உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 10 of 16 in the series 9 ஜூலை 2017

 

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

+++++++++++++

[85]

மத வெறுப்பாளி யோடு மது விளையாடும், என்

மதிப்பு அங்கியைப் பறிக்கும் முழுதாய், மது

விற்போர் வாங்குவது எதுவென வியப்பேன் நான்.

விற்றதில் பாதிக்குடி வெகு முக்கியச் சரக்கு.

[85].

And much as Wine has play’d the Infidel,
And robb’d me of my Robe of Honor – well,
I often wonder what the Vintners buy
One half so precious as the Goods they sell.

[86]

ஐயோ வசந்தம் கடந்து செல்லும் மலருடன்;

வாலிப நறுமணச் சுவைப்பு முடிவடையும்;

மரக்கிளையில் அமர்ந்துள்ள குயில் பாடும்;

எங்கு பறக்கும், என்று மீளும், எவர் அறிவார் !

[86]

Alas, that Spring should vanish with the Rose!
That Youth’s sweet-scented Manuscript should close!
The Nightingale that in the Branches sang,
Ah, whence, and whither flown again, who knows!

[87]

ஆயினும் பாலைவன ஊற்று தன் ஒளிமுகம்

காட்டுமா – மெய்யாய் மங்கித் தெரியினும்

மயங்கிய பயணி செல்வது எப்பசுஞ் சோலை;

திராட்சை மிதிப்பொலி கேட்கும் தளத்துக்கு.

[87]

Would but the Desert of the Fountain yield
One glimpse – If dimly, yet indeed, reveal’d
To which the fainting Traveller might spring,
As springs the trampled herbage of the field!

+++++++++++++++++++++++++

Series Navigationகவிதைகள்‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *