தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 டிசம்பர் 2018

இரண்டாவது கதவு !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

பொய்த்துப் போகும்
வானிலை அறிவிப்பு
வேலை கிடக்காமல் போன
நேர்காணல்
பிரசுரமாகாத கதை
படிக்காத பிள்ளை
தந்தையை அடிக்கும் மகன்
குழந்தையைக் குப்பைத் தொட்டியில்
போட்டுப் போகும் தாய்

வீண் செலவு வைக்கும் மருத்துவர்
விருதே பெறாத இலக்கியவாதி
பாடம் நடத்தாத ஆசிரியர்
எனப் பலநேரங்களில்
நம் எதிர்பார்த்தலின்
இரண்டாம் கதவு
அடிக்கடி திறக்கிறது
ஒவ்வொருவருக்கும் …

இரண்டாம் கதவைத் திறக்கும்
கரம் யாருடையது ?
பதில்கள் எதிரெதிர் கோணத்தில் …

சிலருக்கு வாழ்க்கைப் பயணம்
ரோஜாப் படுக்கை
சிலருக்கு முட்படுக்கை

” அனுபவங்கள் சேரச் சேர நான்
மௌனியாகிறேன். ” என்றார் ஒருவர்
நாமும் அடிக்கடி
மௌனத்தில் கரைகிறோம்
பற்களைக் கடித்த வண்ணம் !…

Series Navigationநூல்கள் வெளியீடு:மூன்று கவிதைகள்

Leave a Comment

Archives