1.பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர்.
- 48 நாடுகள் அழியும்?
3.பூமியை தாக்க நிலவில் வேற்றுக்கிரகவாசிகள்
4.இருண்ட கிரகத்தால் பூமிக்கு ஆபத்து?
———————————————————————————————————————–
1.பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிக பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த
காஸ்மிக் கதிர் கண்காணிப்பு ஆய்வு மையத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் தகவலின்படி, சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து பிளாஸ்மா கதிர்கள் பெரிய மேகம் போன்று வெளியேறியுள்ளது. இது அதிக வேகத்தில் பூமியின் மீது மோதியுள்ளது. இதனால் பூமியின் காந்தபுல அடுக்கு பெருமளவில்
அழுத்தப்பட்டுள்ளது. புவிகாந்த புயல் அதன்பின் கடுமையான புவிகாந்த புயல் தோன்றியுள்ளது. இதனால் அதிகளவிலான காஸ்மிக் கதிர்கள் வெளியேறியுள்ளது. இந்த வெளியேற்றத்தினால் பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அடையாளம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் ஆய்வு இந்தியாவில் தமிழகத்தின் ஊட்டியில் அறிவியல் ஆய்வுக்கான டாடா இன்ஸ்டியூட்டில் காஸ்மிக் கதிர் ஆய்வகம் அமைந்துள்ளது. இங்கு கிரேப்ஸ்-3 முவான் என்ற தொலைநோக்கி உள்ளது.
இது, கடந்த ஆண்டில் 20 ஜிகா எலக்ட்ரான் வோல்ட் அளவுள்ள விண்வெளி காஸ்மிக்
கதிர்களானது 2 மணிநேரம் வரை வெளியாகியுள்ளது என பதிவு செய்துள்ளது.
இந்த பிளாஸ்மா மணிக்கு 25 இலட்சம் கி.மீட்டர்கள் வேகத்தில் நமது பூமி
மீது மோதியுள்ளது. இதனால் பூமியின் ஆரம் போன்று 11 முதல் 4 மடங்கு என்ற
அளவில் பூமியின் காந்தபுல அடுக்கில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இது கடுமையான புவிகாந்த புயலை தோற்றுவித்துள்ளது. அதனால் பூமத்திய ரேகை
பகுதியில் இருந்து அதிக தொலைவில் அமைந்துள்ள பல நாடுகளில் ஆரோரா
போரியாலிஸ் எனப்படும் பச்சை நிற ஒளிகள் தோன்றுவதும் மற்றும் வானொலி
சமிக்ஞைகள் மறைவதும் ஆக இருந்துள்ளது. கதிரியக்க பாதிப்பு இதனை அடுத்து பூமியின் காந்தபுல அடுக்கானது அதன் ஆரத்தினை போன்று பல இலட்சம் கி.மீட்டர்கள் விரிவடைந்துள்ளது. இது சூரிய மற்றும் காஸ்மிக் கதிர்களின் தொடர்ச்சியான வெளியேற்றத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் முதல் வழியாக செயல்பட்டுள்ளது.
அதனால் அதிக ஆற்றல் கொண்ட கதிரியக்கத்தில் இருந்து நமது பூமியின்
வாழ்வினங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதுபற்றி பிரவதா கே. மொஹந்தி உள்ளிட்ட கிரேப்ஸ்-3 ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தொடர்ச்சியான காந்தபுல இணைவினால் பூமியின் காந்தபுல அடுக்கில் தற்காலிகம் ஆக வெடிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த இணைவினால் குறைந்த ஆற்றல் கொண்ட விண்வெளி காஸ்மிக் கதிர் துகள்கள் வளிமண்டலத்திற்குள் நுழைந்துள்ளன என தெரிய வந்துள்ளது.
இந்த வெடிப்பு கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் திகதி நள்ளிரவில் இந்த வெடிப்பு கிரேப்ஸ்-3 முவான் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டது. இதில் கிடைத்த தகவல்களை, அந்த ஆய்வகத்தின் இயற்பியலாளர்கள் அடங்கிய குழு தங்களது முயற்சியில் உருவாக்கிய 1280-கோர் கம்ப்யூட்டிங் முறையினால் பல
வாரங்கள் ஆய்வு செய்துள்ளது. சூரிய புயல்கள் மனித நாகரீகத்திற்கு பெரிய இடையூறினை ஏற்படுத்த கூடியவை. இதனால் பெரிய மின்இணைப்பு தொடர்கள், ஜி.பி.எஸ். அமைப்புகள், செயற்கைக்கோள் இயக்கங்கள் மற்றும் தொலைதொடர்புகளில் பெரும் பாதிப்பு ஏற்பட கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் கூறுகையில், “பூமியின் காந்தப்புலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மனிதர்களுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படாது. ஆனால் தொலைத்தொடர்பு உபகரணங்கள் பாதிக்கப்படலாம். கடந்த 1886ஆம் ஆண்டு காந்தபுலத்தில் விரிசல் ஏற்பட்டது. அப்போது தந்தி கம்பங்கள் செயல் இழந்தன” என்று அவர் கூறியுள்ளார்.
- 48 நாடுகள் அழியும் ஆபத்து ?
புவி வெப்பமயமாதலால் 48 நாடுகள் அழியும் ஆபத்து இருப்பதால் 2050ம்
ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 100 சதவீதம் பயன்படுத்த 48
நாடுகளும் தீர்மானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் புவி அதிக அளவு வெப்பமாகி
வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக
உருவெடுத்து கடல் நீரில் சேர்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம்
அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதே நிலை நீடிக்குமானால், பூகோள ரீதியாக பல்வேறு நாடுகள் அழியும் நிலை
ஏற்படும். இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இதை சாமளிப்பதற்காக தீவிர
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதில் ஒரு பகுதியாக தற்போது ஐநாவில் நடைபெற்று வரும் பருவ நிலை மாற்ற
மாநாட்டின் போது பூமியின் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவர சில
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை, சுமார் 1.5 டிகிரி செல்சியல்ஸ் அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று குறித்த நாடுகள் அனைத்தும் தீர்மானித்துள்ளன என கூறப்படுகிறது. இதனால் 2050 ஆம் ஆண்டிற்குள் புதுபிக்கத்தக்க எரிசக்தியை 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 48 நாடுகள் கூட்டமைப்பில்,
Afghanistan, Haïti, Philippines, Bangladesh,
Honduras, Rwanda, Barbados, Kenya, Saint Lucia, Bhutan, Senegal,
Burkina Faso, Madagascar,South Sudan,Cambodia,Malawi, Sri
Lanka,Comoros, Maldives, Sudan, Costa Rica, Marshall Islandsza,
Tanzania, Democratic Republic of the CongoMongolia, Timor-Leste,
Dominican Republic, Morocco, Tunisia, Ethiopia, Nepal, Tuvalu Fiji,
Niger, hanuatu, Ghana, Palau, Vietnam, Grenada, Papua New Guinea,
Yemen, Guatemala உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன
3.பூமியை தாக்க நிலவில் வேற்றுக்கிரகவாசிகள்
நிலவு பூமியுடன் இணைந்தே சுற்றி வருகின்றது, நீ இல்லாவிட்டால் நான் இல்லை
என பூமியும் நிலவும் ஒருவருக்கு ஒருவர் முக்கியமானவர்கள் என்பதே தொன்று
தொட்டு நாம் நம்பி வரும் கூற்று. என்றாலும் நிலவைப் பற்றிய மர்மங்கள் இப்போதும் இருக்கின்றன. தற்போது புதிதாக சொல்ல வருவது என்னவெனில் நிலவு இயற்கை இல்லை செயற்கை. அதனையும் தாண்டி றே்றுக்கிரகவாசிகள் பூமியை தாக்க நிலவில் இருந்து நோட்டம் விட்டு கொண்டிருக்கின்றார்கள்.
