அவள் ஒரு பெண்

This entry is part 11 of 12 in the series 10 செப்டம்பர் 2017

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++

 

எனக்குப் பரிசெதுவும் தருவ தில்லை

என்னினிய காதலி !

நாட்டுப் புறத்து நங்கை இல்லையென

நான் அறிவேன்.

என்றென்றும் அன்பை அள்ளித்

தருபவள் அவள்.

எனக்குப் பரிசு தரமாட்டாள்

என் காதலி !

தனிமையில் வாடினால் என்னைத்

தாலாட்டுவாள் அவள் !

பாசாங்கு செய்கிறாள் என்பார்

பக்கத்தில் இருப்பவர்.

அப்படி அவள் இல்லை என்று

அறிந்தவன் நான்.

தன்னை ஓர் ஆடவன் உற்று நோக்க

இடம் தராதவள் !

நான் அழுவதைப் பார்த்தால்

மனம் உடைவாள் !

பூரித்து போவாள் நானவளை

ஒருபோதும்

பிரிய மாட்டேன் என்றால் !

எனக்குப் பொறாமை உண்டாக்கத்

துணியாதவள்.

என்னைப் புரிந்து கொண்டவள்;

தன் காதலனை மட்டும்

என்றும் நேசிப்பவள்.

தன் காதலை, நேரத்தை எல்லாம்

தருவது எனக்குத் தான்  !

ஏனென்று கேட்காதே !

 

+++++++++++++++++++++++

Series Navigation”குகைமனிதர்”களது உணவுப்பழக்கம் என்று பிரபலப்படுத்தப்படும் பேலியோ உணவு பழக்கம் ஆபத்தானது என்று உடல்நல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.“நீட்”டாய் தெரியும் அசிங்கங்கள்…
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *