்
- இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016