தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 நவம்பர் 2018

உயிரோட்டம்

பிச்சினிக்காடு இளங்கோ

 dinamalar Elango(1)

  பெளர்ணமியாய்

  பவனி எனினும்

  குகைக்குள் கொஞ்சம்

  அமாவாசை

 

  இதை

  மறந்தும்; மறைத்தும்

  நடிக்கும் பாத்திரமாய்

  பகல் இரவு

 

  முழு பூசணிக்காயை

  மறைக்க முடிவதைப்போலவே

  முழுநிலவாய் காட்டிக்கொள்வதும்

 

  சிலர்

  நிலவென்று சிலாகித்தனர்

  சிலர்

  இருளென்று ஆர்ப்பரித்தனர்

 

  தவிர்க்க முடியாத

  மதிப்பீடுகளோடுதான்

  தரையிறங்கி

  கால் பதித்து

  கைவீசி

  குரலெழுப்பி

  சுற்றத்தொடங்குகிறது

  அல்லது

  தொடங்கியச்சுற்று

  முடிகிறது

 

(6.2.2017 மாலை 5 மணிக்கு)

 

Series Navigationசூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறதுவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 5

Leave a Comment

Archives