தி. சுதேஸ்வரி
முன்னுரை
பெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போh;க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம்
ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை மதம், சாதி, இன கலாச்சார பண்பாடுகள் அனைத்துமே பெண்களுக்கு எதிரான நிலையைத் தோற்றுவிக்கின்றன. உடல், உளம், உணர்வு நிலை, மொழி வயப்பட்ட அதன் கருத்தியல், இருப்பு என ஒரு பெண்ணின் அத்தனை கூறுகளையும் இயக்கும் சூத்திரதாயாக ஆண்மையக் கோட்பாடே செயற்பட்டது. இக்காலப் பகுதியில் பெண்கள் தாம் அடிமைப்பட்டு கிடக்கின்றோம் என்னும் உணர்வின்றிப் பெண்கள் அதிகார மையத்துக்கு உட்பட்டு அடங்கி ஒடுங்கி நசுங்கி வாழ்ந்தனா;.
ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகவும், பெண்கல்வியின் தாக்கத்திலும் சமூகப் பொருளாதார, மத, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் பெண் மீதான மரபுசார்ந்த சமூகக் கட்டுமானம் தகா;க்கப்பட்டுப் பெண், பெண்ணியம், பெண்ணுரிமை குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபை 1975ம் ஆண்டை மகளிர் ஆண்டாக அறிவித்ததையும் 1975 தொடங்கி 1985 வரையான பதினொரு ஆண்டுகளை அனைத்துலக மகளிh; ஆண்டாகக் கருதலாம்.
ஈழத்துப் பெண்ணிய எழுச்சி
ஈழத்துப் பெண் கவிதைகள் 1980 களுக்குப்பின், அமைப்பாலும் அனுபவ வெளிப்பாட்டாலும் மொழி நடையாலும் மாற்றம் கண்டன. இம்மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களாக ஆயுதப் போராட்டம், தமிழ்த் தேசியத்தின் எழுச்சி, பெண்நிலைவாதச் சிந்தனைக்கூடாக ஏற்பட்ட விழிப்புணா;வு, ஊடக சுதந்திரம், கல்வித் தகைமைக்கூடான தொழில்சாh; நிலையின் மீள் உருவாக்கம் போன்றவற்றைக் கூறலாம். இக்காலக்கட்டத்தில் வெளிவந்த பெண் விடுதலை, தாகம், தோழி, விளக்கு, செந்தழல், சுதந்திரப் பறவைகள், நங்கை, மருதாணி, நிவேதினி, பெண் போன்ற ஈழத்துப் பெண் சஞ்சிகைகளும், நமது குரல் (ஜொ;மனி), கண் (பிரான்ஸ்), சக்தி (நார்வே) போன்ற புகலிடப் பெண்நிலைவாதச் சஞ்சிகைகளும், பெண்ணியக் கருத்துக்களை உள்வாங்கி வெளிவந்ததுடன் ஆளுமைமிக்க பெண்ணிலக்கியப் படைப்பாளிகளையும் ஈழத்திலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தன.
ஈழத்துப் பெண்ணியப் படைப்புகள்
சொல்லாத சேதிகள் சுவட்டில் வெளியான „மறையாத மறுபாதி… பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆணாதிக்க வழி வந்த பழமைக் கோட்பாட்டின் வகுப்புவாத ஏற்றத்தாழ்வுகளையும் எழுந்தமுகமாக மறையாத மறுபாதி பெண்ணுரிமை, பேச்சு சுதந்திரம், எழுத்துச்சுதந்திரம், ஆணாதிக்க எதிர்ப்பு, சீதனக் கொடுமை முதலான இன்னோரன்ன விசயங்களையும் பேசுகின்றன. உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் அதிலிருந்து விடுதலையும் விளக்கி நிற்கும் இன்நூல் பெண்ணியக் கருத்துகளினூடாகப் பெண் மன உணா;வுகளையும், அதன் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
தமிழகத்திலிருந்து முதன்முதலில் வெளிவந்த இலங்கை, இந்தியப் புலம்பெயர் பெண் கவிஞா;களின் தொகுப்பாக பறத்தல் அதன் சுதந்திரம்… காணப்படுகிறது. சமூக மறுதலிப்பும் நிராகரிப்பினூடாக எழும் வலியும் ஆற்றாமையின் துயரங்களாக இத்தொகுப்பெங்கும் விhpந்து செல்கின்றன.
மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளைப் பெண்மொழிக் கூடாக வெளிப்படுத்திய தொகுப்புகளில் மிகச்சிறந்த தொகுப்பாக இசை பிழியப்பட்ட வீணை… கருதப்படுகிறது. ஆளும் வர்க்கத்தினராலும், அரசியல்வாதிகளாலும் முதலாளிமக்களாலும், உடல், உள, பொருளாதாரரீதியில் சுரண்டப்பட்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட மலையக மக்களின் வாழ்வியல் அவலங்களை மென்னுணா;வுத் தளத்தில் வெளிப்படுத்தும் இந்நூல் அம்மக்களின் பண்பாட்டு, கலாச்சார வாழ்வியல் அம்சங்களையும் எடுத்துரைக்கிறது.
ஈழத்தின் போராட்டச் சூழலில் பெண்களின் அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய தொகுப்பாக எழுதாத உன் கவிதை… போராளிகளின் போரியல் வாழ்வையும் போருக்குள் வாழ்பவரின் வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் எடுத்துரைக்கின்றன.
பெண்ணிருப்பின் அடையாளத்தை வெளிப்படுத்தி நிற்கும் பிறிதொரு தொகுப்பான பெயல் மணக்கும் பொழுது…, ஈழத்தில் யுத்தம் உக்கிரமடைந்த காலகட்டடத்தில் அதன் அகோரத்தையும், அதன் விளைவுகளையும் போhpன் வன்முறைக்கூடாக வெளிப்படுத்தும் இத்தொகுப்பு ஈழத்து நவீனக் கவிதையின் வீச்சைப் புடமிட்டுக் காட்டுகிறது. பெண்ணுடல், மனம், அவள் அகப்புற அனுபவங்கள், அவ்வனுபவங்களுக்கூடாக விளையும் உணர்வுகள் கிளர்ச்சிகள் என்பனவற்றைக் காட்சிப்படுத்துகிறது.
1990களின் பின் தனித்துவ அடையாளங்களுடனும், ஆளுமைகளுடனும் ஈழத்தில் வெளிவந்து கவிஞர்களின் தொகுப்புகளாக வானதியின் கவிதைகள் (1990), கஸ்தூhpயின் ஆக்கங்கள் (1992), பாரதியின் கதாதோடு சொல்லிவிடு (1992), சிவரமணி கவிதைகள் (1993), தூயவளின் நிமிர்வு (1993), சுல்பிகாவின் விலங்கிடப்பட்ட மானிடம் (1995), உயிர்த்தெழல் (2001), செல்வி-சிவரமணி கவிதைகள் (1997), ஔவையின் எல்லை கடத்தல் (2000), ஆழியாளின் உரத்துப் பேச (2000), துவிதம் (2006), நாகபு+சனிகருப்பையாவின் நெற்றிக்கண் (2001), தாளமினியின் உதயத்தை தேடி (2002), மைதிலியின் இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் (2003), மைத்ரெயின் கல்லறை நெருஞ்சிகள் (2004), அனாhpன் ஓவியம் வரையாத தூhpகை (2004), எனக்குக் கவிதைமுகம் (2007), உடல் பச்சைவானம் (2009), அம்புலியின் மீண்டும் துடிக்கும் வசந்தம் (2004), ஆதிலட்சுமி சிவகுமாரின் என்கவிதை (2000), பஹீமா ஜஹானின் ஒரு கடல் நீருற்றி (2007), அபராதி (2009), ஆதித்துயா (2010), பெண்ணியாவின் என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை (2006), இது நதியின் நாள் (2008), ரஞ்சனி கவிதைகள் (2005), மலராவின் புதிய இலைகளால் ஆதல் (2009), வி.