அந்தவகையில் பூமியை அவதானிக்க, இரகசிய தளமாக திட்டமிட்டு அமைக்கப்பட்டதே நிலவு, என வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் அதற்காக ஆதாரங்கள் சிலவற்றினையும் தெரிவித்துள்ளனர். அவையாவன, நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட சில கூறுகள் நிலவிற்கு பொறுத்தம் இல்லாதவைகள். அங்குள்ள பாறைகளில் இயற்கையாக கிடைக்காத மைய்க்கா, பிராஸ், யுரேனியம்236 அத்தோடு நெருப்பியம்237 போன்ற கூறுகள் உள்ளன. இதில் யுரேனியம்236 என்பது கதிரியக்கம் மற்றும் அணுசக்தியின் பின்னர் பெறப்படும் ஒன்றாகும், அத்துடன் மேற்கூறப்பட்ட இரசாயன கூறுகள் இயற்கையாக உருவாகியவை இல்லை. அடுத்து, பூமியில் காணப்படும் டைட்டானியம் பூமியை விடவும் நிலவுப் பாறைகளில் பத்து மடங்கு அதிகமாக கலந்திருக்கின்றது. பூலோக வாசிகள், சூப்பர்சொனிக் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விண்கலம் போன்றன வற்றை அமைக்கவே பயன்படுத்துகின்றனர். ஆனாலும் நிலவுப் பாறைகளை ஆய்வு செய்தவர்கள் இவை எப்படி நிலவுப்பாறைகளில் வந்தன என்பதை கூற மறுக்கின்றனர். 1969ஆம் ஆண்டு நவம்பர், நாசா சந்திரனில் ஒரு வெடிப்பு தாக்கத்தை
ஏற்படுத்தி ஆய்வு செய்வதற்காக லூனர் மாடலை lunar module நிலவின் மேற்
பகுதியில் மோதச் செய்தது. அந்த மோதலின் பின்னர் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு நிலவில் மணிச் சத்தம் போல் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது சாத்தியப்படக்கூடிய ஒன்று அல்ல. இயற்கையான பாறையில் அல்லது மேற்பரப்பில் மோதும் போது இப்படியான அதிர்வு ஏற்படுவது சாத்தியம் இல்லை. மேலும், ஏனைய கிரகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கூறுகள் திடமான மையப்பாகம் கொண்டவைகள், எனினும் நிலவில் திடமான மையப்பகுதி இல்லை எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோன்று, நிலவின் உட்பகுதி வெற்று இடைவெளியாக, அல்லது மிகக் குறைவான
தீவிர உள்ளமைப்பு ( very low intensity interior ) கொண்டதாக இருக்கின்றது
என உறுதியாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பதும் ஆச்சரியந்தான்
மற்றும் சூரிய மண்டலத்தில் மிகத் துல்லியமான ஒரு வட்ட கோளப்பாதை
(சுற்றுவட்டப்பாதை) கொண்டது நிலவு மட்டும் தான். பூமியை விட சுமார்
800000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது நிலவு என்கின்றனர் ஒரு சிலர். ஆனாலும்
பூமியின் சிதறலே நிலவு என்கின்றனர் ஒரு சிலர், ஆனால் உண்மைகள்
கூறப்படவில்லை. சூரியக் குடும்பத்தின் எந்தவொரு பண்பும் நிவவோடு ஒத்துப் போகவும் இல்லை, அத்துடன் நிலவை பூமியில் எங்கிருந்து பார்த்தாலும் ஒரு பக்கம் மட்டுமே
தெரியும். பூமி சுற்றும் போது அதற்கு ஏற்றாப்போல் துல்லியமாக செயற்படுகின்றது
நிலவு. இத்தனை துல்லியம் இயற்கையாக சாத்தியம் இல்லை, அமெரிக்கா நிலவில்
கால் வைத்ததும் பொய் என்றுதான் கூறப்படுகின்றது. அதன்படி நிலவு தூசிகள் மற்றும் பாறைகளை கொண்டு 3 மைல் தடிமனான வெளி அடுக்கு கட்டப்பட்டு, நிலவிற்குள் சுமார் 20 மைல் சுற்றளவில் அதிகளவான எதிர்ப்பு சக்தி மிக்க கூறுகளைக் கொண்டு சக்திமிக்க ஷெல் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆதாரங்களின் காரணமாக நிலவு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது, குறிப்பான பூமியை வேற்றுக்கிரக வாசிகள் நோட்டம் இடுவதற்காகவே கட்டப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இப்படியாக திட்டமிட்டு ஓர் தளத்தை அமைத்து பூமியை தாக்க காத்துக்கொண்டிருக்கின்றார்கள் வேற்றுக்கிரக வாசிகள். ஆனாலும் பூமியை பற்றி முழுதாக ஆய்வு செய்த பின்னர் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம், ஆகவே இந்த இரகசிய தளம் பற்றிய உண்மை விரைவில் வெளிவரும் எனவும் ஆள்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2016 பிறந்ததன் பின்னர் வேற்றுக்கிரகவாசிகள், பூமிவாசிகளின்
வார்த்தைகளில் அன்றாடம் வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள்.
ஒருபக்கம் வேற்றுக்கிரகவாசிகள் இல்லை என கூறப்பட்டாலும், மர்மமான
விடயங்களை மட்டும் விஞ்ஞானிகளும், மேற்குலகமும் ஏனோ வெளிப்படுத்துவது
இல்லை. ஆனாலும் அன்றாடம் வேற்றுக்கிரகம் தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுக் கொண்டு இருக்கும் போது, இன்னுமொரு புதிய ஆதாரம் நேற்று வெளிவந்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட சூப்பர் மூன் சந்தர்ப்பத்தின் போது
வேற்றுக்கிரகவாசிகள் நிலவை வட்டமடித்தது வசமாக கேமராவில் சிக்கியுள்ளது.
இது தொடர்பில் வெளியான காணொளியில் மர்மப்பொருள் ஒன்று நிலவை சுற்றி
பயணிக்கின்றது. இது நிச்சயமான வேற்றுக் கிரக வாசிகளின் பறக்கும் தட்டு என
ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் உண்மைகளை மட்டும் ஆய்வாளர்கள் கூற மறுக்கின்றனர். மறைக்கும் உண்மைகள் இனிமேல் வெளிவரும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல உண்மையும் கூட.
4.இருண்ட கிரகத்தால் பூமிக்கு ஆபத்து?
இது வரையில் பல தடவைகள் பூமி அழிந்து போகும் என பல்வேறு வகையான கருத்துகள் கூறப்பட்டது. 2012ஆம் ஆண்டும் இதே போன்றதொரு கதை பூதாகரமாக வெடித்தது. ஆனாலும் மறுநாள் நல்ல பொழுதாகவே விடிந்தது முதல் உலக அழிவு தொடர்பில் பெரிதாக யாரும் நம்பிக்கை வைப்பதில்லை. எனினும் மீண்டும் ஓர் தடவை அதே போன்றதொரு அச்சம் மேற்குலகத்தை தொற்றிக் கொண்டுள்ளது. இப்போது உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு அமைய மீண்டும் உலக முடிவு அச்சம் வலுவடைந்துள்ளது. இருண்ட கிரகம் planet x nibiru என அழைக்கப்படும் ஓர் கிரகம் பூமி மீது மோத தயாராக எமது தலைக்கு மேலே சுற்றி வருகின்றது என பல கதைகள் ஆரம்பத்தில் கூறப்பட்டன.
இந்தக் கிரகம் 1995ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இது பூமியை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. இது கூடிய விரைவில் பூமியை அழிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டாலும் அவை வெளிப்படுத்தப்பட வில்லை. ஆனாலும் அது பொய்யான செய்தி என்பது மட்டுமே அதிகளவில் பரப்பப்படுகின்றது. விண்வெளி ஆய்வில் முன்னிலையில் உள்ள நாசாவும் கூட இருண்ட கிரகம் உள்ளது என்றும் அது பூமியில் மோதும் என ஒத்துக் கொண்டுள்ளது. புளூட்டோ கிரகத்தினை தாண்டி மிகவும் நீள் சுற்றுப்பாதையில் எங்கள் சூரியனையும் சுற்றி வருகிறது, என குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள் இது கோளா அல்லது விண் கல்லா என்பதனை மட்டும் வெளிப்படையாக கூறாமல் planet x nibiru என்றே பெயரிட்டுள்ளனர்.
இப்போது பூமியில் அடுத்தடுத்து இடம்பெறும் புவி அதிர்வுகள் மற்றும் கடல் கொந்தளிப்புகளின், கண்ட நகர்வுகள் மூலம் இந்த கிரகம் பூமியில் மோத வேகமாக பயணித்து வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இருக்கத்தான் செய்கின்றது அதாவது இந்த இருண்ட கிரகம் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட கருத்துகளுக்கு அமையவே இது மேலும் வலுப்பெற்றுள்ளது. குறித்த கிரகம் பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழையும்போது பூமியின் காந்தப்புலனிலும், ஈர்ப்பு விதிகளிலும் பல மாற்றங்கள் ஏற்படும் அதனால் பல கடற்கொந்தளிப்புகளும் ஏற்படும்.
அதேபோன்று பூமி மீது பல விண்கற்கள் விழும் எனவும் பல எதிர்வு கூறல்கள் கூறப்பட்டது அதே போன்று இப்போது குருகிய காலப்பகுதிக்குள் பல மாற்றங்கள் பூமியில் ஏற்பட்டும் வருகின்றது. இந்த காரணத்தினால் பூமியின் அழிவு நெடுந்தொலைவில் இல்லை என ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர். ஆனாலும் இப்போதைய மாற்றங்களுக்கு அண்மையில் ஏற்பட்ட சூப்பர் மூன் தான் காரணம் என மாற்றுக் கருத்துகள் கூறப்படுகின்றன. எனினும் சூப்பர் மூன் பாதிப்புகளை விடவும் planet x nibiru தொடர்பிலான பாதிப்புகள் ஏற்கனவே ஆய்வாளர்கள் கூறிவிட்ட காரணத்தினாலேயே இது தொடர்பிலான அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று அண்மையில் இந்த இருண்ட கிரகம் பூமியின் சுற்று வட்டத்தில் நுழைந்து விட்டதற்கான ஆதாரம் வெளிவந்தது ஆனாலும் மறைக்கப்பட்டு விட்டது.
இந்தக் கிரகம் பூமியில் மோதுவதற்கு முன்னரே பால்வீதியில் பல மாற்றங்கள் ஏற்படும், அதே போன்று கோள்களின் பாதைகளில் தடுமாற்றம் ஏற்படும் எனவும் கூறப்பட்டது இதுவும் இப்போது நடந்து விட்டது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஒரு தரப்பினர் இது வேற்றுக்கிரகவாசிகளின் கிரகம் எனவும் கூறுகின்றனர். அண்மையில் எமது சூரியனில் இருந்து சக்தியை உறுஞ்சும் மர்மப் பொருள் தொடர்பில் நாசா காணொளி ஒன்றினை வெளியிட்டது. இதனால் அந்தக் கூற்றும் ஒரு வகையில் மெய்படுகின்றது என்றே கூறவேண்டும். எவ்வாறாயினும் உலக அழிவிற்காக சர்வதேசம் மட்டும் நொடிக்கு நொடி ஆயத்தமாகவே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
J.P.தக்சணாமூர்த்தி D.EEE, BE, dhakshna@hotmail.com
- காலநிலையும் அரசியலும்
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது.
- சரியும் தராசுகள்
- ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இரு கோடுகள் (நான்காம் பாகம்) -நிறைவுப் பகுதி
- பூமிக்கு ஆபத்து? (அதிர்ச்சி தகவல்)
- கடன் அட்டை, ஏடிம் அட்டை ஹேக்கிங்
- அறிவியல் கதை – எனக்கு ஒரு மகன் பிறந்தான்
- கனவு : இலக்கிய நிகழ்வு
- பாரதியாரின் நவீனத்துவம்
- வெண்ணிற ஆடை
- சோ – மானுடத்தின் பன்முகம்
- தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 & 3
- திரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்
- இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016