தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 ஜனவரி 2018

“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு

சி. ஜெயபாரதன், கனடா

அன்புள்ள திண்ணை வாசகர்களே !

எனது புதிய நூல் “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு இப்போது தாரிணி பதிப்பக வெளியீடாக அதிபர் திரு  வையவன்  வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ?  அல்லது தாறுமாறாகத் தானாக உருவான வடிவா ?  காரண – விளைவு நியதிப்படி பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பு என்பது திண்ண மாகிறது.  படைப்பாளியை நம்பாத விஞ்ஞானிகள், நாத்திகர் பிரபஞ்சம் தானாக உருவானது, உயிரினங்கள், மனிதம் உட்படத் தாமாக தம்மை உற்பத்தி செய்து வருகின்றன என்ற கோட்பாடை வலியுறுத்தி வருகின்றன.  ஆனால் சூரிய குடும்பத்தின் எட்டு / ஒன்பது கோள்களில் உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான வசிப்பு நிலை உள்ள பூமியில் மட்டும் உயிரினத்தில் ஒப்பற்ற மானிடம் ஏன் சீரமைப்போடு ஆறறிவு கொண்டு பிரபஞ்ச அமைப்பை உளவி, ராக்கெட் சாதனம்போல் உன்னத வாகனத்தையும், உயர்ந்த கூரிய மின்னியல் கருவிகளையும், நூதனக் கணினி களையும் தயாரித்து விண்வெளிக்குத் தாவி நிலவில் தடம் வைத்துச் சாதனை புரிந்து உள்ளது ?  அடுத்ததாக 2020 -2025 ஆண்டுகளுக்குள் செந்நிறக்கோள் செவ்வாயில் மனிதர் நடமாடப் போகிறார். 

கற்றதனால் பெற்ற பயன் ஏது படைப்பாளி

​அற்புதத்தைக் காணாத போது ?​

மாவிந்தைகள் புரியும் மானிட மகத்துவ மூளை தானாக உருவான தென்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  எல்லா வளமும், வசதியும், வாழ்வினங்களும், பல்லாயிரம் ஆண்டுகளாய்த் தொடர்ந்து வரும் பூமி தானாக உருவானது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பிரம்மாண்ட இந்தப் பிரபஞ்சம், அதில் பெருகி வரும் கோடான கோடி ஒளிமந்தைகள், நமது சூரிய குழுமம் போன்று கோடான கோடி விண்மீன் சந்தைகள் தானாக உருவாயின என்பதை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.  அவை யாவும் திட்டமிட்டுப் படைக்கப் பட்டவை என்னும் அழுத்த மான கருத்தே, மெய்யாக ஒப்புக் கொள்ளும் காரண – விளைவு இயற்கை முடிவாகத் தெளிவாகிறது.

உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டுபிடிக்க முடியாதபடி மாபெரும் மெய்க்கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.

ஸர் ஐஸக் நியூட்டன் 

ஓர் அப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஓர் பிரபஞ்சம் உண்டாக்கப் படவேண்டும்.

அகிலவியல் விஞ்ஞானி கார்ல் சேகன்.

அகிலத் தூசி சேர்ந்து துகளாகி, துகள்கள் மண்ணாகி, மண் கட்டியாகி உருண்டு சிறு கோளாகி முடிவாக ஓர் பெரும் அண்டகோள் ஆனது!

இந்த “ஈர்ப்புத் திரட்சி முறையில்” (Accretion Process) 6 மைல் (10 கி.மீ.) விட்ட அளவுள்ள ஒரு சிறு பூமி உண்டாகச் சுமார் 100 மில்லியன்ஆண்டுகள் ஆகலாம்.

பிரம்மாண்டமான, மகத்தான, மர்மமான, பெரும் புதிரான நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ? எப்படித் துவங்கியது ? அது எத்தனை பெரியது ? பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன்பு எதுவும் இருந்ததா ? எப்போது தோன்றியது பிரபஞ்சம் ? எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது ? காலம் எப்போது ஆரம்பித்தது ? காலக் கடிகாரத்தின் வயதென்ன ? சூரியனின் வயதென்ன ? பூமியின் வயதென்ன ? நிலவு எப்போது, எப்படித் தோன்றியது ? கோடான கோடி விண்மீன்கள் கொண்ட காலக்ஸி என்னும் ஒளிமந்தைகள் எப்படி உருவாயின ? நமது சூரிய மண்டலத்தின் கோள்கள் ஒன்பதா அல்லது பத்தா ?

பிரபஞ்சம் எதிலிருந்து, எப்படி உருவானது என்னும் கேள்விக்கு விஞ்ஞானிகள் இன்னும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடையைக் கூற முடியவில்லை என்பது என் கருத்து. படைப்பா அல்லது பரிணாமமா ? திட்டமிட்ட படைப்பா ? அல்லது தாறுமாறாய் உண்டான சுயத் தோற்றமா ? டார்வின் எழுதிய பரிணாமக் கோட்பாடு உயிரினத் தோற்றத்தையோ அதன் விருத்தியையோ, மாற்றத்தையோ ஆரம்பம் முதல் முழுமையாக விளக்கவில்லை. டார்வின் விஞ்ஞானம் உயிர் என்பது என்ன வென்று எங்கும் கூற வில்லை. உயிரற்ற வெற்றுக் கூடுகளைப் பற்றியும் அவற்றின் வளர்ச்சி, விருத்தியைப் பற்றியும் அவரது பரிணாமம் சிறப்பாக விளக்குகிறது.

பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறினாலும், கடவுள் படைத்தது என்று ஆன்மீக மதவாதிகள் கூறினாலும் இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுதான். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விளக்கி, இதுவரை எழுதிய யூகிப்புக் கோட்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் மாறி வருகின்றன. பிரபஞ்சம் எப்படி இறுதியில் முடிவாகப் போகிறது என்பதும் யூகிப்புக் கோட்பாடாகவே இருக்கிறது. பிரபஞ்சத்தின் பல புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால் ஒன்பது புதிர்கள் முளைக்கின்றன.

இப்புதிர்களுக்கு எனது கட்டுரைகளில் விடை பூரணமாகக் கிடைக்கலாம். அரைகுறையாகக் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். வானியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் ஒரு விஞ்ஞானத் துறை. பெருவாரியான புதிர்களுக்கு விடை கிடைக்க இன்னும் நெடுங்காலம் ஆகலாம். புதிய கருவிகள் படைக்கப் பட்டு, கண்டுபிடிப்புகளும் உண்டாகி முன்பு மெய்யாகத் தோன்றியவைப் பின்னால் பொய்யாக நிரூபிக்கப் படலாம். குறிப்பாக இப்போது விண்வெளியைச் சுற்றிவரும் ஹப்பிள் தொலைநோக்கி பல அரிய விண்வெளிக் காட்சிகளைத் தொடர்ந்து ஆராயத் தந்திருக்கிறது.

எனது அண்டவெளி நிகழ்ச்சி விஞ்ஞானக் கட்டுரைகள் 2002 முதல் 2017 வரை திண்ணை.காம், வல்லமை.காம் வலையிதழ்களில் வெளிவந்தவை. திண்ணை.காம் வலை அதிபர்கள் ராஜாராம், துக்கராம், வல்லமை நிர்வாகிகள் அண்ணாகண்ணன், பவளசங்கரி ஆகியோருக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். அடுத்து பிரபஞ்ச மர்ம நூல் முதற்தொகுப்புக்கு மதிப்புரை எழுதிய விஞ்ஞானி தேமொழிக்கு, என் நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இந்த விஞ்ஞான நூலைப் பேரார்வத்துடன் சிறப்பாக வெளியிட்ட நண்பர் வையவனுக்கு எனதினிய நன்றி உரியதாகுக.

சி. ஜெயபாரதன்,
கின்கார்டின், அண்டாரியோ
கனடா
நூலின் பக்கங்கள் : 352
விலை : ரூ 500.
கிடைக்குமிடம் :
Dharini Pathippagam,
32/79 Gandhi Nagar,
4th Main Road
Adyar, Chennai : 600020
Mobile : 99401 2034

Series Navigationகண்ணீர் அஞ்சலி !மௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்

One Comment for ““பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு”

 • சி. ஜெயபாரதன் says:

  Please see the missing part of Vol II :

Leave a Comment

Insider

Archives