தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

கவிதை

Spread the love
முல்லைஅமுதன்
எனது அறையை மாற்ற வேண்டும்.
இன்னும் வெளிச்சமாய்,
காலையில்
புறாக்களின் காலைச் சத்தம்,
தெருவில்
பள்ளிச் சிறுவர்களுடன்
மல்லுக் கட்டியபடி
செல்லும் அவசர அம்மாக்கள்,
காது மடலுக்குள் செருகிய
அலைபேசியில்
இன்னும் சத்தமாக
பேசிச் செல்லும்
போலந்துக்காரன்,
பனி குஇத்து
மயங்கிக் கிடக்கும்
முற்றத்துப் பூக்களிடம்
ரகசியம்
பேசும் இலைகள்…
இன்னும்,இன்னும்,…
மனைவியிடம்
ஒருமுறை முணுமுணுத்தது..
இப்போது முடிவெடுத்திருந்தாள்..
என் அறையை
மாற்றுவதாக சொன்னாள்.
இயற்கையிடம்
நான் சொல்லியிருக்கக்கூடாது.
குருவி கத்தியுடன் வந்து நிற்கிறது.
கனவு பயங்காட்டியது.
பள்ளிச்சிறுவர்கள்,அவர்களுடன் செல்லும்
அம்மாக்களின் சத்தம்
தேய்ந்து தூரமாய்..
அந்நியமாகியது போலிருந்தது..
காலை சிந்திய குருதியில்
பறவைகள்
குற்றுயிராய் கிடந்தது மாதிரி
பிரமையா?
மீண்டும்
மனைவியிடம்
அறையை
மாற்றுவது பற்றி
மறு பரிசீலனைசெய்யும் படி..
சட்டதிருத்தம்
எதுவும் நடைபெறவேயில்லை.
இப்போது எனது அறையில்
கனவுகளுடன்,
கவிதைகளும் இல்லை.
12/07/2017
Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்ஆல்டஸ் ஹக்ஸ்லியும் அருவக் கைக் கூர் ஊசியும்

Leave a Comment

Archives