தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 டிசம்பர் 2017

வாழ்க்கைப் பந்தயம்

அமீதாம்மாள்

தடை தாண்டும்
ஓட்டமாய்
வாழ்க்கைப் பந்தயம்

கடந்த தடைகள்
கணக்கில்லை

துல்லியம்
தொலைத்த விழிகளுக்கு
துணைக்கு
வந்தது கண்ணாடி

ஒலிகளைத்
தொலைத்த செவிகளுக்கு
துணைக்கு
வந்தன பொறிகள்

‘லப்டப்’பில் பிழையாம்
‘வால்வு’ வந்ததில்
வாழ்க்கை வந்தது

சில எலும்புகளின்
வேலைக்கு
எஃகுத் துண்டுகள்

இனிப்போடும்
கொதிப்போடும்
இருந்தே போராட
மருந்துகள்

நீள்கின்றன தடைகள்
தள்ளாடும் கால்களைக்
கவ்வுகிறது பூமி
புதைகிறேன்

எரியப்பட்ட கல்
மூழ்கிவிட்டது
வட்ட வட்ட அலைகள்
மறைந்துவிட்டது
அசையாமல்
கிடக்கிறது குளம்

அமீதாம்மாள்

Series Navigationதொடுவானம் 198. வளமான வளாகம்நீயே சிந்தித்துப்பார் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

Leave a Comment

Insider

Archives