கலைமகளின் முடிவில்லாப் பேச்சுக்கள் (2007), யோகார்த்திகாவின் ஆணிவேராகிடுமோ நளாயினி தாமரைச் செல்வனின் நங்கூரம் (2005) போன்றவ்றறைக் கூறலாம். தொகுப்புகள் வெளிவரா நிலையில் சிற்றிதழ் ஊடாகவும் இணையத்தளங்கள் ஊடாகவும் அடையாளம் காணப்பட்டு தனி முத்திரை பதித்த கவிஞர்களாகப் பிரதீபா தில்லைநாதன் தான்யா, துர்க்கா, ராசு, கலா ஆகாயா, உருத்திரா, வினோதினி, தமிழ் நதி, ரபீக்கா, உலகமங்கை, லானா, ஏ.க.விஜயலட்சுமி சேகா (சினேகா) தில்லை, ஜெயந்தி தளையசிங்கம், கற்பகம், யசோதரா, யாழினி, ரேவதி, நிவேதா, கமலாவாசுகி போன்றோரைக் குறிப்பிடலாம்.
இதழ்களின் பங்களிப்பு
ஈழத்துப் பெண்கவிதை பிரதான படைப்பியல் தளமாக மூன்றாவது மனிதன், சாருநிகா, யாத்ரா, வெளிச்சம், சுதந்திரப் பறவை, கலைமுகம், களம் ஞானம், மறுபாதி, கவிதை, ஜுவநதி போன்ற சிறு சஞ்சிகைகளும் வீரசேகர், தினக்குரல், சுடர்ஒளி, ஈழநாதம் போன்ற வாரப் பத்திரிகைகளும் களம் அமைத்துக்கொடுதன.
போர் எதிர்ப்புக்குரல்
மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிh;த்து போராடுவது மனிதனின் இயல்பு. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போhpன் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், 2வது பாதிக்கப்படுவதும் பெண் என்ற கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிகப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும் போர்க் காலங்களில் பெண்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட கொடுமைகளைச் செய்வது அன்று முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா போர்களிலும் இந்நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.
மழலைகளையும் முட்களையும் ஒன்றாகப் புதைத்து மூடிய குப்பை மேடுகளுடன் என் தேசம் பிணக்காடாகும் நாளை மனிதர்கள் நடக்கவுள்ள தெருக்களில் தேசியக் கொடிகள் மட்டுமே மிஞ்சிக் கிடக்கும் ஆயிரக் கணக்கான இந்தச் சமாதிகளிடமா விடுதலையைக் கொண்டாட முடியும்? விட்டு வையுங்கள் யாராவது ஒரு மனிதனையாவது விட்டு வையுங்கள் யுத்தத்தால் அழிந்து போன எனது மண்ணையற்றி எழுதக் குருதி நிரம்பிய பேனாவையும் மனித நேயத்தை உணா;த்த விட்டுவையுங்கள்”
என்பதாக அமைந்துள்ள வார்கள் போரைத் தமிழ் மக்கள் மீது திணித்தவாகளின் மீதான கோபத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
உன்னத வாழ்வு இனம் மதம் பால் அடிப்படையின் கீழ் இக்கணத்தில் இருந்து நிh;ணயிருக்கப்படும் உன் காலங்கள் அக முகாம்களிலோ ஆயுதங்களுடன் பயிற்சி முகாம்களிலோ நாங்கள் வாழ்வதற்கான அர்த்தத்தைத் தொலைத்துப் பல நாட்கள் ஆகின்றன எங்களிடம் பகிர்ந்து கொள்ள நம்பிக்கைகளோ வசந்தங்களோ இல்லை நீ உறங்கிக் கொண்டிருக்கும் இப்பரப்பில் எக்கணமும் குண்டுகள் வீசப்படலாம் என்பதே இப்போதெல்லாம் உண்மை” என்று ஈழத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் எத்தனையோ ஆயிரம் தாய்மாh;களின் உள்ளக்குமுறலை, பதட்டத்தை இக்கவிதை வெளிப்படுத்தியுள்ளது.
