எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?”

This entry is part 4 of 12 in the series 8 ஜனவரி 2017
அன்பு நண்பர்களுக்கு,

காவ்யா வெளியீடாக எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?” தமிழின் முதல் மேத்தமேடிக்கல் ஃபிக்ஷன் நாவலாக வெளியாகியிருக்கிறது.

தமிழில் Mathematical Fiction என்று கைகாட்டப்படும் நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களாகவே இருக்கின்றன..

அகல் பதிப்பகத்தின் “எண்ணும் மனிதன்” , இரா. நடராசனின் நம்பர் பூதம் போன்றவைகள் மொழிபெயர்ப்பு நூல்களே.. கிட்டத்தட்ட shakuntala devi puzzle புத்தகம் போன்றது. Mathematical Fiction என்கிற பகுப்புக்கு தகுதி பெறுவதற்கு அந்த புனைக்கதையின் Plot எண்களால் திசை திரும்பியாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. நமக்கென்று சொந்தமாக ஒரு Mathematical Fiction நூல் என்கிற இடம் இத்தனை காலமும் காலியாகவே இருந்திருப்பது வருத்தமளிக்கிறது… “உங்கள் எண் என்ன?” அந்த இடத்தை நிரப்பும் என்று நம்புகிறேன்..

1. நம் ஊரில் பெண் பிள்ளைகளிடம் பிறந்தது முதலே பெரும்பாலும் சொல்லப்படும் வரி,
‘உனக்குன்னு ஒருத்தன் எங்கயோ பொறந்திருக்கான்’ என்பதுதான். அல்லவா?
ஆனால், தன்னைவிட வயது குறைந்த ஆண்களை மணம் செய்யும் பெண்களிடம் இந்த வரி பிறந்தது முதலே சொல்லப்படுவது எத்தனை அர்த்தமற்றதாக இருக்கும்?

2. 1990ல் பிறந்த பெண்ணுக்கான இறைவன் விதித்த துணை 1981 லேயே பிறந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நாம் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கையில் அதிக பட்சம் எத்தனை வருடங்கள் வயது வித்தியாசம் பார்ப்போம்? 2-3 வயது? நகரத்து பெண்கள் இதையே இம்பாசிபிள் என்பார்கள்.

சரி. இப்படி ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்தால் அது இறுதியில் என்னாகும்?

4000 கடவுள்கள் கொண்ட நம் சமூகத்தில் கடவுளை எத்தனைக்கெத்தனை நம்புகிறோமோ அத்தனைக்கத்தனை கடவுளை அவமதிக்கவும் செய்கிறோம். இல்லையெனில், இறைவன் 1981 லேயே 1990ல் பிறந்த பெண்ணுக்கான துணையை வைத்திருக்க, நாம் 2-3 வயது வித்தியாசம் பார்ப்போமா?

இதுகுறித்தெல்லாம் நாம் எங்கு பேசுகிறோம்? எங்கு விவாதிக்கிறோம்? இதற்கும் நம் சமூக கட்டமைப்புக்கும் என்ன தொடர்பு? இதனால் ஒரு சமூகம் அடையும் நன்மைகள், தீமைகள் என்னென்ன? இவைகளெல்லாம் ஒரு சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது?
விரிவாக பேசியிருக்கிறேன். சில சமயங்களில் மேலதிக உண்மைகளை கண்டுணர நமது பார்வைக்கோணத்தை மாற்ற வேண்டி இருக்கிறது. மேலே சொல்லப்பட்ட இரண்டு சாம்பிள்களிலேயே எத்தனை எண்கள் வந்துவிட்டன பாருங்கள்? 1990, 1981, 2-3 எட்ஸெட்ரா, எட்ஸெட்ரா..

ஆம். மேதமேடிக்கல் ஃபிக்ஷனாக பேசியிருக்கிறேன். வாசித்துப்பாருங்கள் எனது புதிய நாவல் “உங்கள் எண் என்ன?”.
வாசித்துவிட்டு கண்டிப்பாக உங்கள் விமர்சனத்தை எனக்கு எழுதுங்கள்..

இந்த நூல் எதிர்வரும் புத்தக திருவிழாவில் காவ்யா பதிப்பக அரங்கில் கிடைக்கும்.

காவ்யா பதிப்பகம்
16, இரண்டாம் குறுக்குத்தெரு
ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம்
சென்னை – 24
ph: 9840480232, 044-23726882

நட்புடன்,
ராம்ப்ரசாத்
Series Navigationதிரையிலும் மறைவிலும் பாதி உண்மையாகிப்போன கலைஞர் ஓம்புரிகொதிக்கிறது மக்கள் வெள்ளம்
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *