பிரிட்டனில் பேய்மழை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 14 of 20 in the series 25 பெப்ருவரி 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

மழை வந்தால் ஓடி ஒளிகிறார்

தலை காக்க குடை தேடுறார்.

மழை வந்து விட்டால், இங்கே

மழை வந்து விட்டால்

மரணம் வருவது மேலானது !

வெய்யில் அடித்தால் மனிதர்

மர நிழல் தேடுவார்.

குளிர்பானம் குடிப்பார் !

வெய்யிலில் காய்ந்தால், நான்

வெய்யிலில் சாய்ந்தால்

பெய்யும் மழை பொறுப்பேன் !

கதிரோன் பொழியும் வெய்யிலா,

காலநிலை இனியது !

எப்போது மழை பெய்யுமென

தப்பாது காட்டுவேன் !

எல்லாம் ஒரு மாதிரி யாக

இருப்பது தெரியுது.

மழைக்குக் கவலைப் படேன்.

கதிரோன் கடும் வெய்யிலா

காலநிலை இனிதே !

கேட்குதா நான் சொல்வது ?

மழை பொழியுதோ, வெய்யில் எரிக்குதோ

மன உணர்வு தான் அது !

சொல்வது புரியுதா ?

Series Navigationவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும்,  அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *