உறவு என்றொரு சொல்……

This entry is part 6 of 11 in the series 3 டிசம்பர் 2017

fabஒரு பந்து போனால் இன்னொரு பந்து;
ஒரு பம்பரம் போனால் இன்னோன்று.
ஒரு சொப்பு போனால் இன்னொரு சொப்பு;
ஒரு பொம்மை போனால் இன்னொன்று.
குழந்தைகளைப்போல சில பெரியவர்களுக்கு உறவுகள்……
ஒரு கிச்சா போனால் இன்னொரு கிச்சா;
ஒரு மச்சான் போனால் இன்னொரு மச்சான்.
மிச்ச சொச்ச உறவுகளும் கிடைக்கும் சந்தைகளும் உண்டு.
நீத்தாருக்காக அழ நேரமில்லை.
நினைவைத் தொழுவது நவீனத்துவமில்லை.
முகநூல் பக்க ‘முக்கிய நிகழ்வுகள்’ பகுதியில்
மூவேழுலகமும் காண ‘I am in a relationship’ என்று
பதிவிட்டிருக்கும் வளர்(ந்த) இளம் பெண்ணொருத்தி
இன்னமும் அதை எடுத்தபாடில்லை.
கரடி பொம்மையுடனான உறவைச்சொன்னேன் எனலாம்….
காற்றுடன் உறவாடுவதாகக் கவிதை பேசலாம்.
அம்மாவைச் சொன்னேன் எனலாம்;
அந்தராத்மாவை எனலாம்……
ஆனாலும்
வாரணமாயிரம் சூழ வரிச்சங்கம் முழங்க
ஆண்டாளைக் கைத்தலம் பற்ற வரும் நம்பி
யிதைக் காணநேர்ந்து அவன் நம்பிக்கை
நிலைகுலைந்துபோகும்படியாகுமோ
என்றெண்ணி நெஞ்சழிவது
இங்கே
வேண்டாத பழமைவாதமாகலாம்……..

Series Navigationமெனோபாஸ்நந்தினி
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *