தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

நிலாச் சிரிப்பு

குமரி எஸ். நீலகண்டன்

நாளுக்கு நாள்

கூட்டிக் குறைத்து

சிரித்தாலும்

வாயை அகல

விரித்து சிரித்தாலும்

பிறையாக

வளைத்து சிரித்தாலும்

முகம் முழுக்க

விரிய சிரித்தாலும்

மற்றவர்கள் நம்மோடு

சிரித்தாலும்

சிரிக்காமல்

புறக்கணித்தாலும்

சிரிப்பானது

எல்லோருக்கும்

குளுமையாக்த்தான்

இருக்கிறது.

 

சதா புன்னகைத்துக்

கொண்டே இருக்கும்

நிலவை பார்த்துத்தான்

சொல்கிறேன்.

Series Navigationவெளியே வானம்தேனம்மை லட்சுமணன் கவிதைகள்

Leave a Comment

Archives