பெண் எதிர்ப்புக் குரலினைக் கவிநயத்துடன் வெளிப்படுத்தும் சண்முகம் சிவலிங்கத்தின் ஆலம் இலை… என்ற கவிதையும், பெண் உழைப்பினை சிறப்புற வெளிப்படுத்தும் நுமானின் இலைக்கறிக்காhp…யும், யோகராசாவின் நல்லம்மாவின் நெருப்புச் சட்டியும் குறிப்பிடத்தக்க கவிதைகளாகும்.
அறுபதுகளில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞருள் முதன்மையானவா;களுள் ஒருவராக விளங்குபவா; தா.இராமலிங்கம் அவர்கள். யாழ்ப்பாணச் சமூகப் பண்பாட்டின் மூடுதிரையினையும் பெண்களது வாழ்வின் அவலங்களையும் ஆக்ரோஷத்துடனும் யதார்த்தப் பாங்கில் வெளிப்படுத்தியவர் எவருமிலர் புதுக்கவிதைகள் எழுபதுகளில் ஈழத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலக்கட்டத்தில் வ.ஐ.ச ஜெயபாலன், சிவசேகரம், சௌமினி ஆகியோர் புகழ் பெற்றவராவர்.
ஈழத்துக்கவிஞருள் பெண்கள் பற்றி பெண்ணடிமை நிலை, பெண்விடுதலை பற்றி அதிகம் சிந்தித்தவா; சிவசேகரமே. இவருடைய கவிதைகளில் பெரும்பாலானவை எண்பதுகளுக்குப் பிற்பட்டவை. இவாpன் மூன்று கவிதைகள் மலையகப் பெண்கள் விடுதலை பற்றி குன்றத்துக்கும்மி, அன்னையா முன்னனி ஊh;வம் பற்றிய தேவி எழுந்தாள், பெண் விடுதலையின் விலை போன்றவை முக்கியமானவையாகும்.
ஈழத்தில் பெண்நிலைவாதச் சிந்தனைகள் பரவுவதற்ககுரிய முன்பே பெண்களின் மன உணர்வுகளைக் கவிதைகளில் வெளிப்படுத்திய கவிஞர் சௌமின
எண்பதுகள் ஈழக்கவிதை வரலாற்றில் முக்கிய காலகட்டமாகும்.
- போனவாத ஒடுக்குமுறைக் கெதிரான குரல்.
- இனரீதியான தமிழ்த்தேசியம்.
- புகலிட அனுபவங்கள்.
- பெண் விடுதலை
போன்ற புதிய போக்குகள் காணப்படுகின்றன.
முடிவுரை
ஈழத்துபெண்கவிஞர்களின் படைப்புகள் பெண் அடிமைதனத்தை எதித்து குரல் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண்கள் தங்கள் உரிமையும் சுதந்திரத்தையும் பெறவதற்கு தூண்டுகோளாக அமைகின்றன பெண்கவிஞர்களின் படைப்புகள் மட்டுமல்லாமல் இதழ்களும் பெண்ணிய எழுச்சிக்காக பெரும்பங்கு ஆற்றியதை இக்கட்டுரை மூலம் அறியமுடிகின்றது.
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கவிதை
- ஆல்டஸ் ஹக்ஸ்லியும் அருவக் கைக் கூர் ஊசியும்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20 (முற்றும் )
- உறவின் திரிபு !
- குறிவைக்கப்படும் தலித் செயல்பாட்டாளர்கள்..
- தொடுவானம் 178. காதலே தெய்வீகக் காதலே
- காதல் நாற்பது கவிதைகள் நூல் வடிவில்
- உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கல சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.
- நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள்
- சங்க இலக்கியத்தில் மறவர்
- கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]