தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

21 ஜனவரி 2018

நான் நானாகத்தான்

வளவ.துரையன்

நான் கைவிட்ட காதலி
வேறொருவனுடன்
குடும்பம் நடத்துகிறாள்

வேண்டாமென்று
ஒதுக்கப்பட்ட நண்பன்
பணக்காரனாகி எல்லார்க்கும்
உதவி செய்கிறான்

சண்டை போட்டு விரட்டப்பட்ட
அப்பாவும் அம்மாவும்
சின்னவனோடு
சௌக்கியமாக இருக்கிறார்கள்

ராசியில்லையென நான்
விற்ற வீட்டில் இப்போது
குடும்பமொன்று வளமாக இருக்கிறது

எல்லாம் நல்லபடி இருந்தும்
இன்னும்
நான் நானாகத்தான் இருக்கிறேன்

Series Navigationதொலைந்த கவிதைநேற்றைய நாளுக்கு ஏக்கம் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

Leave a Comment

Insider

Archives